Sunday, February 27, 2011

எகிப்தின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் பிரிட்டன் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் கண்டனம்

கெய்ரோ,பிப்.28:எகிப்தில் மக்கள் புரட்சிக்கு பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் எகிப்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் விதமாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான எஸ்ஸாம் அல் எரியான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: "௦65 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டனின் ஆதிக்கம் எகிப்தில் முடிந்து போய்விட்டது. எகிப்தியர்களுக்கு அவர்களுடைய பிரச்சனையை எப்படி நிர்வகிக்க வேண்டுமென்பது நன்றாகவே தெரியும்." எனத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் எகிப்து சுற்றுப்பயண வேளையில் ராணுவ ஆட்சியாளர்கள் மற்றும் தேர்வுச் செய்யப்பட்ட சில எதிர்கட்சியினரை சந்தித்துப் பேசினார். ஆனால், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத் தலைவர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார். மேலும் பிரிட்டன் பிரதமர் காமரூன், எகிப்து உள்பட அரபுலகத்தில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப பிரிட்டன் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

பிரிட்டன் பிரதமர் காமரூனின் மத்தியக்கிழக்கு சுற்றுப்பயணம் பிரிட்டனிலும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அவர் தனது சுற்றுப்பயணத்தின் போது எட்டு ஆயுத தயாரிப்பாளர்களை அழைத்துச் சென்றது வெட்கக்கேடு என அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி:ப்ரஸ் டிவி

No comments:

Post a Comment