Sunday, March 27, 2011

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

 

brain
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான  ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது.  இதுவும்    மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை          பாதிப்படையும்.
6. தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப்    பாதிக்கிறது.
8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான         உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Saturday, March 26, 2011

தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்

 

fruits
சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன.
அசிட்டிக் உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், ஆல்கலைன் உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
உங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.
எண்ணையில்லாமல், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. கட்லட் போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு ரோஸ்ட் செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.
பெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையும் அகற்றி விடுகிறீர்கள்.
காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீ­ரில் அலசுவது நல்லது தான். ஆனால் அதுவே அதிகமாகி விட வேண்டாம். அப்படிச் செய்தால் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும்.
காய்கறிகளை தண்­ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்­ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன் சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.
உணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத் தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லது தான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது.
நீண்ட நேரம் நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும் போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்

நன்றி  : தூது online

அதிரையில் மழை


Posted: 25 Mar 2011 07:33 AM PDT

அதிரையில் காலை 07-00 மணி முதலே வெயில் கொளுத்த ஆரம்பித்தது. இன்று அதிகபட்சமாக 33 டிகிரி கொளுத்தியது. இதனால் மக்கள் சோர்வடைந்து காணபட்டார்கள். மாலை 3.30 மணியளவில் மேகம் மூட்டமாக காணப்பட்டது. பின் ஒரு 15 நிமிடம் மழை பெய்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 15 நிமிடம் பெய்த மழை 0.3mm ஆக பதிவானது. நடுத்தெரு முக்கத்தில் வெட்டி பேச்சு பேசுவது  மழையால் தாமதமாகவே தொடங்கியது என்பது குறிபிடத்தக்கது.    

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?


உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.
உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.
துவர்ப்பு:
உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.
இனிப்பு:
மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.
புளிப்பு:
உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.
காரம்:
பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.
கசப்பு:
பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:
அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.
உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக்கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.
இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
எப்போதும் உணவு உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.
எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக்கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.
உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.
நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.
‘உண்பது நாழி’ என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.
நன்றி:உங்களுக்காக
Mohammad Sultan

Friday, March 25, 2011

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!


அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!




வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.
அதென்ன அல்சர்?
நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.
அல்சர் ஏன் வருது?
முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது....
சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.
ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை. டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க... காரணம் இதுதான்.
அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!
மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.
எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராம இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு  ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும்.
அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்...
நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி இதெல்லாம் அறவே தவிர்க்கணும். மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.
நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது! -முகம்மது சுல்தான்
நன்றி: உங்களுக்காக 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முக்கிய அறிவிப்பு

தற்போது நடைமுறையில் உள்ள 15 நாள் கணக்கீடு 15 நாள் வசூல் என்ற முறை மாற்றப்பட்டு வரும் 01.04.2011 முதல் மாதம் முழுவதும் கணக்கீடு மற்றும் மாதம் முழுவதும் வசூல் பணி நடைபெறும் என்று மின் நுகர்வோர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கட்டாத நபரின் மின் இணைப்பை 16 ஆம் துண்டிப்பு செய்யும் முறைக்குப் பதிலாக மின் அளவீடு எடுத்த தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தாத நபரின் மின் இணைப்பு 21ஆம் நாள் துண்டிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மீட்டரின் வெள்ளை அட்டையை மின் பயன்பாட்டை குறிப்பதற்கு வசதியாக மீட்டர் அருகிலேயே வைத்துக் கொள்ளும்படி மின் நுகர்வோர்கள் கேட்டுக் கொள்ள ப்படுகிறார்கள். வெள்ளை அட்டை தேவையனில் அருகில் உள்ள மின்சார அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளும்படி அனைத்து மின் நுகர்வோர்களும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மின் அளவீடு எடுத்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். என்றும், தவறினால் 21ஆம் நாள் மின் துண்டிப்பு செய்யப்படும்  என்றும், மீண்டும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. திருச்சி மண்டலத்தில் எந்த அலுவலகத்தில் வேண்டுமானாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் "INTERNET BANKING " மூலம்  கட்டணம் செலுத்தலாம் என்றும் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு :

அமேஜான் வாட்டர் பியூரிபியர் நிறுவனத்தாரால்" INTERNET BANKING "  மூலம் மின் கட்டணம் கட்டித்தரப்படும். உங்களுடைய மின் இணைப்பு என்னை அனுப்பினால் போதும்.மேலும் விபரங்களுக்கு இந்த தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும். +91 9994509779

இப்படிக்கு
    
அமேஜான் வாட்டர் பியூரிபியர்.

