Tuesday, April 19, 2011

பெட்ரோலியப் பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும்

கடைசியாக பெட்ரோல் விலை கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி லிட்டருக்கு ரூ.2.50 அதிகரித்தது.  இப்போதைய நிலவரப்படி கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்து விட்டத்தால், இந்திய எண்ணை நிறுவனங்களில் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.4.50, டீசலில் ரூ.15.79, மண்ணெண்ணையில் ரூ.24.74 மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டரில் ரூ.297.80 இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.


எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வேண்டி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாகவும், 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலையொட்டிய நடத்தை விதிகள் அடுத்த மே மாதம் 16-ந்தேதி முடிவுக்கு வந்த பின் இதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment