Monday, March 21, 2011

சிறுபான்மையினர் நண்பன் தி.மு.க.,வா...? அ.தி.மு.க.,வா...?

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., – அ.தி.மு.க., என, இரு அணிகளிலும் முஸ்லிம் அமைப்புகள் இடம் பெற்றுள்ள நிலையில், உண்மையில் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முஸ்லிம் லீக்கில் பெரும் பகுதியினர் திடீரென தி.மு.க.,வுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க., அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் தான் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால், த.மு.மு.க.,வின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சி அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறது.இரு புறமும் முஸ்லிம் அமைப்புக்கள் உள்ள நிலையில், உண்மையில் முஸ்லிம்கள் யாருக்குத் தான் ஆதரவு அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முஸ்லிம் லீக் நிர்வாகி கூறியதாவது:தி.மு.க., ஆட்சியில் முஸ்லிம்களின் 80 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு, சிறுபான்மை பள்ளி, கல்லூரிகளுக்கு சலுகைகள், அரசு உதவி, பள்ளிவாசல் உலமாக்களுக்கு நல வாரியம், சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 2,000 இளைஞர்களுக்கு இலவச ஆட்டோக்கள், இரண்டு முஸ்லிம் களுக்கு கடந்த ஆட்சியில் மந்திரி பதவி என முஸ்லிம்களுக்கு தி.மு.க., ஆட்சியில் நல்லது நடந்துள்ளது.அதே நேரத்தில் முஸ்லிம் லீக்குக்கு தனியான அரசியல் அங்கீகாரம் கிடைக்காத அளவுக்கு தி.மு.க., அவமதிப்பதும் தொடர் கதையாக உள்ளது.
முஸ்லிம் லீக்குக்கு கடந்த தேர்தலில் மூன்று தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, திடீரென பாளையங்கோட்டைக்கு தி.மு.க., வேட்பாளரை அறிவித்தது. “டிவி’ பார்த்து தான் விஷயம் எங்களுக்கே தெரிந்தது.இம்முறை பா.ம.க., – வி.சி., – கொ.மு.க., கட்சிகளுக்கு அதிக சீட் தந்த தி.மு.க., சிறுபான்மையின நண்பனான எங்களுக்கு மூன்று சீட்டை கொடுப்பது போல் கொடுத்து, டில்லியிலிருந்து ஒன்றை பிடுங்கினர். மாநிலத் தலைவரை கூட கலந்தாலோசிக்காமல், தகவலாகத் தான் சொன்னார்கள்.இரண்டு சீட்டில் கூட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உடன்பாடு செய்துள்ளனர். தி.மு.க.,வை பொறுத்தவரை முஸ்லிம் லீக்குக்கு தனி சின்னத்தில் போட்டியிட உடன்பாடு கொடுத்தால் மட்டுமே அவர்களை சிறுபான்மை நண்பனாக நினைப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தி.மு.க., ஆட்சி ஏன் வரக்கூடாது என்பது குறித்து, முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது:அ.தி.மு.க.,தான் சட்ட ரீதியான கமிஷன் அமைத்து முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு பெற வழி வகுத்தது. சிறுபான்மையினர்களின் நண்பன் என கூறிக் கொள்ளும் கருணாநிதி ஆட்சியில் தான் முஸ்லிம்கள் பல பிரச்னைகளை சந்தித்தனர். நடுநிலையுடன் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்த போது, அப்துல் சமது தலைமையிலான முஸ்லிம் லீக்கை, தி.மு.க.,வுக்கு ஆதரவு வேண்டும் என்பதால், அப்துல் லத்தீப் பிரிவு என தி.மு.க.,தான் இரண்டாக உடைத்தது.முதற்கட்டமாக முஸ்லிம்களின் ஒற்றுமை இதில் உடைந்தது. ஆளாளுக்கு முஸ்லிம் லீக் பெயரில் கட்சி துவங்க தி.மு.க., வழி வகுத்தது.
பா.ஜ.,வை மதவாத கட்சி என்ற தி.மு.க., பா.ஜ.,அரசுக்கு மத்தியில் ஆதரவளித்தது. கோவையில் இருதரப்பினர் மோதியதில் கலவரம் ஏற்படும் என தெரிந்தும், தி.மு.க., ஆட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. பின், தமிழகம் முழுவதும் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாயினர். வீடுகளில் இருந்த முஸ்லிம் பெண்கள் போலீசாரால் துன்புறுத்தப்பட்டனர். இதை முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள்.
முஸ்லிம்களுக்கு 8 சதவீத இட ஒதுக்கீடு கேட்ட நிலையில், 3.5 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு தந்ததால், முழுப் பயன் கிடைக்கவில்லை. முஸ்லிம் இளைஞர்களுக்கு இன்னும் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் வெளிநாடுகளில் பிழைக்க வேண்டிய நிலை தொடர்கிறது. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக தனி அங்கீகாரம் பெற தி.மு.க., எப்போதும் விரும்புவதில்லை. அதனால் தான் முஸ்லிம் லீக்கை எப்போதும் தன்னுடன் வைத்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 48 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் முழு ஆதரவு தங்களுக்கு தான் என மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத், இந்திய தவ்கீத் ஜமாத் உட்பட பல அமைப்புகள், கட்சிகள் கூறுகின்றன.ஆனால், இவ்வளவு பிரச்னைகளையும் மனதில் வைத்து முஸ்லிம்கள் தங்கள் ஓட்டு யாருக்கு? எந்த இயக்கத்திற்கு, என்பதை முடிவு செய்வர். அந்த முடிவு தேர்தல் ரிசல்ட் வரும் போது தான் வெளிச்சத்துக்கு வரும்.- நமது சிறப்பு நிருபர் -தினமலர்

Sunday, March 20, 2011

SDPI மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி பேட்டி பற்றிய அறிவிப்பு

Social Democratic Party of India (SDPI) கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடுவதென்று முடிவெடுத்து ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் பிரதான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் முஸ்லிம் லீக் நிற்கும் துறைமுகம் தொகுதியிலும், மமக போட்டியிடும் இராமநாதபுரம் தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அதிரை எக்ஸ்பிரஸிற்கு நேர்காணல் நடத்த SDPI ன் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் தங்களது பிஸியான  இந்த தேர்தல் நேரத்திலும் பேட்டி எடுக்க நமக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

ஆகையால் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் அரசியல் மற்றும் சமுதாயக் கேள்விகளை உடன் அனுப்பி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

வஸ்ஸலாம்
தேர்தல் செய்திக் குழு
அதிரை எக்ஸ்பிரஸ்

ஜனநாயகரீதியில் போராட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத் தலைவர்கள் கைதாகி விடுதலை


திண்டுக்கல்:ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு அனுமதி மறுத்து போராட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தனது சிறுபான்மை வெறுப்புணர்வை உமிழ்ந்துள்ளது.
கடந்த 2010 டிசம்பர் 6 முதல் 2011 ஜனவரி 30-ஆம் தேதி வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பாப்ரி மஸ்ஜித் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தியது. தமிழகத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தியாவின் இரு பெரும் பயங்கரவாதச் செயல்கள், ஒன்று தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படுகொலை. இரண்டாவது மாபெரும் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான இறையில்லம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பட்ட நிகழ்வுமாகும். இந்த இருபெரும் பயங்கரவாதச் செயல்களைக் குறித்த தகவல்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நிறைவுதினமான ஜனவரி-30-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், இந்த பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டத்திற்கு அன்றைய தினம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்ததோடு மீறி பேரணி நடத்த முயன்ற பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மது பஹ்ருத்தீன் உட்பட பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோரை கைது செய்தது.
அதனைத் தொடர்ந்து காவல்துறையின் இந்த அராஜகத்தை கண்டிக்கும் விதமாகவும், திண்டுக்கல் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்தும் மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான எதிர்ப்பை பதிவுச் செய்யும் விதமாகவும் இன்று(20.03.2011) திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுச் செய்திருந்தது.
ஆனால், பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் தடைச் செய்த காவல்துறை பேரணி செல்ல முயன்ற மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான ஏ.முஹம்மது யூசுஃப், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஏ.கைஸர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் நூற்றுக்கணக்கானோரை கைதுச் செய்துள்ளது.
காவல்துறையின் இச்செயலை கண்டித்த பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலத் தலைவர் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் திண்டுக்கல் காவல்துறையின் இச்செயலை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.
நீதிக்கான போராட்டத்திலும், காவி பயங்கரவாதத்தை மக்களிடையே தோலுரித்து காட்டும் முயற்சியிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இக்கைது  நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் திட்டமிட்டுள்ளது என்பதை உளவுத்துறை மூலம் அறிந்ததையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

5000 முஸ்லிம்களை கொலைச்செய்ய திட்டமிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் – சி.பி.ஐ

610x
ஹைதராபாத்:இந்தியாவில் 5000 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நம்பள்ளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 76 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசியத் தலைவர் இந்திரேஷ் குமாரின் தலைமையில் கடந்த 2006-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி குஜராத் சமாஜம் கெஸ்ட் ஹவுஸில் கூடிய கூட்டத்தில் இதற்கு தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா, லோகேஷ் சர்மா, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோர் இந்த சதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
முஸ்லிம்கள் அதிகமாக திரளும் வழிப்பாட்டுத் தலங்களைத்தான் இவர்கள் குறிவைத்துள்ளார்கள். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆயுதங்களை சேகரிப்பதற்கான பொறுப்பு கல்சங்கரா மற்றும் லோகேஷ் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சுனில் ஜோஷிக்கு நிதியை திரட்டுவதற்கான பொறுப்பு. ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி கலவை வெடிக்குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டதையும் சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.
மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா, மலேகான் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் இத்திட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.

Thanks to http://www.thoothuonline.com/

Friday, March 18, 2011

முஸ்லிம் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் தவிற்க்க வேண்டிய மோதலும்

மனிதநேய மக்கள் கட்சி: அதிமுக கூட்டணி

1) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
2) ஆம்பூர்
3) இராமநாதபுரம்

இ.யூ.முஸ்லிம் லீக்:திமுக கூட்டணி

1) வாணியம்பாடி
2) நாகப்பட்டினம்
3) துறைமுகம்

எஸ்.டி.பி.ஐ: கூட்டணியின்றி...

(எஸ்.டி.பி.ஐ.1௦ தொகுதிகளில் போட்டியிடுகிறது முதல்கட்டமாக 6 தொகுதிகளை அறிவித்துள்ளனர்.)

1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)
2.இராமநாதபுரம்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்)
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)
5.துறைமுகம் (சென்னை) ஆகிய ஐந்து தொகுதிகளும்

6.நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்)

நேருக்கு நேர்...

மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும் துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும் இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் நின்று முஸ்லிம்களின் வாக்கை சிதறடித்து மூன்றாம் நபரை தேர்வு செய்ய வழி அமைத்திருக்கின்றன.

இதில், மனிதநேய மக்கள் கட்சியும் இ.யூ.முஸ்லிம் லீக்கும் முறையே எதிர் கட்சி ஆளுங்கட்சியில் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்தி இந்த தொகுதிகளை பெற்றுள்ளார்கள்.

ஆனால், எஸ்.டி.பி.ஐக்கு அப்படியோரு நிர்பந்தம் இல்லை. சுயமாகவே அறிவித்தது. எனவே முஸ்லிம்களின் ஒற்றுமை,பிரதிநித்துவம் கருதி முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடாத வேறு தொகுதியை தேர்வு செய்து களம் காணவேண்டும்.

தமிழகத்தில் 60 தொகுதிகள் முஸ்லிம்களுக்கு சாதகமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.அந்த 60 தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐயும் அதன் சார்ப்பு அமைப்புகளும் பலமாகவே இருக்கிறது என்பது நாடறிந்த உண்மைதான்.

எஸ்.டி.பி.ஐ சமுதாய ஒற்றுமை, பிரதிநித்துவம் கருதி வேறு தொகுதியை தேர்வு செய்யுமானால், அந்த தொகுதியில் இருக்கும் மமகவினரும் லீக்கர்களும் கூட எஸ்.டி.பி.ஐக்கு வாக்களிப்பார்கள் சமுதாயமும் முழு ஆதரவை தந்து சட்டமன்றத்திற்கு வாழ்த்தி அனுப்பும். இன்னும் சொன்னால், இதுவே சமுதாய அரசியல் கட்சிகளின் ஒற்றிமைக்கும் அடித்தளமாகவும் முன்மாதிரியாகவும் அமையும். இன்ஷாஅல்லாஹ்!

லிபியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார்!:ஐநா பாதுகாப்பு சபை ஆதரவு!!

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராடி வரும் பொது மக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. மக்கள் ஆதரவு புரட்சி படையினர் 5 நகரங்களை கைப்பற்றி இருந்தனர். அதில் 4 நகரங்களைக் கடாபி படை மீட்டு உள்ளது. புரட்சி படையினரிடம் இருக்கும் பென்காசி நகரைப் பிடிக்க இப்போது தீவிர தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
போராட்டக்காரர்கள் மீது விமானம் மூலம் குண்டு வீசப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் மூலம் குண்டு வீசுவதற்கு ஐ.நா.சபை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்தன. ஆனாலும் அதிபர் கடாபி கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ராணுவ தாக்குதல்கள் மூலம் ஏராளமானோரைக் கொன்று குவித்து வருகிறார்.

லிபியாவை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்கா 2 விமானந்தாங்கி போர் கப்பல்களை லிபியா அருகே அனுப்பி இருந்தது. ஆனாலும் கடாபி பணியவில்லை. இதற்கிடையே லிபியா பற்றி ஆராய ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம் நியூயார்க்கில் நடந்தது. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 10 பேர் கலந்து கொண்டனர். நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷியா, தற்காலிக உறுப்பினர்களான இந்தியா, ஜெர்மனி, பிரேசில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் கடாபி உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அங்குள்ள மக்களைப் பாதுகாக்க மற்ற நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, பொதுமக்கள் பகுதிகளில் போர் விமானம் பறக்க தடை விதிப்பது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதற்கு 10 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து ஓட்டு போட்டனர். ஐ.நா.சபை தீர்மானத்தை அடுத்து லிபியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.

ஐ.நா.தீர்மானத்தைக் கடாபி ஏற்க மறுத்தால் உடனடியாக தாக்குதல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா இங்கிலாந்து பிரதமர் கேமரூன், பிரான்சு அதிபர் சார்கோசி ஆகியோருடன் அவசரமாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சுசன் ரைஸ் கூறும் போது, "ஐ.நா.சபை தீர்மானம் மூலம் கடாபிக்குக் கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தி மக்களைக் கொல்வதை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றார்.

ஐ.நா.வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க்லேயர் கூறும் போது, "கடாபி மீது நடவடிக்கை எடுக்க சர்வ தேச சமுதாயர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர் உடனடியாக அமைதியைக் கொண்டு வரவேண்டும். இல்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து தயாராக இருக்கிறது" என்றார்.

காதியானிகளுக்கெதிராக போராட்டம் – அனைத்து இயக்கங்களும் திரண்டதால் மேலப்பாளையம் குலுங்கியது!

 

IMG_1009
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் காதியானிகளுக்கு எதிராக அனைத்து இயக்க மற்றும் சமுதாய தலைவர்களும் மற்றும் ஆலிம் உலமாக்களும் ஒரே மேடையில் தோன்றி மாபெரும் இறுதி நபித்துவ பாதுகாப்பு மாநாடு – சரியத் பாடுகாப்பு பேரவை சார்பாக மேலபாளையம் பஜார் திடலில் வைத்து பல தடைகளை மீறி பல இன்னல்களுகிடையே நடைபெற்றது. இதற்கு அனைத்து இயக்க தலைவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

இந்த மாநாட்டில், காதியானிகளுக்கெதிராக பல தீர்மானங்கள் ஏற்றப்பட்டது. அனைத்து முஸ்லீம் இயக்கங்களும் ஒன்று திரண்டதால் மேலப்பாளையம் குலுங்கியது.

மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

 

41578_137524546260530_4894_n
சென்னை:அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆம்பூர், ராமநாதபுரம், சேப்பாக்கம்(திருவல்லிகேணி) ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
மனிதநேய மக்கள் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் ‘இரட்டை மெழுகுவர்த்தி’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

 

Indian_Union_Muslim_League_look_for_8_seats_from_DMK
சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மூன்று தொகுதிகளில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டனம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது முஸ்லீம் லீக்.
இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர் மட்டக்குழு கூட்டம் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை, மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வேட்பாளர்கள் விவரம்:
1) துறைமுகம் – திருப்பூர் அல்தாப் ஹுசைன்
2) வாணியம்பாடி – எச்.அப்துல் பாசித்
3) நாகப்பட்டினம் – எம்.முஹம்மது ஷேக் தாவூது
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் திமுகவின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது.

Thursday, March 17, 2011

EB அதிரை

நாங்கள் குடும்பத்துடன் பல வருடங்களாக வெளியூரில் வசித்து வருகிறோம், சில மாதங்களுக்கு முன் ஊரில் ஏற்பட்ட எங்கள் குடும்பத்தாரின் மவுத்துக்காக அதிரை சென்றிருந்தோம், ஒருநாள் காலை 11:00 மணியளவில் இ.பி யின் கணக்காளர் மீட்டர் ரீடிங் எடுக்க வந்திருப்பதாக கதவைத் தட்டினார், நாங்களும் அனுமதித்தோம், ரீடிங் எடுத்தவர் சார், நீங்கள் 764/- ரூபாய் கட்டவேண்டும் என்று சாதாரணமாக சொன்னார்;

நான் அதிர்ந்து போய் அவரிடம் சொன்னேன் " எங்கள் வீடு வருடம் முழுதும் பூட்டித்தான் இருக்கும், பள்ளிக்கூட லீவில் மட்டும்தான் வருடம் 2 முறை ஊர் வருவோம் அதுவரை மின் உபயோகத்திற்கான தேவையே எங்கள் வீட்டிலில்லை, இந்த முறை ஒரு மெளத்துக்காக ஒருநாள் கட்டம் வந்த்ருக்கிறோம்  மின்சார மீட்டரே ஓடாமல் 764/- ரூபாய் என்று சொன்னால் எப்படி? என்ன கணக்கு?" என்று கேட்டவுடன்.

ஓஹோ நீங்கள் வெளியூரில் இருக்கிரீர்களா? அப்படியென்னறால் குறைந்த கட்டணம் ரூபாய் 40/= மட்டும் கட்டுங்கள்.என்று சொல்லி சென்றார் அதன்படி கடந்த 2 தவணைகளில் ரூ40/ மட்டும் கட்டி வருகிறேன்.

வீடு பூட்டித்தான் இருக்கிறது.வீட்டுக்கு வாட்ச்மேன் வந்து போனாலும் மின்சாரம் குறைந்த பயன்பாடுதான் வரும்,அப்படியென்றால் ரூ 764/= என்ன கணக்கு?.

ஆனால் வெளியில் பலரிடம் விசாரித்த வகையில் அதிரை இ.பி.க்காரர்கள் மீட்டர் ரீடிங் எடுக்க வரும்பொழுது வீட்டை சுற்றுமுற்றும் நோட்டமிட்டு வீட்டில் வின்டோ ஏ.சி, ஸ்பிலிட் ஏ.சி ஏதும் கண்ணில் பட்டால் ஏ.சி. ஓடாமல் இருந்தாலும் கூட அதிக தோராயமாக பில்லைப் போட்டு E.B தாலி(யறு)த்து விடுவதாகக் கேள்வி! ஏன் இ.பி க்கு இந்த பாரபட்சமும், பழிவாங்கும் நோக்கமும்? பூட்டிய வீட்டுக்கு ரூ 764/- ஏன்? இது போல் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பார்களோ?

அப்படியிருந்தால் இங்கு  தெளிவாக பதியவும். இதுபோல் எத்தனை டிபார்ட்மென்ட்களில் நாம் வஞ்சிகப்பட்டு வருகிறோம்? E.B யிடமிருந்து சரியான பதில் கிடைக்குமா?

இன்னொறு அதிர்ச்சி தகவல் மீட்டர் ரீடிங் எடுப்பவர் கையில் வைத்திருக்கும் கருவியில்(DEVICE) அதிரையின் அதிகமான வீடுகளின் மீட்டர் பற்றிய விவரம் மிஷினில் ஏற்றாமலேயே (FEED) தோராயமாக கணக்கிடப்படுகிறதாம்.

ராஜாவின் கூட்டாளி சாதிக் தற்கொலை : ஸ்பெக்ட்ரம் விசாரணையில் திருப்பம்


சென்னை Mar 17 : ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்கைது செய்யப்பட்ட ராஜாவிற்குநெருக்கமாக இருந்த கூட்டாளி சாதிக் பாட்சா, நேற்று தன் வீட்டில்மர்மமான முறையில் மரணம்அடைந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள வெள்ளாள தேனாம்பேட்டை, எல்லையம்மன் காலனி, 5வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சாதிக் பாட்சா(37). பெரம்பலூர் மாவட்டம், நத்தம் குடிக்காடைச் சேர்ந்த இவர், சென்னையில் "கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தில், ராஜாவின் மனைவிபரமேஸ்வரி, ராஜாவின் சகோதரர்உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருந்த காரணத்தால், ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 8ம் தேதி, சென்னையில் உள்ள சாதிக்பாட்சாவின் வீடு, தி.நகர். தியாகராயா சாலையில் உள்ள அலுவலகம்உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி, அங்கிருந்து முக்கியஆவணங்களை அள்ளிச் சென்றது.தொடர்ந்து, சாதிக் பாட்சாவிடம் விசாரணையும் நடத்தியது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்உத்தரவின்படி, வரும், 31ம் தேதி, இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளதால், வியாழக்கிழமை, இன்று (மார்ச் 17) விசாரணைக்கு ஆஜராகும்படி சாதிக் பாட்சாவிற்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியிருந்தது. சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜராவதற்காக, சாதிக் பாட்சா நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி செல்வதாக இருந்தது.பகல் 11 மணிவரை ரெகனா பானு(28), ஒன்றரை வயதான இரண்டாவது மகன் ஆதின் ஆகியோரிடம் பேசி விட்டு, குளிப்பதற்காக, வீட்டின் முதல் தளத்தில் உள்ள படுக்கையறைக்கு சென்றார்.அப்போது வீட்டில், மனைவி, இரண்டாவது மகன் தவிர, சாதிக்கின் மாமியார் மற்றும் டிரைவர் இருந்தனர். காலை, 11:15 மணிக்கு, சென்னை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும், முதல் மகன் ஆஷிலை (3) அழைத்து வருவதற்காக ரெகனா பானு, காரில் புறப்பட்டுச் சென்றார்.இவர், 12: 30 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். 12:30 ஆன போதும் கணவர் குளித்துவிட்டு வராததால், சந்தேகமடைந்த ரெகனா பானு, முதல் தளத்திற்குச் சென்றார். கதவை தட்டிப் பார்த்தார்; திறக்கவில்லை.

மீண்டும், பகல் 12:45 மணிக்குமீண்டும் தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை. சந்தேகமடைந்த ரெகனா பானு, ஜன்னல் வழியாக பார்த்த போது, படுக்கையறையில் சாதிக் பாட்சா, தொட்டில் கட்டும் கயிறால் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.உடனடியாக டிரைவரை அழைத்த ரெகனா, அவருடன் சேர்ந்து கதவை உடைத்து, பிற்பகல் ஒரு மணிக்கு சாதிக்கின் உடலை கீழே இறக்கினர். குற்றுயிராய் துடித்துக் கொண்டிருந்த அவரை, காரில் ஏற்றி, 1:30 மணிக்கு சென்னை, ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு, பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக, 1:40 மணிக்கு தெரிவித்தனர். தொடர்ந்து பகல், 2:10 மணிக்கு, சாதிக்பாட்சாவின் கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் போலீசுக்கு, சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.சாதிக்கின் உடல், 2:50க்கு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இதற்கிடையில், சாதிக்கின் மனைவி மாமியார், மைத்துனர்,குழந்தைகள், 2:30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டனர். அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மாலை, 5:10 மணிக்கு திடீரென தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், சாதிக் பாட்சாவின் மனைவி ரெகனா, மாமியார் உள்ளிட்டவர்கள் கொண்டுவரப்பட்டனர்.

சாதிக்கின் உடல் இன்று ஒப்படைப்பு : சாதிக் பாட்சா தற்கொலை விவகாரத்தால், அப்பல்லோ மருத்துவமனை, தேனாம்பேட்டை போலீஸ் நிலையம், சாதிக்பாட்சாவின் வீடு ஆகிய பகுதிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டன. சாதிக் பாட்சாவின் மனைவியிடம் அறிக்கை பெற்று, வீட்டிற்குச் சென்று தடயங்களை ஆய்வு செய்யும் போதே மாலை, 6 மணிக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தால், பிரேத பரிசோதனைநடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று காலை, 9 மணிக்கு சாதிக் பாட்சாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

