Monday, April 25, 2011

பேரூராட்சி

அன்னிய செலவானியை அள்ளித்தரும் அதிரையில் பொதுமக்களுக்கு தேவையான எந்த ஒரு பணியாயிருந்தாலும் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ்தான் செயல்படுத்தவேண்டி இருப்பதை நாம் அறிவோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி உறுப்பினர்களோ அடிப்படை சுகாதாரப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் உப்புச்சப்பானியாய் வாய்மூடி அமைதியாய் இருக்கின்றனர்.

சுகாதாரப்பிரச்சினைகள், தெருக்களில் கொசு மருந்து அடிப்பது, தெருக்களை சுத்தம் செய்தல், சாக்கடை கால்வாய் வசதி, ரோடு வசதி போன்றவைகள் அரசாங்கம் தானாகவே செயல்படுத்தவேண்டிய திட்டங்கள். ஆனால், இளிச்சவாயர்கள் எங்கு அதிகமாக இருக்கிறார்கள் என்று பார்த்து நமக்கு நாமே திட்டத்தை அறிமுகம் செய்கிறார்கள் அரசு அதிகாரிகள். அந்த வகையில் சமீபத்தில் கூட நமதூர் நடுத்தெருவில் அமையப்பெற்றுள்ள ரோட்டிற்கு நமக்கு நாமே திட்டம் மூலம் நமதூர் சகோதரர்கள் சுமார் மூன்று இலட்சம் வரை பண உதவி செய்தனர். இதில் கணிசமாக வெளிநாடுகளில் வசூல் செய்யப்பட்டது.



இதேப் போன்று, சுகாதாரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ததாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசும், நமதூரின் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க பேரூராட்சி நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையையும் இதுவரை எடுக்காத நிலையில் நமதூர் இளைஞர்கள் சிலர் ஒருசில ஆண்டுகளுக்கு முன் தெருக்களை சுத்தம் செய்வதற்கு, கொசு மருந்து அடிப்பதற்கும் பொதுமக்களிடம் வசூல் செய்து (நமக்கு நாமே) ஆட்களை நியமித்து பராமரித்து வந்தனர். ஆனால் கடுமையான பொருட்செலவினால் தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் போனது.



மனம் தளராத நமதூர் சகோதரர்கள் மீண்டும் பொதுமக்களிடம் வசூல் செய்து (திரும்ப திரும்ப சொல்லனும்னா அதே நமக்குநாமே திட்டம்) ஆயிஷா மகளிர் அரங்கம் பெயரில் இரும்பு கூண்டுகள் வாங்கி நகர் முழுதும் வைத்தனர்.

இந்த சிறிய வகை கூண்டுகளில் கொட்டப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வந்து அல்லது நாட்களை கடத்தியே சுத்தம் செய்கிறது. குப்பைகள் கூண்டுகளில் நிறைந்து வீதி முழுதும் விரவிக் கிடக்கிறது. சில தெருக்கள்ஆண்டுக்கு இருமுறை (இரண்டு பெருநாட்கள்) மட்டுமே சுத்தம் செய்யப்படுகிறது.

ஏற்கெனவே எல்லா வீதிகளிலும் குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடுகள் விளைவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த பெரிய குப்பைத் தொட்டிகள் பெரிய அளவில் இருப்பதால் குப்பைத் தொட்டிக்கு வெளியில் குப்பை வருவது குறையும். ஆனாலும், பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி மருந்து அடித்து குடிமக்கள் சுகாதாரமாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment