Monday, February 28, 2011

ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்! - பசலை கீரை


மார்ச்.1:பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம் .

பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் செந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.

தரைப் பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ் சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.

இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.

ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது. இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.

இந்த கீரையில் வைட்டமின் A, B C சத்துகள் உள்ளது. சுண்ணாம்பு சத்து நார் சத்து இரும்பு சத்து அடங்கியது. இது தாதுவை கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும். உடல் வரட்ச்சியை அகற்றும். உள சூட்டை போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன. பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.

ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.

இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.

ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.

இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும். இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும். பசலை கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்!
source:tamilheritage---> பாலைவனத் தூது

கடைசி மூச்சு வரை போராடுவேன் - யெமன் அதிபர்

ஸன்ஆ,மார்ச்.1:மக்கள் கொந்தளிப்பை புறக்கணித்துவிட்டு பதவியில் தொடரும் யெமன் நாட்டு ஏகாதிபத்திய அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் கடைசி மூச்சுவரை போராடுவேன் என அறிவித்துள்ளார்.

ஜனநாயக எதிர்ப்பு போராட்டத்தை எதிரிகள் தங்கள் வசப்படுத்தியுள்ளனர். நாட்டை துண்டாடுவதுதான் அவர்களின் நோக்கம் என ஸாலிஹ் ராணுவ கமாண்டர்களிடம் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் முக்கிய பழங்குடியினத்தவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். ஸாலிஹின் ஆளுங்கட்சிக் கூட்டணியிலிருந்து சில பழங்குடியின தலைவர்கள் நேற்று முன்தினம் ராஜினாமாச் செய்துள்ளனர். ஆனால், அதிகாரத்தை ஒப்படைப்பதை அங்கீகரிக்க முடியாது என ஸாலிஹ் அறிவித்துள்ளார்.

யெமன் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் தொடரும் ஸாலிஹின் ஆட்சியில் மக்கள் வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். அந்நாட்டில் சராசரி தின வருமானம் 2 டாலராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஒமானில் 3-வது நாளாக தொடரும் போராட்டம் - 6 பேர் பலி

மஸ்கட்,பிப்.28:தொழில் நகரமான ஸோஹாரில் அரசுக்கெதிரான போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நொறுக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசும், கலவரத் தடுப்பு படையும் நடத்திய துப்பாகிச்சூட்டில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். இரண்டு நாளாக அமைதியான முறையில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது எனவும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கெதிராக பலம் பிரயோகிக்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ செய்தி ஏஜன்சி உறுதிச் செய்துள்ளது.

முகமூடி அணிந்த இளைஞர்கள்தாம் தாக்குதல் நடத்தியதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர். போலீஸ் மற்றும் மஜிலிஸுஸ்ஷூராவின் உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.

ஸோஹாரில் கவர்னரின் அலுவலகம், நகராட்சியின் தொழில்நுட்ப அலுவலகம், போலீஸ் ஸ்டேசன், லேபர் அலுவலகம், ஒரு ஆயில் டேங்கர், பெட்ரோல் ஸ்டேஷன் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

மஸ்கட்-துபாய் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.ஒமானின் இரண்டாவது பெரிய நகரமான ஸலாலாவிலும் போராட்டம் பரவியுள்ளது.

ஒமானில் வரம்பு மீறிய ஊழலும், மோசமான பொருளாதார சூழலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.

ஜனநாயகம் வேண்டும்! ஷூரா கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும்!நீண்டகாலமாக ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் வெளியேற வேண்டும்! வேலை வேண்டும்! போன்ற கோரிக்கைகள் போராட்டத்தின்போது எடுத்துரைக்கப்பட்டன.

ஒமானில் அரசியல் கட்சிகள் செயல்படுவது தடைச் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் மேலும் பரவாமலிருக்க அந்நாட்டு மன்னர் காபூஸ் 6 அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.

---பாலைவனத் தூது---

அதிரையிலிருந்து முஸ்லிம் எம்.எல்.ஏ

"பட்டுக்கோட்டை தொகுதி வரலாறு" பதிவிலிருந்து கிடைத்த தகவல் மூலம் அதிராம்பட்டினம் தொகுதியை பிரித்து பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னணியில் நீண்டகால சதித்திட்டம் அல்லது நமது அரசியல் விழிப்புணர்வின்மை இருந்துள்ளது தெரியவருகிறது.

முந்தைய அதிராம்பட்டினம் தொகுதியில் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மதுக்கூர், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் முதலான ஊர்களும் இருந்துள்ளன. இவ்வூர்களிலுள்ள வாக்காளர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பது கவனிக்கத்தக்கது.

1967 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் முத்துப்பேட்டையை திருத்துறைப்பூண்டி தொகுதியுடனும்,புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களை பேராவூரணி தொகுதியுடனும் சேர்த்துவிட்டு அதிரை, மதுக்கூர் ஆகியவற்றை மட்டும் இணைத்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் நிறைந்துள்ள தொகுதியில் எதிர் காலத்தில் முஸ்லிம்களே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்ற அரசியல் கட்சிகளின் நீண்டகால சூழ்ச்சி இதில் இருக்கக் கூடும்.

சட்டமன்ற தொகுதியாகும் பட்சத்தில் அதிரைக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். நகராட்சியானால் முனிசிபல் வரிகள் அதிகம் செலுத்த வேண்டும் என்பதோடு அதிரையின் கலாச்சாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் அதிரை தொகுதியை பட்டுக்கோட்டைக்கு விட்டுக் கொடுத்ததில் நமது முன்னோர்கள் கோட்டை விட்டுள்ளனர்.

சாதிய அடிப்படையில் கள்ளர், கோணார், செட்டியார், தேவர், தலித்துகள் நிறைந்த அதிராம்பட்டினம். தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்படும் வரை பிராமனர் அல்லது தேவர் இனத்தவரே நமது சட்டமன்ற பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். அதிரை முஸ்லிம்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இவ்விரு சாதிகளும் சிறுபான்மை எண்ணிக்கையிலேயே இருந்துள்ளனர்.

மேலும், 1952-62 தேர்தல்களில் அதிரை வாக்காளர்களே வெற்றியாளர்களைத் தீர்மானித்துள்ளனர் என்பதை கீழ்க்காணும் புள்ளிவிபரத்திலிருந்து அறியலாம்.

YEAR  WINNER   RUNNER   DIFF  DIFF %
1952     21,461       15,072     6,389  30%
1957     26,785       16,995     9,790  37%
1962     31,503       26,104     5,399  17%

அதாவது, சுமார் 5000 முதல் 10,000 வாக்காளர்களின் கூடுதல் ஆதரவைப் பெற்றவரே 1952-62 வரையிலான தேர்தல்களில் வென்றுள்ளார். இது நமதூர் வாக்காளர்களில் 50% க்கும் குறைவு. அதிரை முஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத எந்தக் கட்சி வேட்பாளரும் அதிராம்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்றிருக்க முடியாத நிலையே இருந்து வந்துள்ளது.

எனினும், காங்கிரஸ், திமுக பிறகு அதிமுக ஆகிய கட்சிகளின் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களையே இதுவரை தேர்த்தெடுத்துள்ளோம்! முந்தைய அதிரை தொகுதியில்தான் இந்நிலை என்றாலும், பட்டுக்கோட்டை தொகுதி உருவான பின்னரும்கூட, சட்டமன்ற உறுப்பினரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்துள்ளனர். இதை கீழ்காணும் புள்ளிவிபரத்திலிருந்து அறிய முடிகிறது.

YEAR  WINNER   RUNNER   DIFF  DIFF %
1967     35,198       28,056     7,142  20%
1971     44,565       26,229   18,336  41%
1977     25,993       25,082        911  4%
1980     52,900       42,302   10,598  20%
1984     50,493       35,376   15,117  30%
1989     41,224       26,543   14,681  36%
1991     67,764       39,028   28,736  42%
1996     69,880       36,259   33,621  48%
2001     55,474       48,524     6,950  13%
2006     58,776       43,442   15,334  26%

காங்கிரஸ் பெருந்தலைவர்களில் ஒருவரான காமராஜருக்கும் சீனியரான  மர்ஹூம் அப்துல் அஜீஸ் காக்கா, மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக  இருந்த மர்ஹூம் M.M.S.அபுல்ஹசன் போன்ற அரசியல் பின்புலம் கொண்ட  பலர் இருந்தும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து கடந்த 60 ஆண்டுகளில் ஒரேயொரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் கிடைக்காது இப்பகுதி மக்களின் அரசியல் விழிப்புணர்வற்ற நிலையையே காட்டுகிறது.

ஆக்கம்: இப்னு நூர்
 
 

Sunday, February 27, 2011

கதாஃபி தலைமையிலான லிபிய அரசு மீது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை

நியூயார்க்,பிப்.28:ஜனநாயக ரீதியில் கிளர்ச்சியில் ஈடுபடும் போராட்டக்காரர்களை அடக்குமுறை மூலமாக நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, அதிபர் முஅம்மர் கதாஃபி தலைமையிலான லிபிய அரசு மீது தடை விதித்துள்ளது ஐநா பாதுகாப்பு கவுன்சில்.

இந்தியா உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகள் அடங்கிய இந்த அமைப்பு இந்த தடைக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது.

ஆயுத விற்பனைக்குத் தடை, கதாஃபி வெளிநாட்டுப் பயணத்துக்கு தடை, அவரது சொத்துகளை முடக்குவது உள்ளிட்டவை இந்த தடையில் அடங்கும் லிபிய அதிபர் கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து 2 வாரமாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மக்களின் எழுச்சியை தனது ஆதரவு படைகள் மூலமாக ஒடுக்கி வருகிறது கதாஃபி அரசு. அரசின் அடக்குமுறையில் சுமார் 1000 புரட்சியாளர்கள் உயிரிழந்தனர்.

