Tuesday, April 26, 2011

குறுஞ்செய்தி (SMS) அனுப்பி கேஸ் சிலிண்டர் பெறலாம்

சமையல் எரிவாயு பதிவு செய்ய இனி நேரில் செல்லத் தேவையில்லை. குறுஞ்செய்தி அனுப்பி எளிதாக பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த வசதியை தமிழக அரசின் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலர் ஸ்வரண் சிங் தொடங்கி வைத்தார்.
சென்னை, இந்தியன் ஆயில் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்நிறுவன செயல் இயக்குனர் பிரசாத், தலைமை மண்டல மேலாளர் லட்சுமிநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர். 8124024365 என்ற எண்ணுக்கு செல்போன் அல்லது தொலைபேசி மூலம் அழைத்து தானியங்கி குரல் பதிலளிப்பு முறையின்கீழ் (IVRS) பதிவு செய்யலாம்.

முதல்முறை அழைக்கும்போது வாடிக்கையாளர் தமது தொலைபேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, தானியங்கி குரல் பதிலளிப்பு முறையில் காஸ் இணைப்பு எண்ணைப் பதிவு செய்யலாம். பதிவானதும் அதற்கான எண் தெரிவிக்கப்படும்.

பதிவு செய்த போன் எண்ணில் இருந்து அடுத்தடுத்த முறை அழைக்கும்போது காஸ் சிலிண்டர் பதிவு மேலும் எளிதாகும். அத்துடன் 8124024365 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். சிலிண்டர் வீடு தேடி வரும். இந்த வசதியை சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 110 காஸ்விநியோகஸ்தர்களிடம் பெறலாம். இந்த வசதியில் 24 மணி நேரமும் காஸ் சிலிண்டர் பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment