Sunday, March 6, 2011

இந்தியாவில் செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 77.11. கோடியாக உயர்வு

 
புதுடெல்லி,மார்ச்.6:இந்தியாவில் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 77.11 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி மாத நிலவரமாகும். இது தவிர, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூடுதலாக 1.89 கோடி பேர் செல்போன் சந்தாதாரர்கள் ஆகியுள்ளனர்.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தகவலின் படி கம்பியில்லா தகவல் சாதனம் (செல்போன்) உபயோகிப்போர் எண்ணிக்கை 2.52 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 75.21 கோடியாக இருந்தது. ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 77.11 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புற சந்தாதாரர்களின் எண்ணிக்கை 66.65 சதவீதத்திலிருந்து 66.42 சதவீதமாகக் குறைந்துள்ளதாக டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் கிராமப்புறங்களில் செல்போன் உபயோகிப்போர் விகிதம் 33.35 சதவீதத்திலிருந்து 33.58 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தரைவழி தொலைபேசி, செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 80.61 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் 2.39 சதவீதம் கூடுதலாகும்.

மொத்தமுள்ள 77.11 கோடி வாடிக்கையாளர்களில் 54.86 கோடி பேர் மட்டுமே செல்போனை அதிகம் உபயோகிப்பவர்களாவர். மற்றவர்கள் எப்போதாவது உபயோகிப்பதாக தெரிவித்துள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு புதிதாக 33 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் இந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 15.58 கோடியாக உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் புதிதாக 32 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் இந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 12.87 கோடியாக உயர்ந்துள்ளது. வோடபோனில் புதிதாக 31லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் அந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 12.73 கோடியாக உயர்ந்தது.

புதிய நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. வீடியோகான் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 6.89 சதவீதம் சரிந்தது. 10 லட்சம் வாடிக்கையளர்கள் வெளியேறியதில் இப்போது 60 லட்சம் வாடிக்கையாளர்களே வீடியோகானில் உள்ளனர். லூப் டெலிகாம் நிறுவனத்தில் புதிதாக 17,541 வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிறுவனத்துக்கு 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இணையதளம் உபயோகிப்போரின் எண்ணிக்கை 2.70 சதவீதம் அதிகரித்து 1.12 கோடியாக உயர்ந்துள்ளது.
 

கஷ்மீர்:கடந்த ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 104 - அரசு அறிக்கை

ஜம்மு,மார்ச்.6:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த எழுச்சி போராட்ட வேளையில் 104 சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக அம்மாநில அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது.

இதில் 92 பேர் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமேற்பட்டு பின்னர் மரணமடைந்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான முயற்சியில் இதர 12 பேரும் கொல்லப்பட்டதாக கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையோ அல்லது ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடோ வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

செய்தி: ஜம்மு,மார்ச்.6:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த எழுச்சி போராட்ட வேளையில் 104 சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக அம்மாநில அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது.

இதில் 92 பேர் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமேற்பட்டு பின்னர் மரணமடைந்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான முயற்சியில் இதர 12 பேரும் கொல்லப்பட்டதாக கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையோ அல்லது ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடோ வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

செய்தி: பாலைவனத் தூது

Saturday, March 5, 2011

தொகுதி பிரச்சினை: மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியது தி.மு.க.

சென்னை, மார்ச். 5-
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர் கொள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 15 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அந்த கட்சிகளிடையே தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து வருகிறது.   இன்னும் ஒரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் வேட்பாளர் தேர்வை தீவிரமாக்கவுள்ளன. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது.   ஆனால் காங்கிரசுடனான தொகுதி பங்கீடு மட்டும் சிக்கலாகவே இருந்தது.
காங்கிரஸ் கட்சி இந்த தடவை அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை தொடர்ந்து தி.மு.க.விடம் வலியுறுத்தி வந்தது.முதலில் 90 தொகுதி கேட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிறகு படிப்படியாக அந்த எண்ணிக்கையை குறைத்தனர். 85, 80, 75, 70 என்று நடந்த பேரம் கடைசியில் 60 ஆக வந்து நின்றது.
60 தொகுதிகளைப் பெற்றுக் கொள்ள சம்மதித்த காங்கிரஸ் தலைவர்கள் திடீரென நேற்று அந்த 60 தொகுதிகள் எவை, எவை என்று அடையாளம் கண்டு, அவற்றை இறுதி செய்ய வேண்டும் என்று புதிய நிபந்தனை விதித்தனர்.
இது தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. காங்கிரஸ் நிபந்தனையை ஏற்க தி.மு.க. விரும்பவில்லை. தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் தலைவர்கள் கொடுத்து வரும் நெருக்கடி தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடும் அதிருப்தி அடைய வைத்தது. காங்கிரஸ் திடீரென 63 இடங்கள் கேட்பதும், அவை எந்தெந்த இடங்கள் என்று கேட்பதும் முறைதானா என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இதனால் தி.மு.க.-காங்கிரஸ் இடையே முறுகல் ஏற்பட்டது. இந்த சிக்கலை நிவர்த்தி செய்ய இரு தரப்பிலும் உள்ள சில தலைவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்ந்து பேசினர்.
ஆனால் இன்று மதியம் வரை அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வருவார் என்று முதலில் கூறப்பட்டது.  ஆனால் அவர் இன்று சென்னை வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே தி.மு.க.- காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு, எப்படி முடிவடையும் என்பதில் கேள்விக்குறி எழுந்தது.
இந்த நிலையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதி கேட்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்தது. மேலும் பிரச்சினை அடிப்படையில் வெளியில் இருந்து மன்மோகன் சிங் ஆட்சிக்கு ஆதரவு எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
தொகுதி பங்கீட்டு பிரச்சினை காரணமாக தி.மு.க விலகுகிறது என விளக்கம் கூறியது.. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்க விரும்பவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஒரு அவசர மடல்

வரும் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு த த ஜ சென்னையில் அவசர கூட்டத்தைக் கூட்டி,விவாதிக்க உள்ளது.இந்த நேரத்தில் அதன் தலைவர்,சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

அரசியல் வெற்றிடத்தை தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை ம ம க,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,தேசிய லீக் போன்ற கட்சிகள் மட்டுமே நிரப்பி வருகின்றன.இந்த சூழ்நிலையில் அந்தக் கட்சிகளின் சார்பாக போட்டியிடும் நம் முஸ்லிம் சகோதரர்களுக்காக தங்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்கவேண்டும்.
சில சூழ்நிலையின் பேரில்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் யூதர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நாம் நம் மார்க்க சகோதரர்களிடம் அழகிய ஒப்பந்தம் போடலாம் அல்லவா?
நம்மை அழிக்க என்னும் பா ஜ க போன்ற கட்சிகளுக்கு நாம் மறைமுகமாக உதவக்கூடாது.

நாம் தி மு க,அதிமுக ,காங்கிரஸ்,மற்றும் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் அவர்கள் நம் பிரச்னையை பேச மாட்டார்கள்.மாறாக நாம்தான்,நம் முஸ்லிம் வேட்பாளர்தான் வெற்றி பெற்றால் சட்டசபை சென்று பேசமுடியும்.நமக்கென குறைந்தது ஐந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் எனில் சட்ட சபையை நம் சமுதாய பிரச்சனைகள் பற்றி கவனம் செலுத்தி பேசும் அளவுக்கு கொண்டு சென்று இன்ஷா அல்லாஹ் சாதிக்க இயலும்.

நம்மிடையே என்னதான் பிரச்சனைகள் என்றாலும்,தங்கள் இயக்கம் ஒரு குழு அமைத்து ம ம க,முஸ்லிம் லீக்,தேசிய லீக் போன்ற கட்சிகளிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு,நம் பிரச்சனைகள் என்னென்ன இருக்கிறது,அவற்றை களைய நாம் செய்ய வேண்டியது என்ன,நீங்கள் வெற்றி பெற்றால் இப்படி செய்யவேண்டும்,நமக்குள் எவ்வித சண்டை,சச்சரவு எதுவும் இல்லாமல் சமுதாய நலன் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவோம் போன்ற கோரிக்கைகள் வைத்து,ஒப்பந்தம் போட்டு,இந்த சமுதாயத்தின்,அல்லாஹ்வின் மார்க்கம் தழைத்தோங்கவும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் உம்மத் இன்னும் வளம் பெறவும் சேர்ந்து களப்பணி ஆற்றலாம் அல்லவா?

தமிழகத்தைப் பொறுத்தவரை லட்சக்கணக்கான மக்கள் த த ஜவில் இருக்கிறார்கள்.அதன் தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள்.இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.சமுதாயம் ஒன்றுபட இனிய தருணம்.அல்லாஹ்விடம் கூலி வேண்டி - என்னைப்போன்ற லட்சக்கணக்கான மக்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளேன்.
தயவு செய்து,எல்லா முஸ்லிம் இயக்கங்களும், கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பாடுபடுவோம்,நமக்கு எதிரான சதியை இன்ஷா அல்லாஹ் முறியடிப்போம்.
எனவே,தாங்கள் கூட்டும் இந்த அவசர கூட்டத்தில் நல்லதொரு முடிவெடுக்கும்படி அன்போடு வேண்டும் உங்கள் மார்க்க சகோதரன்.

தீப்பிடித்தது மேலும் ஒரு நானோ கார் !

அகமதாபாத்தில் மேலும் ஒரு நானோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த விபுல் ஜானி என்பவர் தனது நானோ காரில் சிவரஞ்சனிகிராஸ் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து புகை வரத் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில் அவரது நானோ கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுவரை ஏழு நானோ கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் மீண்டும் ஒரு கார் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

அந்த காரில் கூடுதலாக செய்யப்பட்ட தவறான ஒயரிங் காரணமாக தீப்பிடித்திருக்காலம் என கருதுவதாக டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளித்துள்ளதாகவும் இதனை காரின் உரிமையாளரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நானோ கார்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்த்தட்டு மக்களின் கார் கனவை பூர்த்தி செய்யும் என்று எதிபார்க்கப்பட்ட, உலகின் விலை குறைந்த கார் என்று நம்பப்பட்ட டாடா நானோ கார், தொடர்ந்து எரிந்து வருவது வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


http://www.inneram.com/

Thursday, March 3, 2011

பலஸ்தீனரின் வதிவிடங்களைத் தகர்க்கும் இஸ்ரேலிய அராஜகம்

சில வாரங்களுக்கு முன்னர் லொத் பிரதேசத்தைச் சேர்ந்த பலஸ்தீனர்களின் வீடுகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் இடித்துத் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து வீடற்ற பலஸ்தீனர்கள் கூடாரங்களை அமைத்துத் தற்காலிக வதிவிடங்களாகப் பயன்படுத்தி வந்தனர். தற்போது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் முனிஸிபாலிட்டி அதிகாரிகள் 200 இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸாரின் துணையோடு மேற்படி தற்காலிக வதிவிடங்களையும் இடித்துத் தகர்த்துள்ளனர்.

ஏற்கெனவே தமது சொந்த இருப்பிடங்களை இழந்த நிலையில் கூடாரங்களில் வசித்துவந்த மக்களை அவர்களின் வதிவிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற முனைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் அங்கிருந்த பலஸ்தீனர்கள்மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடாத்தியதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஓர் அங்கவீனர் உட்பட பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவது தடவையாகவும் தமது இருப்பிடங்களை இழந்து அனாதரவான நிலையில் தெருவில் இறக்கப்பட்டுள்ள மேற்படி பலஸ்தீனர்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படவேண்டும் என உள்ளூர் அமைப்புக்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களை நோக்கி அழைப்புவிடுத்துள்ளன.

மசூதி வாசலில் போதை பொருட்கள் விற்பனை:ரவுடி கும்பல் அட்டகாசம்!

மசூதி வாசல் முன்பு ரவுடி கும்பல் போதை பொருட்கள் விற்பனை செய்வதால் பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கலகம் மூளும் அபாயமும் அதிகரித்துள்ளது.
குமரிமாவட்டம் நாகர்கோவிலுள்ள இடலாக்குடி பகுதி முஸ்லிம் இன மக்கள் பெருபான்மையாக வாழும் பகுதியாகும். இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் பிரதானமான பள்ளி வாசல் பாவாகாசிம் பள்ளி வாசல் ஆகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளிவாசல் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பல்வேறு சிறப்புமிக்க பள்ளிவாசலின் முன் பகுதி தற்போது போதை மருந்துகள்  வியாபாரத்திற்கும் இளைஞர்கள் மது அருந்தி கூத்தடிக்கும் பகுதியாகவும்  மாறி உள்ளது குறித்து  இடலாக்குடி வாழ் பொதுமக்கள் பெரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது 15க்கும் மேற்பட்ட போதை பொருள் விற்கும் கும்பல் அப்பகுதிக்கு வருகிறது. இவர்களுக்கு உள்ளூர் ஏஜண்டுகள் சிலர் உதவி செய்கின்றனர். இந்தக் கும்பல் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கஞ்சா, பிரவுண்சுகர் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். படிக்கும் இளைஞர்களை எளிதில் இந்தக் கும்பல் தனது வலைக்குள் சிக்க வைத்து விடுகிறார்கள். வெளிநாட்டில் தந்தை வேலை  பார்ப்பதால் கையில் அதிக பணம் புழங்கும் இப்பகுதி இளைஞர்கள்  தங்களது எதிர்காலத்தை அதல பாதாளத்திற்குத் தள்ளும் இத்தகைய போதைப்பொருள் கும்பலின் கைகளில் எளிதாக சிக்கி விடுகிறார்கள்.

சமூகத்தைச் சீரழிக்கும் இப்பாதக‌ செயல் குறித்து வெளிப்படையாக பேசுவதற்குக்கூட அச்சப்படும் அளவுக்கு ரவுடி கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இவர்கள்மீது காவல்துறை கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

25 காசு நாணயம் இனி செல்லாது!

25 காசு மற்றும் அதற்கும் குறைவான மதிப்புடைய நாணயங்களைப் புழக்கத்தில் இருந்து அகற்றிட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
"இந்திய நாணயச் சட்டம் 1906 - ன் கீழ், வரும் ஜூன் மாதம் 30 - ஆம் தேதிக்குப் பிறகு 25 காசு நாணயம் செல்லாது. இவற்றை சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகளில் தற்போது மாற்றிக் கொண்டு அவற்றுக்கு இணையான பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மலையிலிருந்து லாரி உருண்டு 32 பேர் பலி!

மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து உருண்டு பள்ளத்தில் விழுந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் நேற்று இரவு ஒரு லாரியில் 40-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சியில் பங்கேடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் லாரி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து உருண்டு 300 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் 30 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் உடல்கள் மலை பகுதியில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மீட்பு குழுவினர் அவற்றை இன்று காலை மீட்டனர்.
இதேபோல் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பராமூர் என்ற இடத்தில் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் ஒன்று சாலை ஓரத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் பாய்ந்தது. இதில் 9 பேர் பலியானார்கள். 2 விபத்துக்களிலும் சேர்த்து ஒரே நாளில் 41 பேர் பலியாகி உள்ளனர்.

அன்பு சகோதரர்களின் கவனத்திற்கு

சில தினங்களாக நமது சகோதரிகளின் செல்லிற்கு ஒரு பெண் போன் செய்து நமது பெண்களின் பெயரை சரியாக சொல்லி அவர்களின் கணவரின் பெயரையும் சொல்லி துபாயில் உங்கள் கணவர் இருக்கும் ஃபிளாட்டின் அருகில் நாங்கள் தங்கி உள்ளோம், தற்பொழுது வெகேசனில் வந்துள்ளோம் உங்கள் கணவர்தான் இந்த நம்பர் கொடுத்து பேச சொன்னார். நல்லா இருக்கீங்களா, பிள்ளைகள் நல்லா இருக்கா என்றெல்லாம் விசாரித்து அடுத்த வாரம் திரும்ப துபாய் செல்கிறோம் போகும் முன் வந்து பார்த்து விட்டு செல்கிறோம் என்று சொல்கிறார்கள், சம்பந்தப்பட்ட சகோதரிகள் தங்கள் கணவருக்கு போன் செய்து விபரம் கேட்கும் பொழுது அது பொய்யான தகவல் என்று தெரிகிறது.

இவர்களின் நோக்கம் என்ன?உறவினர்கள் யாரும் கேலி செய்கிறார்களா என்று விசாரிக்கும் பொழுது அதுவும் இல்லை!அவர்களுக்கு நமது சகோதரிகளின் போன் நம்பர் எப்படி கிடைக்கிறது, எப்படி நம்மை பற்றிய தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன? மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இது.

வெளிநாடுகளில் உள்ள சகோதர்கள் அனைவரும் உடனடியாக தம் தம் மனைவியருக்கும், குடும்பத்தாருக்கும் இத்தகவலை தெரிவித்து இது போல் யாரும் போன் செய்து பேசினால் வேறு எந்த தகவலும் கொடுக்கவேண்டாம் என எச்சரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

20.02.11 அன்று இரவு 09.30 மணிக்கு எனது மனைவிடம் இருந்து call me என்று ஒரு SMS வந்தது உடனடியாக நான் அவருக்கு போன் செய்யும் பொழுது லயன் பிசியாக இருந்தது, 5 நிமிடம் கழித்து மீண்டும் அழைத்தேன்.
மனைவியின் குரலில் ஒரு பதஷ்டம் என்ன என்று கேட்கும் பொழுது உங்களுக்கு SMS செய்த மறு நொடி ஒரு போன் வந்தது நீங்கள் தான் என்று நினைத்து நலம் விசாரித்தேன் அதற்கு அவன் சொல்லு சொல்லு என்று சொன்னான், மறுபுறம் குரலில் வித்தியாசம் இருந்ததால் உடனே கட் செய்து விட்டேன் திரும்பவும் அவன் நம்பரில் இருந்து உங்கள் பெயர் மட்டும் போட்டு SMS வந்தது மீண்டும் அவன் போன் செய்தான், நீங்கள்தான் என்று நினைத்து மறுபடியும் எடுத்தேன், யார் பேசுவது? இது எந்த ஊர்? என்று கேட்கிறான், நான் பயந்து வைத்துவிட்டேன் என்று சொன்னார்கள்.
நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது மீண்டும் அந்த நம்பர் வருவதாக சொன்னார்கள் நம்பர் என்ன வென்று கேட்டு வாங்கிக்கொண்டு நான் அவனுக்கு போன் செய்தேன்,உறக்கத்தில் இருந்து எடுப்பவனைப் போல் எடுத்து ஹலோ என்று சொன்னான், யார் நீ? உனக்கு எந்த நம்பர் வேண்டும் ஏன் இதற்கு SMS செய்தாய் எப்படி உனக்கு இத நம்பர் கிடைத்தது என்று கேட்டவுடன் இணைப்பை துண்டித்துவிட்டான்.
ஆகையால் நண்பர்களே, நம்மை நோக்கி எதுவோ? யாரோ? குறி வைக்கிறார்கள் அதில் நமது குடும்பத்தார்கள் சிக்கி விடாமல் இருக்க அனாமத்தான கால்கள் எதுவும் வந்தால் அதற்கு பதில் கொடுக்க வேண்டாம் என்று தங்கள் மனைவிமார்களிடமும் குடும்பத்தார்களிடமும் எச்சரிக்கை செய்யவும் .
தகவல் : அதிரை அமீன்.

Wednesday, March 2, 2011

இந்திய முஸ்லிம்களின் அவல நிலையும் - அதற்கான தீர்வும்!!!


இந்தியநாடு சுதந்திரம் பெற்ற பின்பு இன்றுவரையுள்ள எந்த ஒரு அரசும் இந்திய முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொண்டதில்லை என்பதே உண்மை. இந்திய பாகிஸ்தான் பரிவினையின்போது முஹம்மது அலி ஜின்னா மாத்திரம் பிரிவினைக்கு ஆதரவு அளித்தபோது, மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்களுடன் கைகோர்த்து கொண்டார்கள்.

 தனிமனிதராக நின்ற முஹம்மது அலி ஜின்னா, தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டார். ஆனால் இந்திய மக்களுடன் கைகோர்த்த மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் உள்ளடங்கிய இந்திய முஸ்லிம் சமுதாயம் சாதித்தது என்ன என்பதை இன்றைக்கும் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது. முஹம்மது அலி ஜின்னாவின் பின்னால் சென்ற மூன்றுகோடி முஸ்லிம்கள் தங்களது அடிப்படை உரிமைகளை(குறிப்பாக தங்களது வணக்க வழிபாட்டு உரிமைகளைப்) பெற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பிரிவினையை எதிர்த்து அல்லது பரிவினைக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவிலேயே வாழ்ந்து வரும் எஞ்சியுள்ள முஸ்லிம்கள் மிரட்டப்படுவதோடு மட்டுமில்லாமல், மூன்றாம்தர குடிமக்களாகவும் நடத்தப்படுகிறார்கள். மதச்சார்பின்மை காற்றோடு பறக்கவிடப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 9 கோடிபேரை மக்கள் தொகையாக கொண்டிருந்த தலித் இயக்கம் டாக்டர் அம்பேத்கார் என்ற தனி மனிதரின் தலைமையில் 150 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

ஆனால் 7 கோடிபேரை மக்கள் தொகையாக் கொண்டிருந்த முஸ்லிம் இயக்கங்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் தலைகுனிவைச் சந்தித்தது. முஸ்லிம்கள் மாத்திரம் ஒரே தலைமையின்கீழ் ஒரு தனிக்கட்சியில் நின்று தேர்தலைச் சந்தித்து இருந்தால் அநேகமான தொகுதிகளில் நாம் நிச்சயமாக வெற்றி பெற்றிருப்போம். ஆனால் மதச்சார்பற்ற மற்ற கட்சிகளுக்கு கொடி தூக்கியதன் விளைவு கட்சிகள் வெற்றிபெற்றதேத் தவிர, அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பதே உண்மை நிலையாக இருந்தது.
இந்தியர்களுடன் தோளோடு தோள் நின்ற காஷ்மீரத்து சிங்கம் ஷேக்அப்துல்லா தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வடகோடியாம் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு தென்கோடியாம் தமிழகத்தில் உள்ள கோடைக்கானல் சிறையில் அடைக்கப்பட்டார். 

ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்றவர்கள் ராஜ பரம்பரையைத் துறந்து, இந்திய ராணுவத்திற்காக தங்களை அர்பணித்துக் கொண்டார்கள். முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு, சீக்கியர்கள் மற்றும் கூர்க்கா போன்றவர்களுக்கு மாத்திரம் ராணுவத்தில் தனி மரியாதைச் செலுத்தப்பட்டது. அவர்களுக்கென்று ராணுவத்தில் தனி பிரிவுகளே உருவாக்கப்பட்டன. கேரள முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டனர். மராத்திய மாநில முஸ்லிம்கள் குடிசைகளில் தஞ்சம் புகுந்தனர். உத்திரபிரதேசம், பீகார் மற்றும் குஜராத் மாநில முஸ்லிம்கள் அனைவரும் மதக்கலவரங்களால் மிரட்டப்பட்டு, முடமாக்கப்பட்டனர். இன்னும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தலைதூக்க முடியாத அளவுக்கு மிரட்டப்பட்ட நிலையிலேயே தங்களது வாழ்வைத் தொடர்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநில முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. இதற்கு காரணம் கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.

1984 ஆம் ஆண்டு பாரதப்பிரதமர் இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு டெல்லியில் நடந்த கலவரத்தில் ஏரத்தாள 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். வெறும் 2கோடி மட்டுமே மக்கள் தொகையினைக் கொண்ட சீக்கியர்களின் அரசியில் பிரிவான அகாலிதளம் நீதிமன்றத்தில் போராடி கலவரத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொடுத்ததோடு மட்டுமின்றி முன்னாள் மத்திய அமைச்சரான பி. சி. சுக்லா மற்றும் அவரது ஆதரவாளர்களையும் சிறையில் கம்பி எண்ண வைத்தது.

 பீவண்டி, மீரட், பகல்பூர், மும்பை, லக்னோ, டெல்லி, குஜராத், கோயம்புத்தூர் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரங்களில் ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டன. அரசு பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காதது மட்டுமில்லாமல், மேற்கூறப்பட்ட இடங்களில் நடைபெற்ற கலவரங்களுக்கு காரணமானவர்களில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவேயில்லை என்பதே உண்மை நிலை.
மகாத்மா காந்தி பிராமணர்களால் கொல்லப்பட்டார்.
இந்திரா காந்தி சீக்கியர்களால் கொல்லப்பட்டார்.
ராஜீவ் காந்தி இலங்கையைச் சார்ந்த தமிழ்பேசும் இந்துக்களால் கொல்லப்பட்டார்.
அவர்களெல்லாம் இன்றைக்கு தேசாபிமானிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் எந்த பாவமும் அறியாத எந்த குற்றமும் செய்யாத, இந்திய அரசியல் பிரிவுச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டவர்களாகிய நாம் தேசிய எதிரிகளாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளோம். 

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் நிலைமைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, பாகிஸ்தானோடு எந்;த சம்பந்தமும் இல்லாத ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லிம்களை தண்டிக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால் பாகிஸ்தான் செய்யும் செயல்பாட்டுக்கு இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எப்படி பொறுப்பாவார்கள்?
இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை
இன்றைய இந்திய முஸ்லிம்கள் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக முற்றிலும் வலுவிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 

முஸ்லிம்களுக்கென இருந்த அடிப்படை உரிமைகளைக் கூட கேட்டுப் பெறத் தகுதியில்லாத அளவுக்கு வலுவிழந்து போவதற்கு முன்னால், முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அணியில் கீழ் ஒன்றுபடுவது இன்றைய சூழ்நிலையில் மிக மிக அவசியம். மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் மதவாத கட்சிகளின் வளர்ச்சியை முறியடிக்க வேண்டுமெனில், இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அணியின் கீழ் ஒன்றுபடுவது அவசியம். ஆனால் நாம் ஒன்றுபடுவதற்கு பதிலாக, சிறு சிறு கூட்டங்களாக பிரிந்துபோய், சிதறுண்டு கிடக்கும் மதவாத கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட உதவிக்கொண்டிருக்கிறோம். இன்னும் காலம் கடந்து செல்லும் முன்பு இந்தியாவின் இன்றைய சூழ்நிலையிலாவது முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியின் கீழ் ஒன்று படுவோம்.
சிறுபான்மையினமான முஸ்லிம்களின் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து அரசியில் கட்சிகளும் முஸ்லிம்களுக்கான நலன் தரும் திட்டங்களை தேர்தல் கால வாக்குறுதிகளாக வழங்குகின்றன. 

ஆனால் தேர்தலில் முஸ்லிம்கள் அளித்த வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற பின்பு, முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வேலையே தொடர்ந்து செய்து வருகின்றன இந்திய அரசியில் கட்சிகள். தேர்தலுக்கு முன்பு முஸ்லிம்களின் நலன் காக்கும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ சென்ற பிறகு தங்களது சொந்த நலனுக்கு பயன்தரும் திட்டங்களுக்கு மாத்திரமே தலைசாய்க்கிறார்கள். இவைகளையெல்லாம் சிந்தித்து கொண்டிருப்பதைவிட நமக்கென்று ஒரு தனி அமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே சாலச் சிறந்தது.
இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிய அரசியல் அமைப்புகள் பிற அரசியில் கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி முஸ்லிம் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. தொகுதிகளை ஒதுக்கும் அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. 

உண்மையில் முஸ்லிம்களுக்கு தொகுதிகளை வழங்கும் இக்கட்சிகள் செய்யும் இச்செயல் முஸ்லிம்களுக்கு செய்யும் நன்மையான காரியமா என்றால் இல்லை. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதேத் தவிர, முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை.
எந்த அரசியில் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை அவர் முஸ்லிம் என்கிற காரணத்தால் மாத்திரம் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்வோம் எனில், சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் இதுபோன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து அல்லது பதவியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்கிற பயத்தின் காரணத்தால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத சூழ்நிலை. 

இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகளை சட்டசபைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தேர்ந்தெடுத்து அனுப்புவதால் உள்ள பயன்தான் என்ன? இதுபோன்ற முஸ்லிம் அரசியில்வாதிகள் அவைகளில் பேச அனுமதிக்காத, தம்மை மதிக்காத அரசியல் கட்சிகளில் ஏன் இருக்கிறார்கள்? இதுபோன்ற பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே. அதில் எந்த வித்தியாசமும் இல்லை.
முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில் கட்சிகளும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை வேட்பாளர்களாக நிறுத்தும். இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் பயன் உண்டா என்றால் இல்லை. முஸ்லிம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்பதை அறிந்திருக்கும் அவர்கள் தங்களது சுயநலம் கருதி இச்செயலை செய்கிறார்களேத் தவிர, வேறில்லை. முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என கண்கூடாகத்தெரியும் இது போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனவைரும் ஒன்றுகூடி ஒரு பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது?

எனதருமை முஸ்லிம்களே! மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்திய முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி ஓரங்கட்டியதேத் தவிர, வேறு சாதித்தது என்ன? முஸ்லிம்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டாலும், சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆதரவு யாருக்காக? எதற்காக? என்பது இவ்வாறு ஆதரவு அளிப்பவர்களுக்கே வெளிச்சம். திறந்த மனதுடன், சார்பற்ற நிலையில் உங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்தி இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்து சற்றே சிந்தனை செய்து பாருங்கள். இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு உண்டான தீர்வு தெளிவாகக் தெரியவரும்.

1. இதற்கான தீர்வுதான் என்ன?
2. இந்த தவறான அச்சுறுத்தலுக்கான தீர்வுதான் என்ன?
3. நாம் இழந்த உரிமைகளை மீண்டும் திரும்பப் பெறுவது எப்படி?
இந்திய மக்கள் தொகையில் 30கோடி பேர் முஸ்லிம்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெறும் 10க்கு மேல் ஒருபோதும் இருந்ததில்லையே. ஏன்?

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு மாத்திரம் வாக்களிப்போம் எனில், நிச்சயமாக இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நமக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிந்து, இந்திய அரசியல் கட்சிகளில் பல கட்சிகளுக்கும் வாக்களிப்பதால் நம்முடைய வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டு, நமக்குள்ளேயே வலுவிழந்து போகிறோம். இதற்கு உதாரணமாக சீக்கியர்களை (ஒருசில தனி நபர்களைத் தவிர) எடுத்துக் கொள்வோம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் மாத்திரம் இருக்கும் சீக்கியர்கள், இந்திய அரசியலில் கோலோச்ச முடியும் என்றால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் இருக்கும் நாம் ஏன் மற்றவர்களிடம் மண்டியிட வேண்டும்? 

இது ஏனென்றால் நாம் நமக்குள்ளேயே ஒற்றமையின்றி பல பிரிவுகளாக பிரிந்து, தலா 1 சதவீதம் வீதம் இந்திய அரசியல் கட்சிகள் 25க்கும் வாக்களிப்பதால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவிகிதம் உள்ள நம்முடைய பலம் 1 சதவிகிதமாக வலுவிழந்து விடுகிறது. ஏதேனும் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் நம்முடைய பலம் வெறும் 1 சதவிகிதமாகவே பிரதிபலிக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25 சதவீதம் இருக்கும் நம்முடைய பலம் ஆட்சி மன்றம் என்று வரும்போது வெறும் 1 சதவிகிதம் மட்டும்தான் பிரதிபலிக்கப்படுகிறது என்பதை எண்ணி நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்நிலையைக் காணும் முழு உலகமும் நம்மைப் பார்த்து நகைப்பது நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதச்சார்பற்ற இந்திய அரசியல் கட்சிகளின் பிரித்தாளும் சூட்சிக்கு முஸ்லிம்களாகிய நாம் பலிகிடாவாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம், தமிழகத்தில் உள்ள திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் தங்களது ஆதரவு இன்றி மத்தியில் எந்த ஒரு ஆட்சியும் அமைய முடியாது என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. காங்கிரஸும், பிஜேபியும், மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட மாநில கட்சிகளின் காலடியில் வந்து விழுந்து கிடக்கின்றன. தெலுங்கு தேசம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் முன்னால் தங்களுக்குத் தேவையானவைகள் கொடுக்கப்பட வேண்டும், இல்லையெனில் ஆதரவு திரும்பப் பெறப்படும் என்பதை நிபந்தனையாக வைத்து தாங்கள் நினைப்பதைச் சாதித்துக் கொள்கின்றன. 

இதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு இருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை. இதே நிலையை நாம் மேற்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியும். நமக்கென்று ஒரு தனி அமைப்பு கண்டு, அந்த அமைப்பின் மூலமாக மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பினால் நாமும் நம்முடைய முக்கிய பிரச்னைகளுக்கான தீர்;வுகளை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக பாதுகாப்பு, சமநீதி, சட்ட உரிமை, இடஒதுக்கீடு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான நிவாரண உதவி போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

தமிழகத்தில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நடத்தப்பட்ட வகுப்பு கலவரத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் இந்து தீவரவாதிகளால் கொல்லப்பட்டனர். அக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் எவருக்கும் இதுவரை அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு உதவித் தொகையும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னால் அதே கோவை மாநகரில் நடைபெற்ற வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் வீதம் அரசுத் தரப்பிலிருந்து உதவித் தொகை வழங்கப்பட்டது. ஏன் இந்த பாரபட்சம்? நம்முடைய உரிமையை சட்டசபையில் எடுத்துரைக்க சரியான பிரதிநிதித்துவம் நம்மிடையே இல்லாததே காரணம். ஆனால் அதேசமயம் இந்து மக்களின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கையை சட்டசபையில் எடுத்துரைத்தனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்ற எச்சரிக்கை வேறு. 

ஆட்சி கவிந்துவிடும் என்று அச்சம் கொண்ட அரசு, இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் என உதவித் தொகை வழங்கியது.
இந்திய முஸ்லிம்களுக்கென தனியாக ஒரு அரசியல் அமைப்பு காண்பது இவ்வேளையில் மிகவும் அவசியமாகிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு இல்லையென்றால், மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாக்கப்பட முற்றிலும் அவசியம் முஸ்லிம்களிடையே ஒற்றுமை. சமுதாய நலனை கருத்தில் கொண்டு நாம் விடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கும் கட்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்க நம்முடைய ஆதரவை வழங்கலாம். நமக்கென்று ஒரு தனி அரசியல் அமைப்பு இருந்திருந்தால், இன்றைக்கு முஸ்லிம்களாகிய நாம் அனுபவிக்கும்; இந்த சித்திவதைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. நாட்டை ஆள வேண்டுமெனில் முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்ற நோக்கத்திற்காவது, ஆளும் கட்சிகள் நம்மை சிறப்பாக நடத்தியிருக்கும்.

இழைக்கப்படும் கொடுமைகளையும், நடத்தப்படும் சித்திரவதைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதற்கான சரியான தீர்வு இல்லையா? அல்லது நேரான வழிகாட்ட சரியான தலைமை இல்லையா? மத்திய மற்றும் மாநில அரசை எதிர்த்து நடத்தப்படும் கண்டன ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் - கண்டன ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறும். எப்போதும்போல் முஸ்லிம்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்படுவர் என்பது நிச்சயம்.
பிரச்னைகளுக்கான தீர்வும் அடுத்த கட்ட நடவடிக்கையும்
நாம், நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும். அதற்குரிய சரியான வழிமுறை என்ன? இக்கேள்விக்கான விடையை கண்டறிய பல நாட்களாக சிந்தித்து, ஆய்வு செய்து, அறிந்த விதத்தில் கிடைத்த தீர்வுகள் 
இரண்டுதான்.

1. அறிவு
2. ஆயுதம்
ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி பெற்ற வரலாறு உலகில் ஒரு சில நாடுகளில் சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தாலேயே அழிவார்கள் என்பது நிச்சயம். இன்றைய சூழ்நிலையில் ஆயுதம் ஏந்தி போராடி கிடைக்க வேண்டிய உரிமையைப் பெற்றுக் கொள்வது என்பது சாத்தியக்கூறானது அல்ல. ஆசியாவிலேயே அதிநவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த சீக்கியர்கள், ஆயுதப் போராட்டத்தில் தோல்வியடைந்ததை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக அறிவு என்னும் ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். பிளவுபட்டிருந்த சீக்கியர்கள் அனைவரும் ஒன்றிணைந்தார்கள். தமக்கென ஒரு அரசியல் இயக்கம் கண்டார்கள். 

தமக்காக சட்டசபையிலும், நாடாளு மன்றத்திலும் வாதாடக்கூடிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். எல்லா பிரதான அரசியல் கட்சிகளையும் தங்கள் பின்னால் ஓடிவரச் செய்தார்கள். ஆயுதங்களால் வெல்ல முடியாத காரியங்களை உயர் மதிநுட்பத்தால் வெற்றி கொள்கிறார்கள்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் மதவாதம் பேசித் திரிந்த பால் தாக்கரே போன்றவர்கள் பல பேர் கொல்லப்பட காரணமாக இருந்தாலும், மத்திய மாநில அரசுகள் பால் தாக்கரே மீது கைவைக்க தயங்குகின்றன. காரணம் பால் தாக்கரே போன்றோர் அறிவு என்றும் ஆயுதம் ஏந்தி மராத்திய மண்ணின் மைந்தர்களை ஒன்றிணைத்து, பல சட்டசபை மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டு, கோரிக்கைகள் மூலம் இவ்வுலகில் அவர்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இந்திய முஸ்லிம்கள் அனவைரும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைவது. நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பது. கண்ட அரசியல் அமைப்பின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு நமக்கென நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் என பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பது. இறைவனின் நாட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் முயற்சியில் மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால் இந்திய முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்.
இந்தியாவில் முஸ்லிம்களின் பலம்
மாநிலத்திற்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர் என்று கணக்கிட்டால் கூட இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களில் 90 நாடாளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக அனுப்பி வைக்க முடியும். இது பற்றி ஆழ்ந்து சிந்தித்து தலைமையேற்று நடைமுறைப்படுத்தி நடத்திச் செல்ல யார் தயாராக இருக்கிறார்கள்?

இந்திய முஸ்லிம்களுக்கு தமிழக முஸ்லிம்கள் வழிகாட்டட்டும்
இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம் வழிகாட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும் உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.

தமிழக முஸ்லிம்களின் பலம்
தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது. 

அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:
1. நன்னிலம்
2. கடலாடி
3. கேயம்புத்தூர் மேற்கு
4. மதுரை மத்தி
5. திருச்சி
6. சேலம்
7. அரவக்குறிச்சி
8. குடியாத்தம்
9. ராணிப்பேட்டை
10. ஆற்காடு
11. சென்னை துரைமுகம்
12. சேப்பாக்கம்
13. ஆயிரம் விளக்கு
14. திருவல்லிக்கேணி
15. எக்மோர்
16. சென்னை பூங்காநகர்
17. ராயபுரம்
18. திண்டுக்கல்
19. நத்தம்
20. பெரியகுளம்
21. பாளையங்கோட்டை
22. திருச்செந்தூர்.

இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 45-55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 4-6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன், தமிழக அரசியலைப் பொறுத்தவரை நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும் உருவாக்க முடியும்.
தமிழகத்தின் 6 மாநகராட்சிகளில் முஸ்லிம்களே மேயர்கள் என்பதையும் உறுதியாகக் கொள்ளலாம். சென்னையைத் தவிர தமிழத்தில் மற்றுமுள்ள மாநகராட்சிகளில் ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெறுபவரே மேயர். மதுரை, திருச்சி மற்றும் கோவை மாநகராட்சிகள் 3 இலட்சம் முஸ்லிம் வாக்களர்களைக் கொண்டவை. சேலம் மற்றும் நெல்லை மாநகாராட்சிகள் இரண்டரை லட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.

சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்சடசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட முடியாது என்கிற நிலையை தமிழக சட்டசபையிலும் உருவாக்கமுடியும். தமிழகத்தில் மட்டுமில்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும் இந்நிலையே உருவாகும். இதே நிலை தொடருமெனில் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை நிலைக்கு உயரும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 முதல் 800 பள்ளிவாயில்களை ஒன்றிணைப்பது மிகவும் எளிதான காரியம். தமிழகத்தில் உள்ள 8000 பள்ளிவாயில்களைச் சார்ந்த 1ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில், நாம் நினைக்கும் எதையும் சாதிப்பது எளிது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். 

இது நேர்த்தியான, அதேசமயம் யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாத அமைதியான முடிவு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கு இதைத்தவிர ஒரு சரியான தீர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் இன்றி இந்த பூமியில் நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பது உறுதி.
இதுபோன்ற பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா? 

தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோமே. ஏன்? முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கட்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பின்புள்ள நிலைமையை ஆய்ந்தறிந்து, முஸ்லிம்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களுக்கு நம்முடைய ஆதரவை வழங்கலாம். மானம் மற்றும் சுயமரியாதை ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இக்கட்டுரையை மீண்டும் மீண்டும் படியுங்கள். முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாத எந்த ஒரு அரசியல் கட்சியையும் நம்பாதீர்கள். முஸ்லிம்களே! அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவோம். நமது ஒற்றுமையின் மூலம் நாம் விரும்பியவைகளை உடனடியாகப் பெற முடியும். இந்த முடிவை சிந்தித்து செயல்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம். நம் அன்றாட வாழ்க்கை எளிதாக அமையும். நாம் நமது அடிப்படை உரிமையான இறைவழிபாட்டு உரிமைகளை தங்கு தடையின்றி தொடரலாம். நம் வருங்கால தலைமுறையும் பாதுகாப்பான வாழ்வைத் தொடரும்.

தேர்தலில் நாம் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் எனில் நஷ்டம் நமக்குத்தான். ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவரும். அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மில் சிலர் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் ஏற்படும் நஷ்டம் நமக்கே! மற்ற அரசியல் கட்சிகள் நம்மை எள்ளி நகையாடுவதுடன், அதிக பயனடைவது அவர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனதருமை முஸ்லிம் சொந்தங்களே! நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பதும், அந்த அமைப்பின் மூலம் நமக்காக பாடுபடக்கூடிய முஸ்லிம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதுமே இனி நம்முடைய தலையாய பணியாக இருக்க வேண்டும்.
நாளைய உலகம் நம் கையில் என்பதை தெளிவாக தெரிந்த நாம், மரணித்த பிணம் போல் நடமாட வேண்டுமா?

நாம் நம்முடைய குறிக்கோளில் தெளிவாக இருப்போம். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் பின்னால் கைகட்டி நிற்க வைப்போம். அமைதியாக நாம் நம்முடைய குறிக்கோளை எட்டுவோம். நமது உறுதிமொழி நம் வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமைக்கு அடிப்படையாக அமையட்டும். எந்த காரணம் கொண்டும் முஸ்லிம்களின் ஒற்றுமை என்னும் அடிப்படை குறிக்கோளை விட்டு நம் கவனம் சிதறாமல் இருக்கட்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அருள் புரியட்டும்!

நன்றி : சகோ. Naseerudeen Mohammed

சட்டமன்றத் தேர்தல் கூட்டணிஜுரம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது; அரசியல் மேடையில் கூட்டணிக் கட்சிகள் விறுவிறுப்புப் பெற்று வருகின்றன; பெயர் தெரியாக்கட்சிகளும் பிரபலப்படுத்திக் கொள்ளும் காலமிது; லெட்டர்பேடு கட்சிகளும் பலமான கட்சிகளாகக் காட்டிக் கொள்ளும் நேரமிது; இட பேரத்தில்
மும்முரமாக அனைத்துக் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் சமயமிது; மொத்தத்தில் தேர்தல் ஜுரத்தில் கட்சிகள் பலவும் கை, கால் நடுங்கிக் கொண்டிருக்கும் தருணம் இது.
 
          வழக்கம்போலவே தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஓர் அணி; அ.தி.மு.க. தலைமையில் மற்றோர் அணி; ஆக இவ்விரண்டு அணிகளுக்கிடையேதான் மோதல் அமையும்; மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு இன்றைய சூழலில் மிகக் குறைவாகவே தென்படுகிறது;
தவறிப் போய் மூன்றாம் அணி உருவானாலிம் அது சாதிக்கப்போவது பெரிய அளவில் ஒன்றுமில்லை.
 
          தி.மு.க. அணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இலவச வீடு, நிலம், பட்டா, டி.வி., சைக்கிள், கேஸ், அடுப்பு, 1 கிலோ 1ரூ.அரிசி, அரசு ஊழியர் சம்பள உயர்வு, போனஸ், இலவசக் காப்பீடு, இலவச ஆம்புலன்ஸ்
உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் அடிமட்ட மக்களைச் சென்று சேர்ந்திருக்கும் சாதனைகளை முன் நிறுத்தி வரும் சட்டமன்றத் தேர்தலைத் தி.மு.க. எதிர்நோக்கும்.
 