கதாஃபியின் ஆட்சிக்கு முடிவு காணும் நோக்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்காவின் தூதர்கள் லிபியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது பற்றி சனிக்கிழமை தீவிர ஆலோசனையில் இறங்கினர். ஞாயிற்றுக்கிழமை காலையில் தீர்மானம் மீது பொதுக்கருத்து எட்டப்பட்டு அது ஏற்கப்பட்டது.

68 வயது கதாஃபி மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்துகளை முடக்குவது, அவர்களும் அவரது ஆட்சித் தலைவர்களும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடை விதிப்பது, ஆயுதத்தடை விதிப்பது, மனித குல அழிவில் ஈடுபட்டதாக கதாஃபி மீது ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க கோருவது உள்ளிட்டவை இந்த தீர்மானம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரி, போராட்டக்காரர்களை ஒடுக்க படைகள் பயன்படுத்தப்பட்டது ஏற்கக்கூடியது அல்ல என்றார்.

லிபியாவில் உள்ள இந்தியர்களின் உடமைக்கும் உயிருக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து இந்தியா கவலை அடைந்துள்ளது என்றார்.

லிபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது அந்த நாட்டின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். போராட்டக்காரர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை லிபியா உடனடியாக நிறுத்தவேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனது சொந்த மக்களையே படைகளை பயன்படுத்தி கொன்று குவிக்கும் கதாஃபி, ஆட்சியில் நீடிக்கத் தகுதியற்றவர் என அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கலை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்திருந்தார்.

இதனிடையே, 27 நாடுகள் அமைப்பான ஐரோப்பிய யூனியன், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை வரவேற்றுள்ளது.

கதாஃபிக்கு எதிரான இந்த தீர்மானத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவருவது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

---பாலைவனத் தூது---

மலேசியாவில் ஹிந்துத்துவா அமைப்பினர் கைது

கோலாலம்பூர்,பிப்.28:சட்டவிரோதமாக போராட்டம் நடத்திய 109 இந்திய வம்சாவழியைச் சார்ந்த ஹிந்துத்துவா அமைப்பினரை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் விவாத நூலை உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டி பேரணி நடத்திய தடைச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா அமைப்பான ஹிந்து ரைட்ஸ் ஆக்‌ஷன் ஃபோர்ஸ் உறுப்பினர்கள்தாம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்.

நகரத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக இவர்களை கைது செய்துள்ளதாக மாநகர போலீஸ் தலைவர் துல்கிஃப்லு அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்டமைப்பைக் குறித்து விவாதிக்கும் மலேசிய மொழியிலான நாவலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என்பது ஹிந்துத்துவா அமைப்பினரின் கோரிக்கையாகும். ஆனால், திருத்தத்துடன் மட்டுமே இப்புத்தகம் படிப்பதற்காக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தப் பிறகும் குழப்பம் ஏற்படுத்துவதற்காக இவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இச்சம்பவம் வருத்தத்திற்குரியது எனவும், பேரணி நடத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தபிறகும் அதனையும் மீறி செயல்பட்ட ஹிந்துத்துவா அமைப்பினர் நாட்டின் சட்டத்தை அவமதித்துள்ளார்கள் என துல்கிஃப்லு தெரிவிக்கிறார். மேலும் நாவலுக்கெதிராக போராடிய இவர்களுக்கு வேறு இந்தியர்களின் ஆதரவு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

செய்தி: பாலைவனத் தூது

துனீசியா பிரதமர் ராஜினாமா

துனீஸ்,பிப்.28:நாட்டை விட்டு வெளியேறிய துனீசியாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர் ஜைனுல் ஆபிதீன் பின் அலியால் நியமிக்கப்பட்ட பிரதமர் முஹம்மது கன்னோஷி மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜினாமாச் செய்துள்ளார்.

தனது செயல்பாடுகளை நியாயப்படுத்தி நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விவரித்துவிட்டு தனது ராஜினாமாவை முஹம்மது கன்னோஷி வெளியிட்டார்.

இடைக்கால அரசுக்கெதிராக போராட்டம் நடந்துவரும் துனீசியாவில் எதிர்ப்பாளர்களும், போலீசாரும் மோதியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேருக்கு காயமேற்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் முன்னால் திரண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலைந்து செல்வதற்காக சனிக்கிழமை போலீஸ் கண்ணீர் குண்டை பயன்படுத்தியது. தொடர்ந்து நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

துனீஸில் போலீசாரும் எதிர்ப்பாளர்களும் பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ ஹெலிகாப்டர்கள் நகரத்தில் தாழ்வாக பறந்துக் கொண்டிருக்கின்றன. ’வீட்டிற்கு செல்லுவதுதான் உங்களுக்கு நல்லது! ஜனநாயகம் என்ன என்பது குறித்து நான் உங்களுக்கு செயல்படுத்திக் காட்டுகிறேன்!’ என ஒரு போலீஸ் அதிகாரி மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

எகிப்தின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் பிரிட்டன் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் கண்டனம்

கெய்ரோ,பிப்.28:எகிப்தில் மக்கள் புரட்சிக்கு பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் எகிப்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் விதமாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான எஸ்ஸாம் அல் எரியான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: "௦65 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டனின் ஆதிக்கம் எகிப்தில் முடிந்து போய்விட்டது. எகிப்தியர்களுக்கு அவர்களுடைய பிரச்சனையை எப்படி நிர்வகிக்க வேண்டுமென்பது நன்றாகவே தெரியும்." எனத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் எகிப்து சுற்றுப்பயண வேளையில் ராணுவ ஆட்சியாளர்கள் மற்றும் தேர்வுச் செய்யப்பட்ட சில எதிர்கட்சியினரை சந்தித்துப் பேசினார். ஆனால், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத் தலைவர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார். மேலும் பிரிட்டன் பிரதமர் காமரூன், எகிப்து உள்பட அரபுலகத்தில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப பிரிட்டன் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

பிரிட்டன் பிரதமர் காமரூனின் மத்தியக்கிழக்கு சுற்றுப்பயணம் பிரிட்டனிலும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அவர் தனது சுற்றுப்பயணத்தின் போது எட்டு ஆயுத தயாரிப்பாளர்களை அழைத்துச் சென்றது வெட்கக்கேடு என அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி:ப்ரஸ் டிவி

லிபியா:புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியின் தலைவராக முன்னாள் அமைச்சர் அப்துல் ஜலீல்

பெங்காசி,பிப்.28:லிபியாவில் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கான தற்காலிக அரசின் தலைவராக முன்னாள் அமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலீல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலை பெங்காசி நகர நிர்வாகக் குழுவின் உறுப்பினர் ஃபாதி பஜா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சட்டத்துறை அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல், அதிபர் கதாஃபிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நகரங்கள் தற்போது புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கதாஃபி தலைமையிலான லிபிய அரசு மீது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை

நியூயார்க்,பிப்.28:ஜனநாயக ரீதியில் கிளர்ச்சியில் ஈடுபடும் போராட்டக்காரர்களை அடக்குமுறை மூலமாக நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, அதிபர் முஅம்மர் கதாஃபி தலைமையிலான லிபிய அரசு மீது தடை விதித்துள்ளது ஐநா பாதுகாப்பு கவுன்சில்.

இந்தியா உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகள் அடங்கிய இந்த அமைப்பு இந்த தடைக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது.

ஆயுத விற்பனைக்குத் தடை, கதாஃபி வெளிநாட்டுப் பயணத்துக்கு தடை, அவரது சொத்துகளை முடக்குவது உள்ளிட்டவை இந்த தடையில் அடங்கும் லிபிய அதிபர் கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து 2 வாரமாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மக்களின் எழுச்சியை தனது ஆதரவு படைகள் மூலமாக ஒடுக்கி வருகிறது கதாஃபி அரசு. அரசின் அடக்குமுறையில் சுமார் 1000 புரட்சியாளர்கள் உயிரிழந்தனர்.

கதாஃபியின் ஆட்சிக்கு முடிவு காணும் நோக்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்காவின் தூதர்கள் லிபியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது பற்றி சனிக்கிழமை தீவிர ஆலோசனையில் இறங்கினர். ஞாயிற்றுக்கிழமை காலையில் தீர்மானம் மீது பொதுக்கருத்து எட்டப்பட்டு அது ஏற்கப்பட்டது.

68 வயது கதாஃபி மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்துகளை முடக்குவது, அவர்களும் அவரது ஆட்சித் தலைவர்களும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடை விதிப்பது, ஆயுதத்தடை விதிப்பது, மனித குல அழிவில் ஈடுபட்டதாக கதாஃபி மீது ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க கோருவது உள்ளிட்டவை இந்த தீர்மானம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரி, போராட்டக்காரர்களை ஒடுக்க படைகள் பயன்படுத்தப்பட்டது ஏற்கக்கூடியது அல்ல என்றார்.

லிபியாவில் உள்ள இந்தியர்களின் உடமைக்கும் உயிருக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து இந்தியா கவலை அடைந்துள்ளது என்றார்.

லிபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது அந்த நாட்டின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். போராட்டக்காரர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை லிபியா உடனடியாக நிறுத்தவேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனது சொந்த மக்களையே படைகளை பயன்படுத்தி கொன்று குவிக்கும் கதாஃபி, ஆட்சியில் நீடிக்கத் தகுதியற்றவர் என அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கலை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்திருந்தார்.