Thursday, March 24, 2011

முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் : முலாயம் வலியுறுத்தல்

"மாநில சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும்  முஸ்லீம்களுக்கென்று  தனி இடஒதுக்கீடு செய்யப்படவேண்டும்"  என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்  மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, இன்று நாடாளுமன்றத்தில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் முலாயம் பேசுகையில்,

"மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. 14 முக்கிய மாநிலங்கள் சார்பாக மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம். இந்த நிலை மாற வேண்டுமானால், மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்." என்று கருத்து பதித்துள்ளார்.

Wednesday, March 23, 2011

SDPI முஸ்லிம்களின் கட்சியா? ஒரு விளக்கம்

SDPI என்ற சோஷ;ியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா முஸ்லிம்களுக்கு மட்டுமான கட்சியல்ல. முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் போன்ற பிற்படுத்தப்பட்ட, நீதி மறுக்கப்படும் அனைத்து சமுதாயத்தவர்களுக்குமான தேசிய அளவிலான கட்சி. இந்தியாவில் 16 மாநிலங்களில் இது தன் கிளைகளைப் பரப்பி துடிப்புடன் செயல்பட்டு வருகின்றது.

இராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் SDPI கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் SDPI இப்பொழுதுதான் காலூன்றி வருகின்றது. மாவட்டப் பொறுப்புகளில் நிறைய முஸ்லிமல்லாதார் இருக்கின்றனர். வேட்பாளர்களாக அறிவிக்கக்கூடிய அளவுக்கு யாரும் இன்னும் வளரவில்லை.

ஆனால் கேரளாவில் மாநிலப் பொதுச்செயலாளர், மாநிலத் துணைத் தலைவர் முதற்கொண்டு பல பொறுப்புகளில் முஸ்லிமல்லாதார் இருக்கின்றனர். கேரளாவில் SDPI 98 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றது. இதில் சில தொகுதிகளில் முஸ்லிமல்லாதார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எக்காலத்திலும் முஸ்லிம் வாக்கு வங்கியைப் பிளவுபடுத்துவது SDPIன் நோச்கமல்ல. மாறாக, முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் போன்ற பிற்படுத்தப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட சமுதாயங்களை ஒருங்கிணைத்து, சக்திப்படுத்துவதே SDPIன் நோக்கம்.

இதுநாள் வரை முஸ்லிம்கள் செய்து வந்த எதிர்மறையான அரசியலை (Negative Politics) தவிர்த்து, உடன்பாடான அரசியலை (Positive Politics) SDPI கையில் எடுத்துள்ளது. அத்தோடு SDPIன் அரசியல் வழிமுறை போராட்ட அரசியல் (Agitative Politics) வழிமுறையாகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, சமஉரிமை, இடஒதுக்கீடு என்று அனைத்துத் தேவைகளும் போராடாமல் கிடைக்காது. எனவே SDPI அந்த வழிமுறையைக் கையில் எடுத்துள்ளது.

நன்றி  : Sheik MPM

SDPI மேலும் இரண்டு இடங்களில் தனித்துப் போட்டி

4010852189
சென்னை:தமிழக சட்டமன்றத் தேர்தலில் சோஷியல் டெமோக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா(SDPI)  5 இடங்களில் தனித்துப் போட்டியிடும் நிலையில் மேலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி திருப்பூர் தெற்கு மற்றும் பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளில் SDPI போட்டியிடுகிறது.
திருப்பூர் தெற்கு தொகுதியில் அமானுல்லாஹ், மற்றும்  பாளையங்கோட்டை தொகுதியில் சாகுல் ஆலீம் ஆகியோர் SDPI-யின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

Tuesday, March 22, 2011

திருக்குர்ஆன் பிரதியை எரித்த வெறிப்பிடித்த அமெரிக்க கிறிஸ்தவ போதகர்

 

photo_1300683495959-1-0
வாஷிங்டன்:அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் டோவ் அவுட்ரீ செண்டர் இவான்செலிகல் சர்ச்சின் உறுப்பினரான ஸேப் என்பவன் புனித திருக்குர்ஆனுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதன் பிரதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை எரித்துள்ளான்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 11 அன்று இரட்டைத் தாக்குதல் நினைவு தினத்தில் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப்போவதாக இதே டோவ் அவுட்ரீச் செண்டரின் உறுப்பினரான டெர்ரி ஜோன்ஸ் அறிவித்தது உலக முழுவதும் வாழும் முஸ்லிம்கள் மத்தியி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் டெர்ரி ஜோன்ஸின் விஷத்தை உமிழும் கருத்திற்கெதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பெண்டகனின் உயர் அதிகாரி ஆகியோர் தலையிட்டு டெர்ரி ஜோன்ஸிற்கு எச்சரிக்கை விடுத்ததையடுத்து அம்முயற்சியை கைவிட்டான் டெர்ரி ஜோன்ஸ்.இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்குர்ஆன் பிரதியை எரித்ததாக ஸேப் அறிவித்துள்ளான்.

