Sunday, March 6, 2011

ரூ. 3450 கோடி நஷ்டத்தில் ஏர் இந்தியா! வயலார் ரவி

புதுடெல்லி: மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நடப்பு நிதிஆண்டின் முதல் அரையாண்டில் ரூ. 3,450 கோடி நஷ்டமடைந்துள்ளது. என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்திய விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்
கடந்த 2007 08ம் நிதி ஆண்டில் ரூ. 2,226.167  கோடியும், 2008 09ம் நிதி ஆண்டில் ரூ. 5,548.26  கோடியும், 2009 10ம் நிதி ஆண்டில் ரூ. 5,552.44  கோடி நஷ்டத்தையும் ஏர் இந்தியா சந்தித்துள்ளது.  2010 11ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்நிறுவன நஷ்டம் ரூ. 3,450 கோடியாகும். நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையை வலுப்படுத்த மத்திய அரசு ரூ. 2,000 கோடி கடனுதவி அளித்துள்ளது.
வரும் நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 1,200 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். மத்திய அரசு அளிக்கும் மூன்றாவது தவணை நிதி உதவி இதுவாகும். ஏற்கெனவே 2009 10ம் நிதி ஆண்டில் ரூ. 800 கோடியும், 2010 11 ம் நிதி ஆண்டில் ரூ. 1,200 கோடி நிதியும் மத்திய அரசு அளித்துள்ளது.

No comments:

Post a Comment