இதனிடையே, 27 நாடுகள் அமைப்பான ஐரோப்பிய யூனியன், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை வரவேற்றுள்ளது.

கதாஃபிக்கு எதிரான இந்த தீர்மானத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவருவது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா-விசாவுடன் கூடிய வேலைவாய்புகள்

REQUIRED PHOTOSHOP DESIGNER Visa Available in India.

From: 
salimperfectexport@yahoo.com Job Posted Date: Saturday, February 19, 2011
Work Location : Riyadh

Job Description: Required a person who can work in Adobe Photoshop Design. Only Indian’s needed.

Salary: 2500 Saudi Riyal.
Other Benefits: Accommodation Free.

Anyone interested send your updated cv. Urgent.
For further information call (00966) 0542973869 begin_of_the_skype_highlighting              (00966) 0542973869      end_of_the_skype_highlighting

________________________________________
COMPUTER PROGRAMMERS/SYSTEM ANALYSTSVisa available in India

From: 
maazahmad02@gmail.com
Date: Saturday, February 19, 2011
Work Location : Jeddah

Job Description:
We are looking for 2 Nos. of programmers/ System Analysts who can maintain In-house developed systems (the system is developed in Oracle 10g suite& VB) and can take a lead role in upcoming ERP project. The ideal candidates should have experience in functional design, technical design, data conversion, testing, and end-user training. The Candidate should have knowledge of any ERP application containing Finance, Supply Chain management and Human Resources, Develop forms/reports using Oracle Developer, VB and crystal report. Preferred Experience with core business processes such as distribution, construction, and service industry Experience / Knowledge with other ERP systems is a plus.


Essential Job Functions: 
• Responsible for maintaining the legacy system and contributing in the implementation of ERP system and to ensure that all business requirements are addressed in accordance with the user’s needs.
• Perform business requirements analysis and design.
• Perform gap analysis between ERP system and user’s requirements
• To manage the ERP system for the assigned BU and provide all technical support to the users.
• In-depth knowledge of application design & development and relational databases.
• Installing & Working knowledge of Oracle database & utilities.
• Operational know how on processes & procedures.
• Clear understanding of financial/Payroll processes and controls. 


Desired Candidate's Profile 
- 1-2 yrs of experience in ERP implementation.
- Minimum 3 year of experience in programming, business processes modeling, problem solving & conflict resolution & conduct workshop training.
- Excellent communication skills, both written and spoken english.
- Master/Bachelor's Degree in, Computer Science, or Equivalent.
- Oracle Certified Professional - Developer track with DBA experience
Experience 3 - 6 years

Suitable candidates can send their resume to 
maazahmad02@gmail.com  within couple of days.
-------------------------------------------------
FINANCIAL COORDINATORVisa available for Indian Candidate who is currently in India.
From: samijunu@yahoo.com
Date: Saturday, February 19, 2011
Category: Jobs Offered
Work Location : Riyadh

Job Description:

One of the Leading Group of company offering job for the position of FINANCIAL Coordinator and Financial Assistant Coordination.
SALARY NEGOTIABLE. WITH OTHER BENEFITS...
SEND CV TO 
samijunu@yahoo.com 


மேலும் விபரங்களுக்கு மேலே குறிப்படப்பட்டுள்ள தகுந்த மின்னஞ்சல் மூலமாகவோ, அலைபேசி மூலமாகவோ தொடர்புகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

---அதிரை எக்ஸ்பிரஸ்---

ஓமனில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

மஸ்கட்,பிப்.27:அரபுலகத்தில் ஏற்பட்டு எழுச்சி அலை ஓமனில் பரவத் துவங்கியுள்ளது. தொழிற்பேட்டை நகரமான ஸோஹாரில் ஞாயிற்றுக்கிழமை அரசியல் சீர்திருத்தம்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்தனர்.

ஸோஹாரில் இரண்டாவது தினமாக போராட்டம் நடைபற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஓமனின் தெற்கு நகரமான ஸலாலாவிலும் மாகாண கவர்னர் அலுவலகம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அரசு எதிர்ப்பாளர்கள் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸோஹாரில் போராட்டத்தில் ஈடுபட்டோர் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

செய்தி:ராய்ட்டர்ஸ்

தீவிரவாதி சுனில் ஜோஷி கொலையில் பெண் சாமியார் பிரக்யா சிங் கைது

தீவிரவாதி சுனில் ஜோஷி கொலை வழக்கில் பெண் சாமியார் பிரக்யாசிங்கை மத்தியப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.

மாலேகான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் குண்டு வெடிப்பு, சம்ஜௌத தொடர்வண்டி குண்டு வெடிப்பு என்று அண்மைக் காலமாக இந்தியாவில் சம்பவித்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டவன் என்று குற்றம் சுமத்தப்பட்ட இந்துத்துவ தீவிரவாதி சுனில் ஜோஷி 2007, டிசம்பர் 29-ம் தேதி  மத்தியப் பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான்.  உண்மைகளை மறைக்கும் நோக்கில் இந்துத்துவ துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்களே இவனைச் சுட்டுக்கொன்று விட்டதாகச் சொல்லப்பட்டது.

சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.இத்தகவலை சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ரோஹிணி சாலியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.பிரக்யா சிங், தற்போது மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2007, டிசம்பர் 29-ம் தேதி சுனில் ஜோஷி மத்தியப் பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


http://www.inneram.com/

துனிசியா, எகிப்து, லிபியாவைத் தொடர்ந்து ஓமனிலும் கிளர்ச்சி ஆரம்பம்!

துனிசியா மற்றும் எகிப்தில் ஆட்சியாளர்களுக்கெதிராக  எழுந்த போராட்டங்களை அடுத்து இரு நாட்டு அதிபர்களும் பதவி விலகினர். அதைத் தொடர்ந்து ஏமன்,பஹ்ரைன் மற்றும் லிபியாவில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமனிலும் வேலை வாய்ப்பு உத்தரவாதம், கல்வி மற்றும் பொருளாதார உதவி, தனியார் மற்றும் அரசுத் துறைகளில் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களின் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.

ஓமன் நாட்டின் சோஹார் எனும் நகரில் திரண்ட ஆர்ப்பாட்டக் காரர்கள் நேற்று இரவு முதல் போராட்டங்களில் ஈடுபட்டனர். வேலையற்று இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு அருகே இருந்த லூ லூ  ஹைபர்மார்கெட்டைத் தாக்கினர். இதில் லூ லூ ஹைபர் மார்கெட்டின்  கண்ணாடிகள் சேதமடைந்தன.

இன்று காலையும் ஆர்ப்பாட்டக் காரர்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தான் ஓமன் நாட்டின் மன்னர்  சுல்தான் கபூஸ் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் அந்நாட்டு குடிமக்களுக்கு குறைந்த பட்சம் 200 ஓமானி  ரியால்கள் வழங்கப் பட வேண்டும் என ஆணைப் பிறப்பித்து இருந்தது குறிப்பிடத் தக்கது.

முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?

பிப்.27:முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள். அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.

முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும். மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.

அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும். இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.

வலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.

ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை'

இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.

மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.

கால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.

ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.

இதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்கிறீர்களா?
முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.

இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.

மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு

சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்

அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.

மேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும். உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.

லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங்+உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.

பிப்.27:முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள். அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.

முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும். மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.

அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும். இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.

வலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.

ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை'

இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.

மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.

கால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.

ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.

இதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்கிறீர்களா?
முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.

இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.

மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு

சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்

அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.

மேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும். உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.

லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங்+உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.

பாலைவனத் தூது

யெமன் எழுச்சிப் போராட்டத்தில் பழங்குடியினரும் இணைகின்றனர்

ஸன்ஆ,பிப்.27:ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ஆட்சிக்கெதிராக யெமன் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அந்நாட்டின் பிரபல பழங்குடி இனத்தவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.

ஸன்ஆவின் பழங்குடியினர் பகுதியில் நேற்று நடந்த பழங்குடியின தலைவர்களின் கூட்டத்தில் இதுத் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஹாஷித், பாகில் உள்பட முக்கிய பழங்குடியினத் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அமைதியாக நடந்துவரும் போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் அரசு நடவடிக்கையைக் கண்டித்து ஆளுங்கட்சியான ஜெனரல் பீப்பிள்ஸ் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்வதாக ஹாஷித் பழங்குடியினத் தலைவர் ஹுஸைன் பின் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.

யெமனில் பழங்குடியினருக்கு வலுவான செல்வாக்கு உள்ளது. யெமனில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் ஸன்ஆ பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
செய்தி: பாலைவனத் தூது

எகிப்து:போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பலம் பிரயோகித்த ராணுவம்

கெய்ரோ,பிப்.27:முபாரக் ஆட்சியில் அங்கம் வகித்த அமைச்சர்களை இடைக்கால அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமெனக்கோரி தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம் நடத்த திரண்டவர்களை அந்நாட்டு ராணுவம் பலம் பிரயோகித்து வெளியேற்றியுள்ளது.

போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் மீது லத்திசார்ஜ் நடத்தியும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் நடவடிக்கையை மேற்கொண்டது ராணுவம்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடினர். முபாரக் அமைச்சரவையிலிருப்பவர்கள் இடைக்கால அரசில் இடம்பெற மாட்டார்கள் என்ற ராணுவம் அளித்த வாக்குறுதியைப் பேண வேண்டுமென மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நடு இரவுக்குப் பிறகு ராணுவம் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தெரு விளக்குகளை அணைத்துவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ராணுவத்தின் அத்துமீறிய நடவடிக்கையில் பலர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினாலும், அருகிலுள்ள இடங்களில் முகாமிட்டுள்ளனர். ஆனால், ராணுவத்தின் நடவடிக்கைக் குறித்து ராணுவ சுப்ரீம் கவுன்சில் மன்னிப்புக் கோரியுள்ளது.

புரட்சியின் புத்திரர்களுடன் பிரச்சனை ஏற்பட்டதில் வருந்துவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாது எனவும் ராணுவ சுப்ரீம் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

செய்தி: பாலைவனத் தூது

லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரிப்பு​ - சாலையெங்கு​ம் உடல்கள் கிடக்கின்ற​ன - மீண்டு வந்த இந்தியர்கள்

டெல்லி: லிபியாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. சாலையெங்கும் உடல்களாக கிடக்கின்றன. அவற்றை புல்டோசர்கள் மூலம் அகற்றி குப்பைகளில் வீசுகிறார்கள் என்று அங்கிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவுக்கு அனுப்பப்பட்ட 2 சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் முதல் கட்டமாக 528 பேர் வந்து சேர்ந்தனர். இன்னும் பலர் லிபியாவிலேயே இருப்பதாக, மீண்டு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். லிபியாவில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையுடன் அங்கேயே இருக்க அவர்கள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், 88 பேர் அருகில் உள்ள துனிஷாயவுக்கு தப்பிச் சென்று புகலிடம் அடைந்துள்ளனராம்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. தினசரி 2 விமானங்களை தலைநகர் திரிபோலிக்கு இயக்கிக் கொள்ள லிபியா நாடு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து நேற்று முன்தினம் முதல் இந்த சேவையை தொடங்கியது ஏர் இந்தியா. முதல் 2 விமானங்கள் நேற்று லிபியா சென்று இரண்டு கட்டமாக 528 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்துள்ளன.

முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் வந்து சேர்ந்தது.

இரு விமானங்களிலும் இருந்தவர்களில் 36 பேர் தமிழர்கள். மீண்டு வந்த ஈரோட்டைச் சேர்ந்த கவிதா என்பவர் கூறுகையில், அங்கு நாங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தோம். சாப்பாடு, தண்ணீர் சிக்கலாக இருந்தது.

எங்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் கூட பயத்துடன் இருந்தோம். இன்னும் நிறைய பேர் அங்கேயே உள்ளனர். அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் என்றார்.

முகம்மது சாலி என்ற என்ஜீனியர் கூறுகையில், லிபியாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் உயிரைக் கையில் பிடித்தபடி வீடுகளுக்குள் அடைந்து கிடந்தோம்.

தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். போலீஸாரை எங்குமே காண முடியவில்லை. காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு பலர் வீடுகளை சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன என்றார்.

இன்னொருவர் கூறுகையில், மக்கள் போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் வழியெங்கும் உடல்களைப் பார்த்தோம். அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுகின்றனர். பாதுகாப்பு சுத்தமாக இல்லை என்றார்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியத் தூதரகம் இன்னும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

லிபியாவிலிருந்து மீண்டு வந்த இந்தியர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ. அகமது, வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் வரவேற்றனர்.

நேற்று வந்த விமானங்களில் தமிழகம், உ.பி., கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்ளைச் சேர்ந்தவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

தலைவன் கோட்டை தமிழர்கள் வரவில்லை

இதற்கிடையே, லிபிய மோதலில், 2 பேரைப் பறி கொடுத்திருக்கும் நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டை கிராமத்தினர், தங்களது பகுதியைச் சேர்ந்த யாரும் முதல் கட்ட மீட்பு விமானங்களில் அழைத்து வரப்படாததால் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் முருகையா பாண்டியன் ஆகியோர் லிபிய மோதலில் சிக்கி பலியாகியுள்ளனர். மேலும் 28 பேர் அங்கு சிக்கியுள்ளனர்.

இவர்கள் மீட்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர்கள் யாரும் இதில் வரவில்லை.

88 பேர் துனிஷியா சென்றனர்:

இந்த நிலையில், 88 இந்தியர்கள் சாலை மார்க்கமாக துனிஷியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.


பாலைவனத் தூது

Tuesday, February 22, 2011

இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்



எத்தனை சீட் முஸ்லிம்களுக்கு?.
அரசியல் வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக இன்றைய முஸ்லிம்கள் முற்றிலும் வலு விழந்தவர்களாக ஆக்கப் பட்டிருக்கின்றார்கள். இது போதாதென்று முஸ்லிம்களின் இயக்கங்களும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று தங்களின் பங்கிற்கு பிளவுபட்ட முஸ்லிம்களை, மேலும் சிறு சிறு குழுக்களாக பிரித்தாண்டு இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு, நம்மை முடமாக்க எத்தனிக்கின்றனர். முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், ஜமாத்களும் நம்மை வழி நடத்திய காலம் போய், இன்று நாம் அவைகளை வழிநடத்த அல்லது ஒற்றுமையுடன் இருக்க ஆலோசனை கூறும் நிலைக்கு தமிழக முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.

எந்த ஒரு கட்சியும் முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கிட எந்த முயற்சியையும் மேற்கொண்டதில்லை, வழங்கப் போவதுமில்லை என்பதே உண்மை!. ஏனெனில் இருக்கும் சீட்டுக்களையும், பதவிகளையும் அக்கட்சிகள் தங்களின் குடும்பத்திற்கு ஒதுக்கினாலே தமிழகத்திற்கு இன்னும் 234 தொகுதிக்குமேல் தேவைப்படும். எப்படி முஸ்லிம் சமுதாயம் தங்களுக்கான ஜக்காத்தினை சரியாக கணக்கிட்டு ஏழைகளுக்கு வழங்காமல், 5,10 ரூபாய்கள் என்று தர்மத்தினை, ஜக்காத் என்று வழாங்குகின்றார்களோ, அதே பார்முலாவைத்தான் இந்த அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் இடம் அளிக்காமல், பிச்சை போடுவதுபோல் ஒன்று இரண்டு என்று வழங்குகின்றார்கள்!. இவைகள் அத்தனையும் நன்கு அறிந்திருந்தும் இந்த ஜமாஅத்களும், இயக்கங்களும் இன்னும் இந்த அரசியல் கட்சிகளின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதுதான் வினோதம்!.


காரைக்குடியில் செட்டியார்கள் தொகுதியில் தேவரை நிறுத்த முடியவில்லை!. மயிலாப்பூரில், அய்யர்களின் தொகுதியில் வன்னியரை நிறுத்த முடியவில்லை!. தேவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகளில் ஒரு தாழ்த்தப்பட்டவரை நிறுத்தினால் கலவரம் வெடிக்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வன்னியர், தேவர், செட்டியார், தாழ்த்தப்பட்டோர், பிராமணர் என்று யார் வேண்டுமானாலும் நிற்கலாம்!. எந்த அரசியல் கட்சியாவது அக்ரஹாரத்தில் அப்துல்காதரை நிறுத்தி ஜெயித்து காட்ட முடியுமா?. ஆனால் அதிரையில், மேலப்பாளையத்தில், கீழக்கரையில், சேப்பாக்கத்தில் அய்யரை, அந்தோணியை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக்க முடியும்!. தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் கூட ரிசர்வ் தொகுதிகளாக்கி அங்கும் வஞ்சிக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளை, பெண்களுக்கான தொகுதியாக்கப்பட்டு அங்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்க முடியாமல் சூழ்ச்சி செய்யப்படுகின்றது.

இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது தலையில் குல்லாவை போட்டுக்கொண்டு பள்ளிவாசலில் அஸ்ஸலாமு அலைக்கும் பாய், என்ற வார்த்தைகளை கூறி ஒட்டுக் கேட்டுவிட்டால் போதும்!. அல்லது நான் அம்மணமாக இருந்தாலும் பிறைகொடியுடன் ஊர் ஊராய் திறிந்தேன்!. காயிதேமில்லத் என் அரசியல் வழிகாட்டி!. மீலாதுநபிக்கு விடுமுறை விட்டோம்! என்ற டயலாக் வந்தாலும் போதும்!. உடனே அத்தணை முஸ்லிம்களுக்கும் உச்சி குளிர்ந்து, (கட்டிய வேட்டி அவிழ்ந்து விழுந்தாலும் தெரியாது!) மறக்காமல் இந்த வேட்பாளருக்கு, கட்சிக்கு ஓட்டு போட்டுவிடுவோம்!. யார் கேட்டார்கள் மீலாது நபிக்கு விடுமுறை?. வேண்டுமென்றால் மீலாது நபி விடுமுறையை ரத்துசெய்துவிட்டு 20 தொகுதியை இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்குங்கள். அரசியல் வாழ்வில் மீலாது இருக்கும் இவர்கள் இதன்மூலம் மீண்டு விடுவார்கள்!.

முஸ்லிம்லீக் கட்சிக்கு ஒன்று இரண்டு தொகுதிகள் வழங்கப்படுகின்றது. அது இரண்டாக பிளவு பட்டால் ஆளுக்கு ஒன்றோ அல்லது இரண்டோ வழங்கப்படுகின்றது. தற்போது ம.ம.க என்ற கட்சி உருவாகி அதற்கும் இரண்டு என்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அயோக்கிய அரசியல் கட்சிகள், நீங்கள் சிதறுண்டு வாருங்கள் ஆளுக்கு இரண்டு என்று உங்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிக்கின்றோம் என்று சொல்ல வருகின்றார்கள்.அதுமட்டுமில்லை!. இவ்வாறு வழங்கப்படும் தொகுதிகளில் கூட வேண்டுமென்றே, இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளையும் ஒரே தொகுதிகளை ஒதுக்கி இவர்களை மோதவிடுவார்கள்!.