கடையநல்லூர் தொகுதியில் SDPI வேட்பு மனு தாக்கல்


முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்ஃப் வாரிய சொத்துகளை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், SDPIன் மாநிலப் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி SDPI தனித்துப் போட்டியிட முடிவெடுத்தது. மேலும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியைப் பொறுத்தவரைக்கும் வெற்றி-தோல்வியைக் குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான 
முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துகள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனைக் கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சி. அதன் அடிபடையில்
SDPI தமிழ்நாட்டில் குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஆறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். ஆறு தொகுதிகளில் ஒரு தொகுதியான நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் நெல்லை முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி வேட்புமனு தாக்கல் முதல் நாளான நேற்று ஜங்ஷன் பள்ளியில் இருந்து ஊர்வலமாக வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் அதிகாரி சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த போது
அப்பொழுது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது: “நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தடுக்கப்பட்டால் கடையநல்லூரில் நீண்ட நாளாக தீர்க்கப்படாமல் இருக்கும் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைப்பேன். கடையநல்லூரை வேலைவாய்ப்பு மிக்க நகரமாக மாற்றுவேன். பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கு முயற்சி எடுப்பேன். மேலும் தொகுதி மக்களின் தோளோடு தோளாக நின்று அவர்களின் எந்தப் பிரச்னை என்றாலும் உடனடியாக தீர்த்து வைப்பேன்” எனக் கூறினார்.

இஸ்லாமிய தொலைக்காட்ச்சிக்கு தடை.

சன் குழுமத்தின் அராஜாகம் !!!இஸ்லாமிய சமுதாய மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க முத்தாய்பாய் மூன் தொலைக்காட்ச்சி முளைத்தது !

இது ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கும் மேலாக 75% இஸ்லாமிய நிகழ்ச்சிகளையும் 25 %ஏனைய நிகழ்சிகளையும் ஒளிப்பரப்பி வருகிறது.காலையில் சிறுவருக்கான குர் ஆன் வகுப்பு ,பயான், என ஏனைய நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

ஆமாம் சகோதர்களே.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நம் சமுதாய செல்வந்தர்கள் சிலரின் சீரிய முயற்ச்சியினால் சென்னை நுங்கம்பாகத்தை தலைமையிடமாக கொண்டு தனது துல்லிய ஒளிப்பரப்பை வழங்கி வருகிறது .

இது தற்பொழுது ஒரு சில இஸ்லாமியர்கள் பெரும்பாலாக வசிக்கும் பகுதிகளில் நேயர்களின் நீண்டகால கோரிகைக்குபின் கேபிள் ஆபரேட்டர்கள் மேற்கண்ட சமூதாய தொலைக்கட்ச்சியை ஒளிப்பரப்பி வருகிறார்கள் .

ஆனால்
சென்னையை பொருத்தமட்டில் கேபிள் / DTH ஒளிப்பரப்பை தன்வசப்படுத்துகொண்ட சன் குழுமம் நமது மூன் தொலைக்காட்ச்சி ஒளிப்பரப்பிற்கு தடையாக உள்ளது .

இந்த தொலைகாட்சி நிர்வாகிகள்" டன் டனா டன்னிடம்" விளக்கம் கேட்டால் இந்த தொலைக்காட்ச்சி ஒளிப்பரப்பை கேபிளில் செய்ய கட்டனாமாக7 கோடி வரையிலும் பேரம் பேசி கலட்டிவிடுவதிலேயே முனைப்பு காட்டிவருகிறது சன் குழுமம் .

இன்றைய மீடியாக்கள் தொல்லை காட்ச்சிகளாகவே வழங்கி வரும் மற்ற சேன்னல்களுக்கு மத்தியில் நல்ல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் இது போன்ற தொலைகாட்ச்சிகளின் ஒலிப்பரப்பிற்கு சமுதாய அமைப்புகள் குரல் கொடுத்திட முன் வரவேண்டும் .

முஸ்லிம்களுக்கு நோ சீட் : ராமதாஸ் உருவ பொம்மை எரிக்க முயன்றவர்கள் கைது!

பா ம க-வுக்கு  ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படாததால்   பா.ம.க நிறுவனர்  ராமதாஸ் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை, காவல்துறையினர்  கைது செய்த நிகழ்வு நெல்லையில் நடந்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ம. க கட்சி  தமக்கு ஒதுக்கப்பட்ட முப்பது  தொகுதிகளில், ஒன்றில் கூட முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தவில்லை. இதைக்  கண்டித்து, நெல்லையில், பா.ம.க.,வைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள், ராமதாசின் உருவ பொம்மையை எரிப்பதற்காக, நடுவீதிக்கு  இழுத்து வந்தனர்.

அவர்களை மடக்கிய நெல்லை காவல்துறையினர் , காயிதேமில்லத் பேரவை தலைவர் பீர்முகமது உள்ளிட்ட, 20 பேரை கைது செய்தனர். பின்னர் கைதானவர்கள் அனைவரும்   மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 

Monday, March 21, 2011

பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் (அகர வரிசை)

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் பட்டியல்.



 
  1. அண்டமி
  2. அணைக்காடு
  3. அத்திக்கோட்டை
  4. அத்திவெட்டி கிழக்கு
  5. அத்திவெட்டி மேற்கு
  6. அதிராம்பட்டினம் (பேரூராட்சி).
  7. ஆலக்குடிமுளை
  8. ஆலத்தூர்
  9. ஆலம்பள்ளம்
  10. ஆவைக்கோட்டை
  11. இளங்காடு
  12. உக்கடை
  13. எட்டுபுளிக்காடு
  14. ஏரிப்புறக்கரை
  15. ஓலையக்குன்னம்
  16. கரகவாயல்
  17. கரப்பங்காடு
  18. கரம்பயம்
  19. கருப்பூர்
  20. கல்யாணஓடை
  21. கழிச்சாங்கோட்டை
  22. கன்னியாக்குறிச்சி
  23. காசாங்காடு
  24. காடதங்குடி
  25. கிருஷ்ணபுரம்
  26. கீழக்குறிச்சி கிழக்கு
  27. கீழக்குறிச்சி மேற்கு
  28. கோபாலசமுத்திரம்
  29. சத்திரம் தொக்காலிக்காடு
  30. சாந்தான்காடு
  31. சிரமேல்குடி
  32. சின்ன ஆவுடையார்கோயில்
  33. சுக்கிரன்பட்டி
  34. சூரப்பள்ளம்
  35. செண்டங்காடு
  36. செம்பளூர்
  37. செளந்தரநாயகிபுரம் நரசிங்கபுரம்
  38. சேண்டாக்கோட்டை
  39. சொக்கனாவூர்
  40. தம்பிக்கோட்டை வடகாடு
  41. தளிக்கோட்டை
  42. தாமரங்கோட்டை தெற்கு
  43. தாமரங்கோட்டை வடக்கு
  44. திட்டக்குடி
  45. துவரங்குறிச்சி தெற்கு
  46. துவரங்குறிச்சி வடக்கு
  47. தொக்காலிக்காடு
  48. நாட்டுச்சாலை
  49. நெம்மேலி
  50. நைநான்குளம்
  51. பட்டுக்கோட்டை (நகராட்சி)
  52. பரககலக்கோட்டை
  53. பழஞ்சூர்
  54. பழவேறிக்காடு மன்னங்காடு
  55. பள்ளிக்கொண்டான்
  56. பாலமுதி
  57. பாலாயிஅக்ரஹாரம்
  58. பாலாஜிரகுராமசமுத்திரம்
  59. பாவாஜிக்கோட்டை
  60. புதுக்கோட்டகம்
  61. புதுக்கோட்டை உள்ளூர்
  62. புலவஞ்சி
  63. புளியக்குடி
  64. பெரியக்கோட்டை
  65. பொன்குண்டு
  66. பொன்னவராயன்கோட்டை
  67. மகாதேவபுரம்
  68. மகிழங்கோட்டை
  69. மதுக்கூர் (பேரூராட்சி)
  70. மதுரபாசாணிபுரம்
  71. முசிறி
  72. முதல்சேரி
  73. மூத்தாக்குறிச்சி
  74. மோகூர்
  75. ராஜாமடம்
  76. ரெகுநாதபுரம்
  77. ரெகுராமசமுத்திரம்
  78. வட்டாக்குடி.
  79. வடுகன்குத்தகை
  80. வாட்டக்குடி உக்கடை
  81. வாடியக்க்காடு
  82. விக்கிரமம்
  83. வீரக்குறிச்சி
  84. வெண்டாக்கோட்டை
  85. வேப்பங்காடு ஏனாதி
  86. வேப்பங்காடு
  87. வேப்பங்குளம்

மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர்க​ள் அறிவிப்பு

MMK flag 1
சென்னை:அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் மூன்று வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார். ஆம்பூர் தொகுதியில் அஸ்லம் பாட்ஷா போட்டியிடுகிறார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.