            அ.தி.மு.க. அணியில் வலது மற்றும் இடது கம்யூனிஸ்டுகள், த.மு.மு.க.வின் ம.ம.க. முதலிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. விலைவாசி ஏற்றம், அலைக்கற்றை விவகாரம், மின் தடை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு முதலியவற்றை முன் நிறுத்தித் தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. அணி 
வியூகம் அமைக்கும்.
 
            பா.ம.க. இப்போதும் அதிக சீட்டுகள் பெறுவதற்காகக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது; தி.மு.க. அணியில் “இருக்கிறோம் ஆனால் இல்லை”, “இல்லை ஆனால் இருக்கிறோம்” என்பதுபோல ஆட்டம் காட்டுவது ஏற்கனவே இற்றுப் போயிருக்கிற அந்தக் கட்சியின் நம்பகத்தன்மையை மேலும் குலைக்கவே செய்யும்.நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஆய்ந்து பார்த்துப் பக்குவமாகச் செயல்பட்டால்தான் பா.ம.க. இந்தத் தேர்தலில் ஒரு நிலைப்பாட்டை எய்தமுடியும். பா.ம.க.வைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க.வின் கதவு அடைபட்டுப் போயிற்று என்றே
கூறலாம். ஒருவேளை விஜயகாந்த் விலகிக் கொண்டால் அ.தி.மு.க. வின் பார்வை பா.ம.க. மீது விழக் கூடும். பா.ம.க.வின் “கூட்டணி ஆட்சியில் இடம் பெற்று அனுபவிப்பது, தேர்தல் நேரத்தில் அணி மாறுவது” போன்ற தன்மைகளைக் காங்கிரஸ் விரும்பவில்லை. தி.மு.க. அணியில் அதைச்
சேர்த்துக் கொள்ளக்கூடாதென்று காங்கிரஸ் கருதுவது இன்றைய தேர்தல் சூழலில் சரியானதாக இருக்கமுடியாது.
 
             விஜயகாந்த் அ.தி.மு.க. அணியில் இடம்பெறுவது ஏறகுறைய உறுதியாகிவிட்ட ஒன்றுதான் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எத்தனை சீட்டுகள் என்பதில்தான் இழு-பறி நிலை நீடிப்பதாகக் கூறுகிறார்கள். “மக்களுடன் தான் கூட்டணி” என்று புறப்பட்ட விஜயகாந்த் இப்போது
அரசியல் எதார்த்த நிலையைப் புரிந்துகொண்டிருக்கிறார். அதே நேரத்தில் “கட்சியை அடகு வைக்கமாட்டேன்”  என்பதிலும் கவனமாக இருக்கிறார். ஆகவே பலமான ஒரு கட்சியாக வளர்த்துக் கொள்வதில் அவரது கவனம் முழுமையாக உள்ளதால் “எடுத்தேந்கவிழ்த்தேன்” என்றில்லாமல் 
நிதானமாகச் செயல்பட்டு வருகிறார். பண்ருட்டி இராமச்சந்திரன் போன்றோரின் பழுத்த அரசியல் அனுபவம் அவருக்கு நன்கு பயன்படுகிறது என்றே கூறலாம். 40 இடங்களுக்கும் கூடுதலாகவே விஜயகாந்த்தின் தே.மு.தி.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
              தலித் அமைப்புகளில் தொல்.திருமாவளவன் தி.மு.க. அணியிலும், டாக்டர் கிருஷ்ணசாமி அ.தி.மு.க. அணியிலும் இடம் பெறுகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் தொல்.திருமா தமது கட்சியைப் பெருமளவில் வளர்த்திருக்கிறார் என்றே சொல்லலாம். அந்தக் கட்சியின் செல்வாக்கும் அதிகரித்திருக்கிறது.இதனால் இரட்டை இலக்க இடங்களைத் தி.மு.க. அணியில் பெற அவர் முயற்சிக்கிறார். தென் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்குப் பெற்றிருந்த டாக்டர் கிருஷ்ணசாமியின் இன்றைய நிலை மிகப் பிரமாதம் என்று சொல்வதற்கில்லை.அ.தி.மு.க.வில் அவரால் அதிக இடங்களைப் பெறமுடியாது என்பதே உண்மைநிலை.
 
             இரு கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தமட்டில் அணிகள் மாறினாலும் அன்றும் இன்றும் ஒரே நிலைதான். அவர்களால் தமிழகத்தில் “பத்திரிகை அரசியல்” பரபரப்புக் காட்டமுடியுமே தவிர, பாமர மக்களிடையே ஊடுருவி, கட்சியைப் பலப்படுத்தமுடியாத சூழலே காணப்படுகிறது. ஏற்கனவே
அவர்கள் பலமாக இருந்த இடங்கள் இப்போது பலவீனமாகக் காட்சியளிக்கின்றன என்பதே சரியான கணிப்பாக இருக்கமுடியும். அதனால் சென்றமுறை பெற்ற இடங்களை இம்முறை பெறுவதற்கு அ.தி.மு.க. அணியில் அவர்கள் பலமான முயற்சிகளை எடுக்கவேண்டியிருக்கிறதென்று கூறுகிறார்கள்.
 
             கார்த்திக், சரத் குமார் போன்ற நடிகர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கிறார்கள்.நடிகர் விஜய் தந்தை சந்திரசேகர் இருமுறை அ.தி.மு.க. தலைமையைச் சந்தித்துள்ளார்.இயக்குநர் சீமான், “தி.மு.க.வை வீழ்த்தவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தமது இயக்கம், அதன் குறிக்கோள்,
கோட்பாடுகள்,எதிர்காலச் செயல்பாடுகள் எவற்றையுமே சீர்தூக்கிப் பார்க்காமல், அ.தி.மு.க.வை ஆதரிக்கிறார்” எனக் கவிஞர் தாமரை போன்ற அவருடைய ஆதரவாளர்கள் புலம்புகிறார்கள். எந்தெந்த வகையில் வந்தாலும் சரி எல்லோரையும் அரவணைத்து இந்தமுறை பலமான அணியை
அமைக்கவேண்டுமென்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடாகவுள்ளது.
 
               கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மணடலத்தில் 12 இடங்களில் போட்டியிட்டுச் சுமார் ஆறு இலட்சம் வாக்குகளைப் பெற்றுத் தனது பலத்தை நிரூபித்திருக்கிறது. குறிப்பாகக் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் இக் கட்சி ஓரளவு செல்வாக்குப் பெற்றுள்ளது. இம் முறை இக் கட்சி
தனித்துப் போட்டியிட்டு மற்றவர்கள் வெற்றி பெற வழி வகுக்குமா அல்லது ஏதாவது கூட்டணியிலிணைந்து சில இடங்கள் பெறுமா என்பது போகப்
போகத் தெரியும். இதுபோன்று ஆங்காங்கே உள்ள சாதிக் கட்சிகளையும் சாதாரணமாக இந்தத் தேர்தலில் எந்தப் பெரியக் கட்சியும் எடுத்துக் கொள்ள
முடியாதென்ற சூழல் இன்றைக்குத் தென்படுகிறது.
 
                 கூட்டணி குறித்த இன்றைய முதல் அலசல்தான் இது; தேர்தல் நெருங்க நெருங்கக் கட்சிகள் மாறலாம்; காட்சிகள் மாறலாம்; எதிர்பாராதது நடக்கலாம்; அப்போது இன்ஷா அல்லாஹ் மீண்டும் அலசலாம்.
 
                 த.மு.மு.க.வின் ம.ம.க.,”234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அணியின் வெற்றிக்குப் பாடுபடுவோம்” என்று அறிவித்திருக்கிறது; “தி.மு.க.வைவீழ்த்துவது ஒன்றே எங்கள் நோக்கம்” என்றும் தெரிவித்திருக்கிறது. மாநாடுகள் மூலமாகத் திரட்டிய கூட்டத்தைக் காட்டி, அதன் அடிப்படையில் பெரும்பலம் இருப்பதாகக் கூறி அதிக இடங்களைப் பெறுவதற்குப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ம.ம.க. பெற்ற வாக்குகளைக் காட்டி அ.தி.மு.க. அவர்களது ஆர்வத்திற்கு அணை போடக்கூடும்.
 
                 த.மு.மு.க. வின் ம.ம.க., அ.தி.மு.க.வை ஆதரிப்பது நியாயம்தானா? என்றெல்லாம் வினா எழுப்புவது காலம் கடந்ததாகும். “அரசியலை அரசியலாகவே சந்திப்போம்”  என்று அதன் தலைவர் அறிவித்துவிட்ட பிறகு, “இன்றைய அரசியலை இன்றைய அரசியல் தகிடு தத்தங்களோடு அணுகவும் நாங்கள் தயார்” என்ற மறைமுகமான செய்தியை உணரும்படியாகச் செய்துவிட்ட பிறகு “மோடியின் நண்பியோடு கூட்டு வைக்கலாமா?” என்று ஆராய்வதெல்லாம் வீண்செயலே. கட்சியை நிலைநிறுத்துவது ஒன்றுதான் - இந்தத் தேர்தலில் எப்படியாவது சட்டமன்றத்தில் அமர்ந்துவிடவேண்டும் என்ற ஒன்றுதான் - அவர்களது இலட்சியமாகத்
தென்படுகிறதென்று கூறுகின்றார்கள்.
 
                 டி.என்.டி.ஜே. இயக்கம், “எங்கெல்லாம் த.மு.மு.க. போட்டுயிடுமோ அங்கெல்லாம் அவர்களை வீழ்த்துவது ஒன்றே எங்கள் இலட்சியம்” என்று அறிவித்திருக்கிறது. இவ் விரண்டு இயக்கத்தைச் சார்ந்த சகோதரர்கள் வலைத் தளத்தில் குறிப்பாகத் “தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழும”த்தில் மின் அஞ்சல் பரிமாற்றம் செய்துகொள்வது வேதனை தருவதாகவே இருக்கிறது. அந்தக் குழுமத்தில் வரும் அஞ்சல்களில் தமிழகத்தில் ஏறக்குறைய 50 இயக்கங்கள் இருக்கின்றன என்றும், இதனால் சமுதாயமே கூறுபட்டுக் கிடக்கிறதென்றும் சகோதரர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
                  தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழும அஞ்சல்களில் காணப்படும் இயக்கங்களில் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவை சமுதாய இயக்கங்கள்தாம்; அரசியல் இயக்கங்கள் அல்ல. சமுதாயத்தின் பொதுநலன் கருதிப் பொதுநலச் சேவை செய்ய எத்தனை இயக்கங்கள் வேண்டுமானாலும் தோன்றலாம்; ஆனால் அரசியல்ரீதியாகக் கட்சிகள் தோன்றுவதுதான் சமுதாயத்தைப் பொதுநிலையில்- ஆட்சி அதிகார ஆளுமையில்- வலுவிழக்கச்செய்யு
மென்பதைஅன்புச் சகோதரர்கள் உணர வேண்டியது அவசியமாகும்.
 
                  தனி நபர் கட்சி, லெட்டர்பேடு கட்சி, காலாவதியான கட்சி என்ற நிலையிலுள்ள கட்சிகளைச் சகோதரர்கள் இன்றைய பட்டியலில் இணைப்பது எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்திவிடாது. பலமான அடிப்படை அமைக்க முயன்று கொண்டிருக்கும் பாபுலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தனது நிலையை இன்னும் அறிவிக்கவில்லை.
 
                  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தி.மு.க. அணியில் அதிக இடங்களைப் பெற முயற்சி செய்துகொண்டிருக்கிறதென்கிறார்கள். சமீப காலமாக அதன் குரல் வலிமை பெற்றிருப்பதைச் சமச்சீர் கல்வித் திட்டத்தில் உருது, அரபி முதலிய மொழிகள் இணைப்பு சம்பந்தமான அரசு ஆணைகளில் தெளிவாகத் தெரிகிறது. பிரைமரி அமைத்தல் மற்றும் அமைப்புத் தேர்தல்கள் நடத்துதல் மூலம் மாவட்ட ரீதியாக இ.யூ.மு.லீக் தனது செல்வாக்கைப் பரவலாக்கிக்கொண்டு வருகிறது. சமுதாயத்தினர் பெரும்பாலோரின் கருத்தையொட்டியே இ.யூ.மு.லீகின் செயல்பாடுகள் அமைந்துவருவதும் குறிப்பிடத்தக்கது. தி.மு.க. அணியில் முன்பைக் காட்டிலும் அதிக இடங்கள் பெற்றால்தான் முஸ்லிம் லீக் மட்டுமல்ல தி.மு.க. வும் சமுதாயத்தின் நல்லெண்ணத்தைப் பெறமுடியும்.
 
                   சமுதாயம் பிளவுபட்டுக் கிடப்பதாகக் கருதும் சகோதரர்களுக்கு ஓர் அப்பட்டமான உண்மையைக் கூறியாகவேண்டும். நாம் நினைப்பதுபோல் சமுதாயம் பிளவுபட்டுக் கிடக்கவில்லை; சமுதாயத் தலைவர்கள்தாம் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்; சமுதாயம் 90 விழுக்காட்டிற்கும் மேலாக ஒருங்கிணைந்து ஒற்றுமையாகத்தான் உள்ளது; தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தாம் பிணக்கம் கொண்டு பிரிந்து நிற்கிறார்கள். கடந்த காலத் தேர்தல் முடிவுகளை நன்கு ஆராய்ந்து பாருங்கள்: “சமுதாயம் தெள்ளத் தெளிவாக ஒரே நிலையில்தான் செயல்பட்டிருக்கிறது; தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தாம் குழம்பிப் போய் வேறுபட்டிருக்கிறார்கள்” என்பது தெரியவரும். இன்றும் அதே நிலைதான். வரும் தேர்தலும் இன்ஷா அல்லாஹ் அதையே நிரூபிக்கக் கூடும்.
 
நன்றி: “இனிய திசைகள்’ மாத இதழ்
              பிப்ரவரி-2011.

Tuesday, March 1, 2011

அதிரையில் கொசுத்தொல்லை

அதிரையில் சமிப காலமாக கொசுக்கள் மிகுந்து காணப்படுகிறது இதனால் சொல்லெனா துயரங்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.

பலருக்கு டெங்கு போன்ற அபாயகர நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது இது பற்றி பலரும் அந்த அந்த வார்டு உறுப்பினர்களிடம் சொல்லியும் எந்த ஒரு பலனும் இல்லை என நம்மிடம் புகார் கூறியவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பேரூர் நிர்வாகம் போர்கால அடிப்படையில் இப்பிரச்சனையை தீர்த்து மக்களை காக்க வேண்டுகிறோம் .

மேலும் அதிரையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை துரிதமாக போக்கி இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கேட்டுகொள்கிறோம் .

தமிழகம் கேரளா உள்ளிட்ட சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் - தமிழகத்தில் மே-13ல் தான் 'ரிசல்ட்'!

டெல்லி,மார்ச்.1:தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

இதேபோல கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய சட்டசபை அமைக்கப்பட்டாக வேண்டும்.

ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை:
இதையடுத்து ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாகத் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஓட்டுப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும். மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத வகையில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகத்தின் வாக்கு எண்ணிக்கை வெகுவாக தள்ளிப் போயுள்ளது.

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இன்று கூடி இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தினர். இதையடுத்து மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.

4.59 கோடி வாக்காளர்கள்:
தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

மார்ச் 19ல் மனு தாக்கல் தொடக்கம்:
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. மனுக்கள் பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30. ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும்.

தமிழகத்தில் 99.98-சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டித்தான் வாக்களிக்க வேண்டும். அது இல்லாதவர்களுக்கு மாற்று ஆவணங்களை அறிவித்துள்ளோம்.

இந்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதல் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பீகார் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் சோதனையிட அனுமதிக்கப்பட்டது. அதே நடைமுறை இந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என்றார்.

'கண்ணீர் கடலில் தத்தளித்த அந்த 9 வருடங்கள்!' - அபலைத் தாய் பீபி காத்தூனின் கண்ணீர் பேட்டி!

பிப்.28:கடந்த 2002ம் ஆண்டு, அயோத்தியில் கரசேவை முடித்து விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் திரும்பிய 59 கரசேவகர்கள் கோத்ரா ரயில் நிலையத்தில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாட்டில் அல்லது உலகத்தில் எந்தவொரு சம்பவம் நடந்தாலும் – அது குண்டு வெடிப்பாக இருக்கட்டும், ரயில் எரிப்பாக இருக்கட்டும், விமானத் தாக்குதலாக இருக்கட்டும், ஏன், பக்கத்து வீட்டு காலணி தொலைந்தாலும் அரசின் பார்வையும், அதிகாரிகளின் பார்வையும் முதலில் திரும்புவது அப்பாவி முஸ்லிம்கள் மீதுதான்.

இந்த வழக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? இந்த வழக்கிலும் முதலில் சந்தேகத்தின் பேரில் எந்தவித விசாரணையும் இன்றி 134 பேரைக் கைது செய்து, பின் 94 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

9 வருடங்களுக்குப் பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 22, 2011 அன்று வழங்கப்பட்டது. அதில் 31 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டனர். 63 பேர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த 9 வருட வாழ்வில் பிள்ளையைப் பிரிந்து தவித்த பெற்றோருக்கும், கணவனைப் பிரிந்து வாடிய மனைவிக்கும், தந்தையின் பாசத்தை இழந்த பிள்ளைகளுக்கும் இந்த நீதிமன்றமும், அரசும் என்ன விலை தர முடியும்? இதுபோல் பரிதவித்த எத்தனையோ பெற்றோர்களில் ஒருவர்தான் பீபி ஹாத்தூன்.

இவர் தன் 3 மகன்களை விட்டுப் பிரிந்து தான் பட்ட இன்னல்கலையும், தன் குடும்பம் பட்ட கஷ்டங்களையும் பற்றி தீர்ப்புக்கு ஒரு நாள் முன்பு பொதுமக்களுக்காக பேட்டி அளித்தார்.
அந்தத் தாயின் கண்ணீர் கதை வருமாறு:
"என்னுடைய பெயர் பீபி ஹாத்தூன். நான் குஜராத்தில் கோத்ரா மாவட்டத்தில் உள்ள ரஹ்மத் நகரில் வசித்து வருகிறேன். (கோத்ராவிலிருந்து அது 4 கீ.மீ. தொலைவில் உள்ளது). எனக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் பெயர் ஷம்ஷர் கான், வயது 34. (இவருக்கு 2 மகன்கள் உள்ளன), இரண்டாவது மகன் பெயர் சித்தீக் கான், வயது 23 (இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது), மூன்றாவது மகன் நஸீர் கான், வயது 18 (திருமணம் ஆகவில்லை).