இதன் மூலம் இருவரில் ஒருவரை சட்டமன்றத்தில் நுழையவிடாமல் செய்துவிடவும் சூழ்ச்சி செய்யப்படுகின்றது. எனவே இந்த தேர்தலில் அவ்வாறு ஒதுக்கப்பட்டால் இரண்டு கட்சிகளும் நேருக்கு நேர் போட்டியிடாமல் வேறு வேறு தொகுதிகளை கேட்டு பெறவேண்டும். ஒரே தொகுதியில் போட்டியிட சம்மதித்தால் அதைவிட துரோகம் வேறு இல்லை!. இந்த முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக மொத்தமாக ஓரு கட்சியிடம் பேரம்பேசி 20 முதல் 30 தொகுதிகள் என்று வாங்கி ஏன் அதை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது?.

தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய அரசியல் அமைப்புகள், பிற அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. இதை அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதே தவிர, வேறு காரணம் இல்லை. இங்கு முஸ்லிம்களை தவிர வேறு இனத்தவரை நிறுத்தினால் வெற்றிபெற முடியாது என்ற நிலையில் உள்ள தொகுதிகளேயாகும். இதே நிலையைத்தான் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மற்ற எல்லா தொகுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில் கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் நிலையைதான் முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். 

முஸ்லிமை நிறுத்தினால் ஓட்டு!. இல்லை என்றால் சுயேட்சையாக ஒரு முஸ்லிமை நிறுத்தி, மொத்த ஜமாத்தும் இயக்கங்களும் அவருக்கு ஆதரவளித்து முஸ்லிம்களின் வாக்கு வங்கியை நிருபித்து, அடுத்த தேர்தலில் இந்த கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு நம் பலத்தை புரியவைக்க வேண்டும், இனி இந்த தொகுதியில் முஸ்லிமை நிறுத்தினால் மட்டுமே இங்கு வெற்றி பெறமுடியும் என்று பாடம் கற்பிக்க வேண்டும். இதை தவிர இனி முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்யவே முடியாது!.

ஏனெனில் எல்லா அரசியல் கட்சியும் இரண்டு சீட் என்ற கோட்பாட்டில் இருந்து வெளிவர மாட்டார்கள். எனவே இனி அவர்கள் கட்சியில் முஸ்லிம்களின் சட்டமன்ற உறுப்பினரை அதிகரித்து அதன் மூலம் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமே தவிர, நீங்கள் சிதறுண்டு கிடப்பதால், இனி இன்னும் பத்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும் முஸ்லிம் இயக்கங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற தொகுதிகளை கேட்டுப்பெரும் வலிமை வர வாய்ப்பேயில்லை!.

முஸ்லிம் விரோத கட்சியை தவிர்த்து, மாற்று அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, அவர் முஸ்லிம் என்கிற காரணத்தால் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள், முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்கின்ற காரணத்தால், முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத சூழ்நிலை உள்ளதையும் நாம் மறுக்க முடியாது!. சமுதாய பிரச்சனைகளை அவைகளில் பேசாத, பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே என்றும் நாம் வாதிடலாம். இப்படியே வாதிட்டு வாதிட்டு இருந்ததை நாம் இழந்தோமே தவிர எண்ணிக்கையை அதிகரிக்க எந்த முயற்சியையும் நாம் செய்யவில்லை!.

சமீபத்தில் கூட த.த.ஜ இட ஒதுக்கீடு தொடர்பாக, காங்கிரசின் ஹாரூன் எம்.பி யை பிரதமர், மற்றும் சோனியா வரை சந்திக்க பயன்படுத்தியதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்ஷாஅல்லாஹ் இதுபோல் மற்ற உறுப்பினர்களையும் இதுபோன்று பயன்படுத்திக் கொண்டோமேயானால் ஓரளவிற்கு நம் பிரச்சனைகளை உயர்மட்ட அளவில் கொண்டு செல்லமுடியும். சமுதாய நலனை எடுத்து செல்லும் உறுப்பினர்களை மட்டும், தாங்கள் சார்ந்த கட்சியில் சீட்டு மறுக்கப்படும் போது அவரை தனியாகவே நிறுத்தி முஸ்லிம்கள் அவரை வெற்றிபெற செய்ய வைக்கவேண்டும். கட்சி கைவிட்டாலும் சமுதாயம் கைவிடாது என்ற எண்ணத்தினை அவர்கள் பெற வேண்டும்.

முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், நிச்சயம் வெற்றிபெற முடியும்  போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது? கண்டன ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகதான் இருக்கும். அல்லது ஓரளவிற்கே அது பலனை தரும். ஆனால் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்து அவர்கள் மூலம் நம் கோரிக்கையை இந்த மன்றங்கள் மூலம் தீர்மானமாக கொண்டுவரும்போது மட்டுமே வலிமை மிக அதிகம் என்பதையும் நாம் மறக்ககூடாது. 

இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம் வழி காட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும் உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.

பழைய மக்கள்தொகை கணக்கின்படி, தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகையானது, மொத்த தமிழக மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது. அதாவது 6.5 கோடி மக்கள் தொகையில் 6% முஸ்லிம்களின் எண்ணிக்கை 39 இலட்சம். இதில் ஓட்டுரிமை உள்ள முஸ்லிம்கள் மட்டுமே 40% சட்டசபை இடங்களை வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமெனில், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 90 முதல் 95 தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்குகளின் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் தொகுதிகளாகும்.

1965ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் அதிராம்பட்டினம் தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை அதிரை மீண்டும் தனி சட்டமன்ற தொகுதியாக்கபடவில்லை. 1967ஆம் ஆண்டு முதல் பட்டுக்கோட்டை தொகுதியிலேயே 60 ஆயிரம்பேர்களை முஸ்லிம்களாக கொண்ட அதிராம்பட்டினம் இருந்து வருகிறது. ஆனால் இன்றுவரை ஒரு முஸ்லிம் இங்கே சட்டமன்ற உறுப்பினராகவில்லை.

1967,1971 வெற்றி பெற்றவர்: ஏ.ஆர்.மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்ட்டி சார்பில்) 1977 ஏ.ஆர்.மாரிமுத்து (காங்கிரஸ் சார்பில்)
1980 எஸ்.டி.சோமசுந்தரம் (அ.தி.மு.க) 1984 பி.என்.இராமச்சந்திரன் (அ.தி.மு.க)
1989 கா.அண்ணாதுரை (தி.மு.க.) 1991 கே.பாலசுப்ரமணியம் (அ.தி.மு.க)
1996 பி.பாலசுப்ரமணியன் (தி.மு.க)
2001 என்.ஆர்.ரெங்கராஜன் (த.மா.க சார்பில்) 2006 என்.ஆர்ரெங்கராஜன் (காங்கிரஸ் சார்பில்)

அதிரையில் இருந்து இந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட. ஒரு முஸ்லிமிற்கு கூட சீட் கிடைக்காதது ஏன்?. இதே நிலைதான் தமிழகமெங்கும் உள்ளது.

சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்டசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி முஸ்லிம்கள், முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கவேண்டும் என்ற நிலையை தற்போது ஏற்படுத்தினால் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க முடியும். பின் இந்த முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சமுதாய இயக்கங்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்வது மட்டுமே தற்போதுள்ள சூழ்நிலைக்கு தீர்வாகலாம்.

Monday, February 21, 2011

முதுமையை வெல்ல நெல்லிக்கனி


பிப்.21:இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.

முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும். இது நெல்லிக்கனியில் அதிகம் காணப்படுகிறது.

மேலும் தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

தலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப் போக்கி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கண் பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

39 மனைவிகளைக்​ கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பத்தி​ற்கு சொந்தக்கார​ரான இந்தியர்

பிப் 21: இச்செய்தியை வாசிப்பவர்கள் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஒரு மனைவியை கட்டியே ஒழுங்காக குடும்பம் நடத்த முடியவில்லை என அங்கலாய்ப்பவர்கள் நம்மில் பலருண்டு. ஆனால் சியோன்னா சனாவுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை. இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தைச் சார்ந்த சியோன்னா சனாவுக்கு 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரக் குழந்தைகள். மிஸாராமிற்கு வடக்கே அழகான கிராமமான பக்துவாங்கில் மலைகளுக்கிடையே அமைந்துள்ள வீட்டில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்திவருகிறார் சனா.

நான்கு மாடிகளைக் கொண்ட 100 அறைகள் இடம்பெற்ற மிகப்பெரிய வீட்டில்தான் சனாவின் மிகப்பெரிய குடும்ப வாழ்க்கை தொடர்கிறது. இந்த வீட்டிற்கு பெயர், 'சுவான் தாட் ரன்' (புதிய தலைமுறையின் வீடு) என பெயரிடப்பட்டுள்ளது. ராணுவ ஒழுங்குமுறைகள் குடும்ப உறுப்பினர்களிடம் பேணப்படுகிறது. மிகவும் இளைய மனைவியான ஸாதியாங்கிதான் பெண்களைக் கொண்டு வீட்டில் துணிகளைக் கழுவுவது, சுத்தமாக்குவது போன்ற வேலைகளை செய்யவேண்டிய பொறுப்பு.

ஒரு தினத்திற்கான சாப்பாட்டிற்கு 30 கோழிகள் தேவைப்படுகின்றன. தனது முறுக்கேறிய வாலிப பருவத்தில் இவர் ஒரு வருடத்தில் 10 திருமணங்களை முடித்துள்ளார். மிக இளவயதுடைய மனைவிக்குத்தான் சனாவின் அடுத்துள்ள அறையில் தங்குவதற்கு அனுமதி. மூத்த மனைவியோ கடைசி அறையில் தங்கியுள்ளார்.

இதில் ஆச்சரியப்படத்தக்க செய்தி என்னவெனில், தனது குடும்பத்தை இன்னும் விரிவுப்படுத்த தான் அமெரிக்கா சென்றும் திருமணம் முடிக்கத் தயார் என சனா கூறுவதுதான்.

 

Wednesday, February 16, 2011

முஸ்லிம்களுக்கு 10% சதவீத தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி - எஸ்.டி.பி.ஐ

பாலைவனத் தூது
சென்னை,பிப்.16:முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தொகுதி ஒதுக்கீடு, ஊழலை ஒழிக்க சரியான செயல்திட்டம் போன்ற எஸ்.டி.பி.ஐ-ன் கோரிக்கைகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் என அக்கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; "எஸ்.டி.பி.ஐ. கடந்த 1 1/2 வருடங்களாக தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் தனது கட்டமைப்பை ஏற்படுத்தி லட்சக்கணக்கான உறுப்பினர்களுடனும், பல்லாயிர கணக்கான செயல் வீரர்களுடனும் மக்கள் பணியாற்றி வருகிறது.

தற்போது எஸ்.டி.பி.ஐ.-ன் கிளை முதல் மாவட்டம் வரை உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில பொதுக்குழுவில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். மார்ச் 26-ஆம் தேதி டில்லியில் தேசிய பொதுக்குழு நடைபெறும் அதில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்

எஸ்.டி.பி.ஐ.-ன் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக வரும் 20-ஆம் தேதி சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் 8 மாவட்டங்களை உள்ளடக்கிய 'சென்னை மண்டல மாநாடு' சிறப்பாகவும் எழுச்சியுடனும் இறையருளால் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் எழுச்சியுடன் பங்கேற்பார்கள். முன்னதாக கொடியேற்றம், கருத்தரங்கும், பேரணி ஆகியவை நடைபெறும். இம்மாநாடு எஸ்.டி.பி.ஐ.யின் வெற்றி மாநாடகாவும், ஒரு மைல்கல்லாக அமையும். இதில் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், எஸ்.டி.பி.ஐ.-ன் தேசிய மாநில நிர்வாகிகளும் கலந்து உரையாற்றுவர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களில் அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு 10% தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அது போன்று இடஒதுக்கீட்டை 5% உயர்த்துவது வக்ஃபு வாரிய சொத்துகளை முறைபடுத்துவது அதில் அதிக நிதிகளை ஒதுக்குவது முஸ்லிம்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்குவது போன்ற வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் வழங்க வேண்டும். ஊழலை ஒழிக்க சரியான செயல்திட்டங்களையும் 'லோக் அறகிதா' போன்ற ஊழல் ஒழிப்பிற்கான அமைப்புகளை ஏற்படுத்துவதையும் வாக்குறுதியாக அளிக்க வேண்டும். தீண்டாமை கொடுமைகளை முற்றிலும் ஒடுக்கும் செயல் திட்டங்களையும் அதில் அறிவிக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ. வரும் தேர்தலில் மேற்கண்ட வாக்குறுதிகளோடு சட்டமன்ற தேர்தலில் அதிக பிரதிநிதித்துவத்தை எஸ்.டி.பி.ஐ.க்கு தரும் கட்சிகளோடு கூட்டணி வைத்து போட்டியிடுவோம். அல்லது 25 தொகுதிகளில் தனித்து எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். எஸ்.டி.பி.ஐ. 60 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இத்தேர்தலில் விளங்கும்."
இவ்வாறு செய்தியாளர்களிடம் எஸ்.டி.பி.ஐ.யின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கூறினார்

புதுப்பட்டிணத்தில் இந்து முன்னணியினர் கலவர வெறியாட்டம்


Feb 16
நமதூர் அதிராம்பட்டினம்-மல்லிப்பட்டினம் இடையேயுள்ள புதுப்பட்டினம் என்ற சிற்றூரில் ஜனவரி 28-ம் தேதியன்று இந்து முன்னனி சார்பில் அவ்வமைப்பின் கொடி ஒன்று பேருந்து நிலையம் அருகில் ஊன்றப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி-8 அன்று யாரோ விசக்கிருமிகள் அக்கொடியினை அறுத்து இருக்கின்றனர். இதை முஸ்லிம்கள் தான் செய்ததாக கூறி 8 முஸ்லிம்களின் பெயரை கூறி சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்து முன்னணியினர்.

பிப்.11 அன்று இப்பிரச்சனையை பற்றி பேசுவதற்காக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து ஜமாஅத் உறுப்பினர்கள் உட்பட சில நபர்கள் காவல் நிலையத்திற்கு வருகின்றனர்,அதே சமயம் இந்துக்கள் சார்பில் கொஞ்சபேர் அங்கு வருகின்றனர்.இன்ஸ்பெக்டர் இல்லாத காரணத்தால் சப்இன்ஸ்பெக்டர் ஹேமலதா அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப் பேச்சில் ஈடுபடுத்துகின்றார்கள்.

முஸ்லிம்கள் தங்களது பக்கம் நியாயம் இருப்பதாகவும் இந்தப் பிரச்சனைக்கு முஸ்லிகள் யாரும் காரணம் இல்லையென்றும்,வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்திருக்கும் பாலா என்ற இந்துத்துவவாதி இந்த ஊருக்கு திரும்பி வந்த பின்பு தான் இது போன்ற செயல்கள் நடப்பதாக தங்கள் நிலையை கூறியவுடன் அத்தனை பேரும் ஏற்றுக் கொண்டு சமாதான நிலைக்கு வருகின்றனர்.


அப்போது,நெடுநாட்களாக முஸ்லிம்கள் ஜும்ஆ பள்ளிக்கு எதிரில் இருக்கும் கோயில்களில் தொழுகை நேரத்தில் ஒலித்து வரும் பாடல்களை நிறுத்தக்கோரி கேட்டும் அதை தொடர்ந்து செய்து வருவதாகவும் எங்களது இறை வழிப்பாட்டிற்கு இடையூறாக இருப்பது பற்றி தீர்த்து வைக்கக் கோரினர்.

வேலு என்பவர் குறுக்கிட்ட "நாங்கள் பாட்டை நிற்பாட்ட முடியாது,நீங்கள் வேண்டுமானால் தொழுகையை நிற்பாட்டுங்கள் என்று கூற ஆரம்பித்ததும்,முஸ்லிம்களது மனம் பாதிக்கப்படுகிறது வந்திருந்த முஸ்லிம்கள் அனைவரும் கண்டனம் எழுப்புகின்றனர். நிலவரம் சரியில்லாமல் போவதைக் கண்ட காவல்துறையினர் பிப்.13 அன்று சமாதானக் கூட்டம் நடத்துவதாக அறிவித்து விட்டு அன்றைய கூட்டத்தை கலைத்து விடுகின்றனர்.

முஸ்லிகள் அனைவரும் பிப்.13-ஐ எதிர்நோக்கி இருக்கும் பொழுது பாசிஸ்டுகளின் சதி வேலையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கிறது. பிப்.11 அன்று இரவே இந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது எனறு இந்து முன்னணி சார்பில் தடை விதிக்கப்படுகின்றது.

பிப்.12 பகல் 3.00 மணிவரை ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர், அஸர் தொழுகை ஆரம்பிக்கும் நேரத்திற்கு சற்று முன்னர், ஒரு சுமோ, ஒரு கார் மற்றும் 5 அல்லது 6 பைக்குகளில் தம்பிக்கோட்டை, மற்றும் பட்டுக்கோட்டையில் இருந்து இந்து முன்னணியினர் புதுப்பட்டினம் வந்து சேருகின்றனர்.

முஸ்லிம்கள் எப்போதும்போல் அஸர் தொழுகைக்கு மஸ்ஜிதிற்கு சென்றுவிட்டு வெளியில் வருகையில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மஸ்ஜிதிற்கு எதிரில் நின்று கொண்டு ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு பழிக்கின்றனர். மேலும் முஸ்லிம்களின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துகின்றனர். இதனை கண்ட சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் அனைவரும் இந்து முன்னணியினரை திருப்பித் தாக்குகின்றனர்.

இதில் முஸ்லிம்களின் தரப்பில் 5 பேரும் இந்து முன்னணி தரப்பில் 12 பேரும் காயம் அடைகின்றனர், இத்ரீஸ் அஹ்மது என்ற 11வது படிக்கும் மாணவரின் மண்டை எலும்பு உடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விசயம் அறிந்த காவல்துறை முஸ்லிம்களின் தரப்பில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 13 பேரை ரிமாண்ட் செய்துள்ளனர். இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்து முன்னணி சார்பில் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 10 பேரை ரிமாண்ட் செய்து 9 பேரை தேடி வருகின்றனர், வெளியூரில் இருந்து வந்த அத்தனை இந்து முன்னணியினரும் ஓடிப்போய் விட்டனர் என்பது நமது நிரூபர் அளிக்கும் தகவல். தற்பொழுது புதுப்பட்டினம் எஸ்.பி.-யின் மேற்பார்வையில் இருக்கிறது.