சி.பி.ஐ., ரெய்டே காரணம் : கணவர் சாதிக் தற்கொலைக்கு சிபிஐ ரெய்டே காரணம் என அவரது மனைவி ரேகனா கூறியதாக தெரிகிறது.ரேகனாவிடம் பெறப்பட்ட அறிக்கையில்,"ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., ரெய்டு நடந்து, அது மீடியாக்களில் வெளிவந்ததில் இருந்து கணவர், மிகுந்த வேதனையில் இருந்தார். இதைத் தொடர்ந்து, இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார். பிற்பகல், 1 மணிக்கு, படுக்கையறையில் தூக்கில் தொங்கிய அவரை, டிரைவருடன் சேர்ந்து மீட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்' என்று, தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சாதிக் பாட்சா தற்கொலையில் மர்ம முடிச்சு?ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கும் என, சி.பி.ஐ., கருதிவரும் நிலையில், அந்த விவகாரம் பற்றி முழுமையாக அறிந்திருந்த, சாதிக் பாட்சா, தற்கொலை செய்து கொண்டுள்ளது, பெரம்பலூர் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.சாதிக் பாட்சா, முன்னாள் அமைச்சர் ராஜா குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து, பல தொழில்களும் செய்து வந்தார். சி.பி.ஐ., விசாரணைக்கு பின்னர் கூட, தற்கொலை செய்து கொள்ளாத சாதிக் பாட்சா, திடீரென தற்கொலை செய்து கொண்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து, பெரம்பலூரில் அவருடன் நன்கு பழகிய சிலர் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவின் பெயர் அடிபடத்துவங்கியதுமே, "அரசியல்வாதிகள் தொடர்பு வேண்டாம். அனைத்தையும் விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலை மட்டும் பார்த்தால் போதும்' என, அட்வைஸ் செய்தோம்.ஆனால், "தெரியாமல், அரசியல்வாதிகளுடன் பழகிவிட்டேன்; அதிலிருந்து மீளமுடியாது' என, சாதிக் பாட்சா வருத்தப்பட்டார். அதேசமயம், அவரது மனைவி ரேகனாவும், "உங்களுக்கு தெரிந்ததை சொல்லி அப்ரூவராக மாறிவிடுங்கள். அதன்பின், நாம் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தலாம். இல்லாவிட்டால் அவமானங்களால் நானும், குழந்தைகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம்' எனக் கூறினார்.கடந்த இரண்டு மாதங்களாகவே சாதிக் விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டார். யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது. ஆனால், நாங்கள் பழகியவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல என்பதை மட்டும், உறுதியாக சொல்ல முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சாதிக் பாட்சாவுக்கு ரேகனா என்ற மனைவியும், சோதனைக்குழாய் மூலம் பிறந்த, நான்கு வயதுடைய ஆதில், ஆசில் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.இவருடைய மாமனார் முஸ்தபா, 1975ம் ஆண்டுக்கு முன், பெரம்பலூர் தி.மு.க., நகரச் செயலராக இருந்தார்; அவர் இப்போது உயிரோடு இல்லை.இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை: அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ., திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாதிக் பாஷா மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது இந்த வழக்கின் விசாரணையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

டிக்... டிக்... நடந்தது என்ன?
காலை 11 மணி: சாதிக் பாட்சா குளிக்கச் சென்றார்.
11:15: சாதிக்கின் மனைவி @ரகனா பானு, பள்ளியில் படிக்கும் மகனை அழைத்து வர காரில் சென்றார்.
பிற்பகல் 12:30: ரேகனா மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
12:45 - 1 மணி: ரேகனா படுக்கையறையின் கதவை தட்டி திறக்காததால், அறைக்
கதவை டிரைவருடன் சேர்ந்து உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிக் பாட்சாவின் உடலை இறக்கினர்.
1:30 மணி: ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ
மனைக்கு சாதிக் பாட்சா காரில் கொண்டு செல்லப்பட்டார். உடன் மனைவி @ரகனா இருந்தார்.
1:40 மணி: சாதிக் பாட்சா இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
2:10 மணி: சாதிக் பாட்சாவின் கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் போலீசுக்கு, சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2:30 மணி: சாதிக்கின் மனைவி மற்றும் மாமியார், மைத்துனர், குழந்தைகள் இருவர் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டனர்.
2:50 மணி: அப்போலோ மருத்துவமனைல் இருந்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சாதிக் பாட்சாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
மாலை 5:10 மணி: திடீரென தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், சாதிக்
பாட்சாவின் மனைவி @ரகனா, மாமியார் உள்ளிட்டவர்கள் கொண்டு
வரப்பட்டு, விசாரணை நடந்தது.
5:30 மணி: விசாரணை முடிந்து, அனைவரும் எல்லையம்மன் காலனிக்கு
அழைத்துச் செல்லப்பட்டனர்.
5:40 மணி: வீட்டை திறந்து, சாதிக் பாட்சாவின் மனைவி, மாமியார் மற்றும்
உறவினர்கள், போலீசார், தடயவியல் துறையினர் உள்ளே சென்றனர்.
6:45 மணி: சாதிக் பாட்சாவின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இரவு 7:00 மணி: தடயவியல் துறையினர் கைரேகைகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து புறப்பட்டனர்.
7:30 மணி: சாதிக்பாட்சாவின் மனைவி, மாமியார் உள்ளிட்ட உறவினர்கள் காரில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.
8 மணி: வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு போடப்பட்டது.

சாதிக்கின் உடலை யாரும் பார்க்கவில்லை : சாதிக் பாட்சா தற்கொலை சம்பவம் தொடர்பான சந்தேகங்கள் பல இருந்தாலும், அவர், இறந்த செய்தியை அறிந்தபின், பகல் 2:30 மணி வரை வீட்டில் இருந்த மனைவி மற்றும் உறவினர்கள் மாலை 5:10 மணிவரை எங்கு சென்றனர் என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. கணவனின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதும் உறவினர்கள் யாரும் உடன் இல்லை.மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பிணவறையில் வைக்கப்பட்ட போதும் அங்கும் யாரும் இல்லை. பகல் 1:40 மணியில் இருந்து இதுவரை, சாதிக்கின் உடலை அவரது உறவினர்கள் யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில், திடீரென 5:10 மணிக்கு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இடையில் அவர்கள், எங்கிருந்தனர்? அவர்கள் மறைத்து வைக்கப்பட்டார்களா? மிரட்டப் பட்டார்களா? இவை அனைத்தும், புரியாத புதிராக உள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதிக்கின் உடல் பொதியப்பட்டது ஏன்?தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவின் உடல், அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின், போலீசாருக்கு தகவல் தெரிந்து அங்கு வந்தனர். சாதிக்கின் உடல் பிரேதபரிசோதனைக்கு பின்பு தான், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது. பிற்பகல் 2:40க்கு உடல் மருத்துவமனையில் இருந்து, வெளியில் கொண்டுவரப்பட்டது. அப்போது, பத்திரிகையாளர்கள் சாதிக்கின் உடலை போட்டோ எடுக்க முண்டியடித்தனர்.போலீசார் தடுத்ததால், இருதரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, வார்த்தைகள் தடித்தன. வெளியில் கொண்டுவரப்பட்ட போது, சாதிக்கின் உடல் முழுமையாக வெள்ளை துணியால், பிரேத பரிசோதனைக்கு பின், பொதியப்படுவது போல் தயார் செய்யப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். முகமும் மூடப்பட்டிருந்ததால், திறந்து காட்டும்படி, போட்டோ கிராபர்கள் கூறினர்.இதையடுத்து, முகம் மட்டும் காட்டப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனைக்கு முன், உடலை துணியைக் கொண்டு பொதிந்தது ஏன் என்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. சாதிக்கின் உடலில் வேறு ஏதேனும் காயங்கள் இருந்து மறைப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டதா, கொண்டு செல்லப்பட்டது சாதிக்கின் உடல்தானா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

யார் இந்த சாதிக் பாட்சா?தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்துக்கு, கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், தன் சகோதரர்களுடன் பிழைப்பு தேடி வந்த சாதிக் பாட்சா, கிடைத்த வேலைகளை செய்து வந்தார். பின், சைக்கிளில் ஊர், ஊராக சென்று, தவணை முறையில் துணி வியாபாரம் செய்தார்.அந்த வியாபாரத்தில் கண்ட வளர்ச்சியின் மூலம், எலக்ட்ரானிக் பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்யும் தொழிலுக்கு மாறினார். வீட்டு புரோக்கராக மாறினார். 1995ல், முன்னாள் அமைச்சரும், தாட்கோ சேர்மனுமாக இருந்த அ.தி.மு.க., பிரமுகர் வரகூர் அருணாச்சலத்தின் நட்பு கிடைத்தது.ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், வக்கீலாக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, அடிக்கடி வரகூர் அருணாச்சலத்தை சந்தித்து வந்தார். அப்போது தான், ராஜாவுக்கு அறிமுகமானார் சாதிக். பின், நட்பு வளர்ந்தது.கடந்த, 1999ல், ராஜா எம்.பி., ஆனவுடன், சாதிக், தன் பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய, மாநிலம் முழுவதும் அலுவலகங்களை துவக்கியுள்ளார். சிறிய அளவில் நிலங்களை வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்தார்.கடந்த, 2004ல், ராஜா, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது சாதிக், "கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கினார். முதலில் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தில், எம்.டி.,யாக சாதிக்கும், ராஜாவின் குடும்பத்தில் சிலர் இயக்குனர்களாயினர்."கிரீன்ஹவுஸ்' நிறுவனம் துவங்கிய ஒரே ஆண்டில், கோடிக்கணக்கான ரூபாய் லாபம் பார்த்ததாக கணக்கு காட்டியுள்ளது.கடந்த, 2007-08ம் ஆண்டுகளில், "கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ்' நிறுவனம் அபார வளர்ச்சியை பெற்றது. இந்த காலகட்டத்தில் தான், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் நடந்தது. சாதிக்கின் சொத்து மதிப்பு, 500 கோடிக்கும் மேல் உயர்ந்தது.இவ்விஷயம், சமீபத்தில் நடந்த சி.பி.ஐ., சோதனையில் தெரியவந்துள்ளது.

இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை : அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ., திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாதிக் பாஷா மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது இந்த வழக்கின் விசாரணையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

இதேபோன்ற தற்கொலை!: கடந்த, 2001ல், ஸ்டாலின் மேயராக இருந்தபோது, அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் அண்ணாநகர் ரமேஷ். கான்ட்ராக்டிற்கு பணம் பெற்ற விவகாரத்தில், தெய்வசிகாமணி என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரில், ஸ்டாலின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.இந்த வழக்கில் முக்கிய நபராக சேர்க்கப்பட்டிருந்த அண்ணாநகர் ரமேஷ், 2001ம் ஆண்டு, ஜூலை 17ம் தேதி, தன் வீட்டில் மனைவி, மூன்று குழந்தைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இத்துடன், அந்த வழக்கு நீர்த்துப் போனது.

சாதிக் பாட்சா வழக்கு: சி.பி.ஐ.,க்கு மாற்றம் : தமிழக அரசு பரிந்துரை : இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு துறையினரால்(சி.பி.ஐ.,) சாதிக் பாட்சா விசாரிக்கப்பட்டு வந்தார். நேற்று அவரது வீட்டில் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், அவர் சி.பி.ஐ.,யினரால் விசாரிக்கப்பட்ட பின்னனியைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்கை மேல் விசாரணைக்காக சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்

 

fish
தொடர்ந்து மீன்களை சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் தொடர்ந்து மீன்களை சாப்பிடுவதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம் நீண்ட கால கண் நோய்களை தவிர்க்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கண்ணில் உள்ள ரெட்டினா விழித்திரையில் ஒரு பகுதியாக மாக்யூலர் உள்ளது. இந்த மாக்யூலர் பாதிக்கப்படுவதால் பார்வை குறைபாடு ஏற்படும். இந்தக் குறைபாட்டை தவிர்ப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் வகைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு கடந்த 10 ஆண்டுகளாக 38 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை பார்வையியல் தொடர்பான ஆவண இதழில் ஜீன் மாதம் வெளியிடப்படுகிறது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் உணவு பழக்க முறையையும், அந்த உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு தொடர்புடையதாக உள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.
ஒமேகா கொழுப்பு அமில உணவு அதிகம் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மாக்யூலர் நோய் தாக்கம் 38 சதவீதம் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை பிர்கமிம்மன் வில்லியம் கிறிஸ்டின், யு.எஸ் பாஸ்டன் பெண்கள் மருத்துவமனை மற்றும் ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

Wednesday, March 16, 2011

ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும்

சென்னை, மார்ச் 16- ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர்,  மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை http://www.hajcommittee.com/ என்ற இணையதளம் மூலமாகவும் அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ரத்த-உறவுமுறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும்.  இவ்வுறையில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது.
விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ, அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், கடவுச் சீட்டின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவங்களை 30 ஏப்ரல் 2011-ற்குள் மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
தங்கள் வசம் பாஸ்போர்ட் இல்லாதவர்கள், முதலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திடமிருந்து பெற்ற ரசீதின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.31634038682-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் பன்னாட்டு கடவுச் சீட்டு இருப்பின் அதன் நகலை அல்லது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தால் மண்டல     பாஸ்போர்ட் அலுவலக ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும்.  
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 ஆகும்.
ஹஜ் 2008, 2009 மற்றும் 2010-ல், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தெரிவு செய்யும் திட்டத்தைத் தொடர்வது என மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.
ஹஜ் 2011-ல் இச்சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சக பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான உறை எண் விபரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். (புதிய விண்ணப்பதாரர்கள் எவரையும் சேர்க்கக்கூடாது).
இவ்விண்ணப்பதாரர்கள் குலுக்கல் இன்றி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற தகுதியைப் பெறுவார்கள். இவ்வாறு சிறப்பு வகையில் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் மற்றும் ஹஜ் 2011-ற்கு விண்ணப்பிக்கவேண்டும். 
விண்ணப்பங்களை பெறும் கடைசி நாள் வரையில், சிறப்பு வகை விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள இருக்கைகள் பொதுவகையில் அளிக்கப்பட்டு, அவ்விருக்கைகளுக்கு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்தி தேர்வு செய்யும்.  


மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக சிறப்பு வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் மாநில ஹஜ் குழு, சிறப்பு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குலுக்கலை நடத்தும்; பொது வகையில் புதியதாக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  
மத்திய ஹஜ் குழுவால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில், கணினி மூலமாக குலுக்கலை நடத்தி தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகளுக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவிக்கும். குலுக்கல் மூலமாக பயணிகள் தேர்வு செய்யப்படுவது முற்றிலும் தற்காலிகமானது.
குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் புகைப்படத்தை இணைத்து, அந்த பாஸ்போர்ட்டுடன் ரூ.31,000/- செலுத்தியதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து 15.6.2011-க்குள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.    
You may download it from
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன் பதட்டம் - ஆறு பேர் பலி

பஹ்ரைனில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 6 பேர் கொல்லப் பட்டுள்ளனர். முத்து சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகுமாறு ராணுவம் விடுத்த வேண்டுகோளை ஆர்ப்பாட்டக்காரர்கள் புறக்கணித்து மோதலில் ஈடுபட்டனர்.கண்ணீர் புகையை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை ராணுவத்தினர் விரட்டினர்.

இந்த மோதலின் போது மூவர் கொல்லப்பட்டனர். மேலும் இரு காவல்துறையினர் வாகனங்கள் மோதி இறந்துள்ளதாக பஹ்ரைன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவைச் சார்ந்த ஒரு வீரரும் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


நேற்றைய அவசர நிலை பிரகடனத்திற்கு பின்னர் ஆர்ப்பாட்டங்கள் எதனையும் நடத்தக் கூடாது என பஹ்ரைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது தாக்குதல் நடத்தியதற்கு  ஷியா பிரிவைச் சார்ந்த முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


ஈரானைச் சார்ந்த கடுங்கோட்பாட்டாளர்கள் பஹ்ரைனை ஈரானின் 14வது மாகாணமாக சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

எஸ்.டி.பி.ஐ:முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு

sdpi flag1
சென்னை:எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட  6  தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்:
1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்):  நெல்லை முபாரக்
2இராமநாதபுரம்: அப்துல் ஹமீத்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்): முஹம்மது தாரிக்
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்): உமர் கத்தாப்
5.துறைமுகம்(சென்னை): அமீர்
6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் :-நிரவி பதுர்தீன். ஆகியோர் போட்டியிடுகின்றனர்.