பிப்ரவரி மாதம் 27, 2002 அன்று ஸபர்மதி எக்ஸ்பிரஸ் வண்டி எரிக்கபட்டது. அதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அதே தினத்தில் மாலை நேரத்தில், சில காவலர்கள் மஃப்டி உடையில் எங்களுடைய பகுதிக்கு வந்தனர். இதனால் அங்கு ஒரே பதட்டமும், பரபரப்பும் நிலவின. அச்சத்துடன் அங்கு வசித்த மக்கள் இங்கும் அங்குமாக தங்களை காவலர்களின் பார்வையிலிருந்து மறைத்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தார்கள். சந்தேகத்தின் பெயரில் யாரையாவது அவர்கள் சிறைப் பிடித்தால், தாங்க முடியாத அளவில் சித்திரவதைகள் அளிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சினார்கள்.

எனது பக்கத்து வீட்டுக்காரர் வந்து என்னிடம், “உங்கள் பையன்களையும் போலீஸ் பிடித்துச் செல்லக் கூடும், கவனமாக இருங்கள்” என்று சொன்னார். அதன் பிறகு மாலை சமார் 5.30 மணியளவில் சில காவலர்கள் வந்தனர். என்னுடைய பையன்களை எந்தவித விசாரணையும் இல்லாமல் இழுத்துச் சென்றனர். நான் அவர்களிடம் அழுது மன்றாடி அவர்கள், “என்ன பாவம் செய்தனர், ஏன் அவர்களை இழுத்துச் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். எனது கண்ணீருக்கு எந்தவித மதிப்பும் கொடுக்காமல் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.


சில மணி நேரங்களில் அவர்களை விட்டு விடுவார்கள் என்று என்னை நான் சமாதானப்படுத்திக் கொண்டேன். என்னுடைய 3 மகன்கள் மட்டுமில்லாமல் இன்னும் 11 பேரையும் போலீசார் எங்கள் பகுதியிலிருந்து இழுத்துச் சென்றார்கள், ஆனால் அவர்களை 7 வருடங்களுக்குப் பிறகு விடுதலை செய்தனர்.

ஒரு நாள் எங்கள் பகுதியில் உள்ள ஒருவர் என்னிடம் வந்து, “உன்னுடைய மகன்களை ‘பொடா’ சட்டத்தில் சிறை பிடித்து உள்ளார்கள்” என்றார், அதற்கு நான் அவரிடம், “பொடா சட்டம் (பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்) என்றால் என்ன” என்று விசாரித்தேன். ஆனால் அவருக்கும் அதைப் பற்றிய விவரம் ஒன்றும் தெரியவில்லை. பிறகு என்னுடைய கணவர் சந்தையில் இருந்த சமயம் யாருடனோ பொடா சட்டத்தைப் பற்றிய விளக்கம் கேட்டு விட்டு அதிர்ச்சியில் என்னைக் காண வந்த போது நான் மயங்கிய நிலையில் இருந்தேன்.
அந்த நாள் முதல் அவர் என்னுடன் வெறும் 4 வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தார்.

என்னுடைய மகன்கள் சிறையில் பல விதமன சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். நாங்கள் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, என்னுடைய பெரிய மகன் என்னிடம் உணவும், துணிமணியும் கேட்டான். அடுத்த முறை நான் அவர்களைச் சந்திக்கச் சென்ற போது என்னுடைய அத்தனை குடும்ப கஷ்டத்திற்கு இடையில் ஒரு டிஃபன் பாக்ஸில் உணவு எடுத்துச் சென்றேன், ஆனால் அங்குள்ள போலீசார் அதை வாங்கி தரையில் சிதறடித்தனர். மறுபடியும் என்னுடைய மகன் உணவும், துணிமணிகளும் கேட்டதால், மறுபடியும் எடுத்துச் சென்றேன். ஆனால் அவர்கள் மறுபடியும் அதை வாங்கி வீசியடித்தார்கள்.

கொஞ்ச நாள் கழித்து என்னுடைய இளைய மகன்கள் 2 பேரையும் அங்கிருந்து எங்கேயோ அழைத்துச் சென்று விட்டார்கள். அதைப் பற்றி அவர்கள் எதுவும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. என்னுடைய பெரிய மகனுக்கும் அவர்களைப் பற்றி ஒன்றும் விவரம் தெரியவில்லை. நாங்கள் இங்கும் அங்குமாக அவர்களைத் தேடினோம். 2 நாட்களுக்குப் பிறகு என்னுடைய பெரிய மகனையும் அங்கிருந்து எங்கேயோ அழைத்துச் சென்று விட்டர்கள். 3 மாதத்திற்குப் பிறகு என்னுடைய பெரிய மகன் எங்களுக்கு கடிதம் எழுதியிருந்தான். அதில் அவன் அஹமதாபாத்தில் உள்ள சபர்மதி சிறைக்கு தங்களை மாற்றி விட்டதாகவும், அவர்களை அங்கு சந்திக்க வரும்படியும், வரும்போது துணிமணிகள் கொண்டு வரும்படியும் எழுதியிருந்தான்.

நானும், என்னுடைய கணவரும், என்னுடைய பையன்களின் மனைவிகளையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவர்களைப் பார்க்கப் போனோம். நான் அவர்களைப் பல முறை பார்க்கப் போனபோதும் எனது உடல் நிலை பாதித்துவிடுமோ என்ற பயத்தில் என்னுடைய மகன்கள் சிறையில் அனுபவித்த எந்தச் சித்திரவதையைப் பற்றியும் என்னிடம் சொல்லவில்லை. எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் தெரியும், இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று.

என்னுடைய பையன்களை இந்த பொடா சட்டப் பிரச்சினையிலிருந்து விடுவிக்கக் கோரி நடுவர் மன்றத்தில் மன்றாடினேன். ஒரு முறை பொடா சட்டத்தில் சிக்கிய அப்பாவி மக்கள், சிறையில் பல விதமான சித்திரவதைகளுக்கு மனதாலும் உடலாலும் உள்ளாக்கபட்டு வெறும் மூச்சுக் காற்றுடன்தான் வெளியில் வர முடியும்.

என் பையன்கள் இல்லாத காரணத்தினால், என்னுடைய சூழ்நிலை என்னை பிச்சை எடுக்கும் அளவிற்குத் தள்ளியது. என்னுடைய 2 மருமகள்களும் வீட்டு வேலைக்குச் சென்றனர். அவர்கள் 2 பேரின் சம்பளமும் சேர்த்து மாதம் வெறும் 300 ரூபாய் மட்டுமே கிடைக்கும். எங்களுடைய வருமானத்தை வைத்து என்னுடைய பேத்திகளுக்கு அவர்களுடைய சிறிய ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத பாட்டியாய் அவர்கள் முன் நான் வெட்கப்பட்டு நிற்கும் அளவில்தான் எங்கள் நிலமை இருந்தது. இந்த நிலையில் என்னுடைய மகன்களுக்கு வழக்கறிஞர் வைக்கும் அளவுக்கு வசதி இல்லை. என்னுடைய கஷ்டத்தை நடுவர் மன்றத்தில் மட்டுமே முறையிட முடிந்தது.

அந்த ரயிலில் உயிரிழந்தவர்கள் அந்த ஒரு நிமிடத்தில் தங்களுடைய முழு வேதனையையும் அனுபவித்து இந்த உலகத்தை விட்டுப் போய் விட்டர்கள். ஆனால் அந்த வழக்கில் சிக்கிய அப்பாவி மக்கள் 1 வருடம் அல்ல, 2 வருடம் அல்ல, 9 வருடங்களை இழந்து நிற்கின்றனர். இழந்த 9 வருட வாழ்க்கையையும் இளமையையும் யாரால் திருப்பித் தர முடியும்?

எங்களுடைய குடும்பத் தலைவர்களை இழந்து, பெற்ற பிள்ளையைப் பிரிந்து தவித்த பெற்றோர்களுக்கும், கட்டிய கணவனை இழந்து வாடிய மனைவிகளுக்கும், தன் தகப்பனை யார் என்று அறிய முடியாத குழந்தைகளுக்கும் யார் பதில் சொல்ல முடியும்? நாங்களும் எங்கள் குடும்பமும் இழந்த சந்தோஷத்தையும், பட்ட அவமானத்தையும் என்ன விலை கொடுத்தாலும் யாரலும் திருப்பித் தர முடியாது.”

இப்படி எத்தனையோ பெற்றொர்களின் கண்ணீருக்கும், மனைவிகளின் கேள்விகளுக்கும், பிள்ளைகளின் அழுகுரலுக்கும் இந்தச் சமுதாயமும், அரசும் என்ன பதில் தர முடியும்?
 
---