நன்றி:பாலைவனத்தூது

Tuesday, February 15, 2011

பயணக்காசு

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்டிருக்கும் நமதூர் அதிரையில் காலங்காலமாக நடைமுறையிலிருந்து தற்போது வழக்கொழிந்து அல்லது அரிதாகிப் போன சில பழக்க வழக்கங்கள் குறித்த தொகுப்பு. மார்க்கரீதியில் சரியா தவறா என்ற ஆய்வுக்குச் செல்லாமல், இவற்றினால் நமக்கேற்பட்ட விளைவுகளை/இழப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுதப்பட்டது.


நினைவில் நிற்கும்/நின்ற தகவல்களைத் திரட்டி கொஞ்சம் குத்துமதிப்பாக தொகுத்துள்ளேன். வாசகர்களும் இணைந்தால் அதிரை முஸ்லிம்களின் பாரம்பர்ய வாழ்க்கைமுறைகள், பழக்க வழக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

****

வெளிநாட்டுக்கு அல்லது நெடுந்தூர பயணம் செல்பவர்கள்,சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு பயணம் சொல்லிப் போகும்போது, பயணம் சொல்லி வந்திருப்பவருக்கு டீ, காஃபி குளிர்பானங்களுக்குப் பதிலாக பால் அருந்தக் கொடுப்பர்.

(இரண்டு பார் அருணா சோப் வாங்கினாலோ அல்லது நான்குபார் BCC நீலம் வாங்கினாலோ ஒரு அழகிய பூப்போட்ட கண்ணாடி கிளாஸ் இலவசமாகக் கொடுத்தார்கள்.ஏரியலும் உஜாலாவும் வந்தபிறகு இலவச கண்ணாடிகிளாஸ் ஒழிந்துவிட்டது :(. அத்தகைய கண்ணாடி கிளாஸ் நிறைய பாலிருக்கும்போது, பாலின் வெள்ளைப் பின்னணியுடன் அதில் பிரிண்டாகியிருக்கும் பூக்களை ரசிக்க கலைக்கண்கள் இருக்க வேண்டும்;)

நடுவீட்டில் நாற்காலியில் அல்லது வயதானவர்கள் படுத்திருக்கும் கட்டிலில் உரிமையாக ஒட்டிக்கொண்டு உட்கார்ந்து, "பெரியம்மா / வாப்புச்சா / அப்பா இன்ஷா அல்லாஹ் நான் சவூதி போறேம்மா. துஆ செய்யிங்க" எனும்போது கண்ணீர்மல்க "யான் வாப்பா போறேன்னு சொல்றே?போயிட்டு வர்ரேன்னு சொல்லுமா" என்பதோடு, காசுபணம் முக்கியமில்லே வாப்பா! சதுரவாழ்வைப் பார்த்துக்குங்க" என்று "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை சொல்லாமல் சொல்வர்.

"போறேன்" என்பதை புறப்படுகிறேன்/போயிட்டு வர்ரேன் என்று சொல்லுமா என்று பிழைதிருத்தியது மூடநம்பிக்கையினால் அல்ல; ஒரேடியாகப் போகும் மீளாப்பயணமான மரணத்தைக் குறிக்கும் என்ற நம்பிக்கையே காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன். இவ்வாறு சொல்லிவிட்டு, "நீ நல்லபடியாக சம்பாதித்து திரும்பி வரும்போது நான் ஹயாத்தா ஈக்கிறேனோ மவுத்தோ?" என்ற ஏக்கப்பெருமூச்சில் "மவுத்தையே நீ மறக்கலாகுமோ?" என்ற சிந்தனை மேலோங்கியதாகவே நினைக்கிறேன்.

ஒன்னும் கவலைப்படாதியம்மா/ப்பா. இன்ஷா அல்லாஹ் நீங்க ஆசைப்பட்ட மேத்துண்டு/பத்தாயக்கைலி/துப்பட்டி/மார்ட்டின் சட்டை/செண்டு இவற்றில் எதில் அதிகப்பிரியமோ அதைக் குறிப்பிட்டு யாராவது வெகேசன் வந்தால் மொதவேலையா அதை உங்களுக்கு குடுத்தனுப்புறதுதான்" என்று பாசமழை பொழியும்போது, அருகில் நிற்கும் குழந்தைகளும் தங்களுக்கு விருப்பமான பொருட்களை மறக்காமல் அனுப்பும்படி கேட்கும் அழகே தனிதான் போங்க!

நானெல்லாம் சிறுவனாக இருக்கும்போது சவூதியிலிருந்து எங்கள் மாமா வெகேசனில் ஊர்வரும்முன் என்ன வேண்டும்? என்று கேட்கும்போது, கல்லு குச்சி டப்பா (காந்தம் வைத்தது:) அல்லது ஜாமெண்ட்ரி பாக்ஸ், மணக்கும் அழி ரப்பர், பைலட் பேனா என்று கேட்டது பசுமையாக நினைவிலுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்பு மூன்றுவயது மகனிடம் "உனக்கு என்னம்மா கொண்டுவர என்று கேட்டு வாய்மூடுவதற்குள் "கம்யூட்டர் வேணும்" என்று சொன்னபோது, உலகமயமாக்களின் தாக்கத்தை நொந்து கொண்டேன் :)

இப்படித்தான்டா சொல்லவந்ததை விடுத்து எங்கெங்கோ செல்வான் என்று நண்பன் தஸ்தகீர் நினைக்கக்கூடும் என்பதால் பயணக்காசு விசயத்திற்கே வந்துவிடுகிறேன். ஸலாம் சொல்லி புறப்படும்போது சிறார் சிறுமிகளுக்கு கசங்காத ரெண்டு ரூபாய் சலவை நோட்டையும், பெரியம்மா/அப்பாக்களுக்கு பத்து ரூபாய் காந்தி நோட்டு (அப்போதெல்லாம் காந்தி நூறு ரூபாத்தாளில் மட்டுமே சிரிப்பார் என்று நினைக்கிறேன்) ஒன்றும் பயணக்காசு கொடுப்பது வழக்கம்.

வசதியுள்ள சில பெரியவர்கள் முதன்முதலாக சம்பாதிக்கச் செல்பவரிடம், தங்களிடமுள்ள பாக்கட்மணியிலிருந்து (தமிழில் எப்படி சொல்வது? :)  ஒரு நோட்டை எடுத்து,இந்தாமா பிஸ்மி சொல்லி இதவச்சுக்க, பினாங்கில் / கொழும்பில்/ரங்கூனில் நான் சம்பாதித்த மொதமாதச் சம்பளம் இதுதான்" என்று சொல்லி பயணம் சொல்ல வந்தவருக்கே பயணக்காசு கொடுக்கும் பெருங்கைகளும் அதிரையில் இருந்தனர்.

ஹும்..அதெல்லாம் ஒருகாலம். சிங்கப்பூர் மலேசியா வளைகுடா நாடுகளில் பொருளீட்டச் செல்பவர்களுக்காவது பயணம் சொல்லிப் போக, பயணக்காசு கொடுக்க, குறைந்தபட்சம் முதியவர்களை நலம்விசாரித்து அவர்களின் துஆக்களையும் ஆசிகளையும் பெறுவதற்க்கெல்லாம் காலநேரஅவகாசம் இருக்கிறது.யூரோப்,யூஎஸ் ஆஸ்திரேலிய........நாடுகளில் நம்மூர் 'குதிரை வேட்டி' தென்பட ஆரம்பித்த பிறகு, வெளிநாட்டுப் பயணங்கள் பரம ரகசியம் ஆகிப்போய் பயணக்காசு பண்பாடு, வழக்கொழிந்துபோய் செல்லாக்காசாகி விட்டதாகவே நினைக்கிறேன்.


அன்புடன்,

அபூஅஸீலா


"பொருளில்லாருக்கு இவ்வுலகில்லை


அருளில்லாருக்கு அவ்வுலகில்லை -


பெற்றோர்-பெரியோர் ஆசியின்றி


பொருள் தேடுவோருக்கு எவ்வுலகுமில்லை"

கூகுள் மெயில் ஷார்ட் கட்

மெயில் ஷார்ட் கட்கீஸ்உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட்டை மவுஸ் கொண்டு செலுத்துவற்குப் பதிலாகக் கீ போர்டு ஷார்ட் கட் கீகள் மூலம் செயல்படுத்தலாம். இந்த கீ போர்டு ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்து வதனால் நம் நேரம் மிச்சமாகிறது. மேலும் கீ போர்டிலிருந்து கைகளை எடுக்காமல் விரைவாக நம்மால் செயல் பட முடியும்.


இதோ சில ஷார்ட் கட் கீகள்:

ஜஸ்ட் எப் கீயை மட்டும் அழுத்தினால் இமெயில் செய்தியை அடுத்ததற்கு பார்வேர்ட் செய்திட முடியும்.
Shift+I: இமெயில் மெசேஜைப் படித்ததாக குறியீடு செய்வதற்கு
Shift+u: இமெயில் மெசேஜைப் படிக்காததாகக் குறியிட
r: மெயிலை அனுப்பியவருக்கு பதில் அனுப்ப
a: அனைத்து மெயில் பெற்றவருக்கும் பதில் அனுப்ப
Ctrl+c: அப்போதைய இமெயிலை ட்ராப்டாக சேவ் செய்திட
Z: முந்தைய செயல்பாட்டை கேன்சல் செய்திட
?: கீ போர்டு ஷார்ட்கட் கீகள் குறித்த உதவிக் குறிப்புகளைக் காட்ட
c: புதிய இமெயில் மெசேஜ் ஒன்றை எழுதிட
/: சர்ச் பாக்ஸில் உங்கள் கர்சரை நகர்த்த
u: உங்களுடைய இமெயில் அக்கவுண்ட்டை ரெப்ரெஷ் செய்து லேட்டஸ்ட்டாக வந்த இமெயில் மெசேஜைக் காண
!: இமெயில் மெசேஜ் ஒன்றை ஸ்பாம் மெயிலாகக் குறியிட
p: தற்போதைய மெயிலுக்கு முன் உள்ள மெயிலுக்குச் செல்ல
.: வெறும் புள்ளி அடித்தால் கூடுதலான ஆப்ஷன்ஸ் காட்டப்படும்
Esc: கர்சரை தற்போதைய பீல்டிலிருந்து நகர்த்தும்.

மக்கா நேரத்தை உலக மைய நேரமாக்கக் கோரிக்கை

புவியின் உண்மையான மையமாக முஸ்லிம்களின் புனித நகரான, சவுதி அரேபியாவின் மக்கா நகரம் திகழ்வதாகக் கூறுகின்ற, சில முஸ்லிம் விஞ்ஞானிகளும், மதகுருமாரும், கிரீன்விச்சை மையமாகக் கொண்ட உலக நேரத்துக்குப் பதிலாக, மக்கா நேரம் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கட்டாரில் நடந்த மாநாடு ஒன்றில் வாதிட்ட புவியியல் நிபுணர் ஒருவர், ஏனைய அனைத்து தீர்க்க ரேகைகளைப் போலல்லாது, மக்கா வட காந்தப் புலத்துடன் பொருந்திவருகிறது என்று கூறினார்கள்.
பிரிட்டிஷ்காரர்கள் உலகின் காலனித்துவ சக்தியாகத் திகழ்ந்த போதே, கிரீன்விச்சை மையமாகக் கொண்ட ஜி எம் டி நேரம் அறிமுகப்படுத்தத்கப்பட்டது என்று கூறிய அவர், அத்துடன் மாற்றங்கள் நடப்பதற்கான காலம் இதுவென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து முஸ்லிம்களும் தாம் தொழுகின்ற போது மக்கா இருக்கும் திசையை நோக்கியே தொழுவார்கள்.

நினைவலைகளி​ல் ஷாஹித் ஆஸ்மி

ஷாஹித் ஆஸ்மி - மனித நேயமிக்க துணிச்சலான வழக்கறிஞர். அதிகாரவர்க்கத்தின் அடக்கு முறையினால் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்கள் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகயிருந்தாலும் அவர்களுக்காக வாதாடியவர்.

தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்ட எத்தனையோ முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை துணிவுடன் எடுத்து நடத்தி விடுதலையைப் பெற்றுத் தந்தவர். நீதிக்காக போராடிய அந்த இளைஞரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி அக்கிரமக்காரர்களின் கைக்கூலிகள் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைத்தனர்.

நீதிக்கான போராட்டத்தில் அந்த லட்சிய வீரர் தனது இன்னுயிரை இழந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. இவ்வேளையில் அவரைக் குறித்த சில நினைவலைகளை அவருடன் தொடர்புடையவர்களிடமிருந்து பகிர்ந்து கொள்வோம்.

ஷாஹித் ஆஸ்மியின் தாயார் ரிஹானா ஆஸ்மி - இவருடைய கணவர்(ஷாஹிதின் தந்தை) இறந்து பல வருடங்களாகிவிட்டன. ரிஹானா மார்க்கப்பற்றுள்ள பெண்மணி. தனது பேச்சினூடே திருக்குர்ஆன் வசனங்களையும், நபிகளாரின் பொன்மொழிகளையும் மேற்கோள்காட்டுவார்.

தனது மகனைக் குறித்து ரிஹானா கூறுகிறார். "நான் எனது மகனை நினைத்து பெருமைப்படுகிறேன். அவனைக் கொன்றவர்கள் கட்டாயம். தூக்கிலேற்றப்பட வேண்டும். இதன் மூலம் எனது மகனுக்கு நீதிக் கிடைக்கவேண்டும்." எனக்கூறிய அவரிடம், உங்கள் மகனை கொலைச் செய்தவர்கள் யார்? எனக் கேட்டபோது, அவர் கூறினார், "ஹேமந்த் கர்காரேயை யார் கொன்றார்களோ? அவர்கள்தான்!" என பதிலளித்தார்.

'உங்கள் மகன் ஷாஹித் ஆஸ்மி கொலைச் செய்யப்பட்டுள்ள சூழலில், அதே வழக்கறிஞர் தொழிலுக்கு ஏன் உங்களது இளைய மகனையும் பணிபுரிய அனுமதித்தீர்கள்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ரிஹானா, "நான் எனது இறைவனை சந்திப்பதைக் குறித்து பயப்படுகிறேன். உனது மூத்தமகன் கொலைச் செய்யப்பட்டதால் பயந்துபோய் உனது இளைய மகனை பாதிக்கப்பட்ட, ஏழை மக்களுக்காக உழைக்கும் பணியை ஏற்கச் செய்வதிலிருந்து தடுத்தாயா? எனக்கேட்டால் நான் என்னச் செய்வேன்?" என வினா எழுப்பிய ரிஹானா, "அல்லாஹ் எனது இளைய மகனை காப்பாற்றுவான்" என உறுதியுடன் தெரிவித்தார்.


மும்பை புறநகர் பகுதியான குர்லாவில் கிராந்தி நகர் சேரிப் பகுதியில் வசிப்பவர் தன்னா. இவர் ஒரு விதவையாவார். ஷாஹித் ஆஸ்மியைக் குறித்து நினைவுக்கூறும் பொழுது அவர் முகத்தில் தெரிந்த வருத்தத்தை நம்மால் உணரமுடிகிறது. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. அவர் கூறுகிறார்: "எனது மகன் ஹேமந்த். அவனுக்கும் இன்னொரு நபருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த நபர் தற்செயலாக இறந்துவிட்டார். போலீசார் எனது மகன் மீது 302-பிரிவின் படி கொலைக் குற்றத்தை சுமத்தினர். நான் ஒரு விதவை. நான் எனது மகனை வழக்கிலிருந்து விடுவிக்க பல வழக்கறிஞர்களையும் அணுகினேன். வழக்கிற்காக என்னிடமிருந்த அனைத்தையும் விற்றதுதான் மிச்சம். எல்லா வழக்கறிஞர்களுமே 'உங்கள் மகனை எங்களால் காப்பாற்ற இயலாது' என கைவிரித்து விட்டனர். இந்நிலையில் ஷாஹித் ஆஸ்மியைக் குறித்து கேள்விப்பட்டு அவரை வெறுங்கையுடன் சென்று சந்தித்தேன்.

ஷாஹித் என்னிடம் இந்த வழக்கில் காசு வாங்காமலேயே வாதாடுகிறேன் எனத் தெரிவித்ததோடு 2006 ஆம் ஆண்டு எனது மகனுக்கு இவ்வழக்கிலிருந்து விடுதலையையும் பெற்றுத் தந்தார். எனது மகன் ஹேமந்தைப் போல் ஷாஹிதும் எனக்கு மகன்தான்.

70 அடி பரப்பளவைக் கொண்ட எங்கள் வீட்டில் ஷாஹித் வந்தால் தரையில் உட்காருவார். மாதந்தோறும் எங்களுக்கு நிதியுதவி அளித்து வந்தார். அவர் கொல்லப்படுவதற்கு முன்பாகக் கூட எங்களுக்கு நிதியுதவி அளித்தார். அவர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். ஏன் எனது மகனைப் போல் நான் கருதிய நேர்மையான மனிதரை கொலைச் செய்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. நாங்கள் மீண்டும் அனாதையாக உணர்ந்தோம். ஆனால், அவருடைய சகோதரர் காலித் ஆஸ்மி தனது சகோதரரைப்போல் எங்களுக்கு உதவிச் செய்வதாக வாக்களித்தார். இப்பொழுது காலிதும் எங்களது மகன்தான். அவரை இறைவன்
காப்பாற்றுவான்." என தெரிவித்தார்.

ஷாஹித் ஆஸ்மி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்ட பொழுது இரண்டு கேள்விகள் மிஞ்சின. ஒன்று. யார் ஷாஹித் ஆஸ்மியின் கொலைக்கு பின்னணியிலிருந்து செயல்பட்டவர்கள்?

இரண்டாவது ஷாஹித் ஆஸ்மியின் பணியை யார் எடுத்து நடத்துவார்?

முதல் கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ஆனால், இரண்டாவது கேள்விக்கு விடை அவருடைய இளைய சகோதரர் வழக்கறிஞர் காலித் ஆஸ்மியைத் தவிர வேறு எவரும் விடை தரவில்லை.

ஷாஹித் ஆஸ்மி இறந்து ஒருவாரத்திற்குள் அவரது சகோதரர் காலித் ஆஸ்மி, "நான் எனது சகோதரனின் குறிக்கோளை ஏற்று செயல்படுவேன்" என அறிவித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி காலித் ஆஸ்மி தொலைபேசி வாயிலாக அளித்தப் பேட்டியில்; "நான் எனது சகோதரனின் குறிக்கோளை ஏற்றுக்கொண்டு செயல்படுவேன். அவரது பணிகளை சவாலாக ஏற்றுக்கொண்டு உரிய பங்களிப்பை செலுத்துவேன். நான் எனது உயிரைக் குறித்து அஞ்சவில்லை. குறிக்கோள்தான் முக்கியமானது. நான் இதற்காக விலைக் கொடுக்க தயாராகிவிட்டேன். இதனைத் தவிர எனது வாழ்க்கையில்
வேறொன்றுமில்லை" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு சிக்கலான வழக்குகளில் அப்பாவிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகளுக்கெதிராக வாதாடிக் கொண்டிருக்கிறார் அவர்.

தகவல்கள்:twocircles.net