Tuesday, May 24, 2011

பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்

பாலாடைக்கட்டி மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவதற்கு யாருக்குதான் விருப்பம் இருக்காது. இந்த பால் பொருட்களை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது.
இத்தகைய சுவை விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை ஆராய்ச்சியாளர்கள் தந்துள்ளனர். வெண்ணெய், பாலாடை கட்டி சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்காது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நுண் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆயிரக்கணக்கான நபர்களை ஆய்வு செய்த போது அரை கிலோவுக்கு மேல் பாலாடை கட்டி சாப்பிட்டவர்களுக்கும் மாரடைப்பு அபாயம் ஏதும் ஏற்படாததை கண்டறிந்தனர்.
ரோடே தீவின் ப்ரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டெல்லா அஸ்லி பெக்யான் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் வெண்ணெய் பொருட்களால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்காது என தெரியவந்துள்ளது.
பால் மற்றும் பாலாடைக்கட்டி கூட்டுப் பொருட்களை கொண்டது. ஆய்வின் போது பால் பொருட்களுக்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. குறிப்பாக பால் பொருட்களில் உள்ள கொழுப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பாலில் உள்ள கொழுப்பு தீங்கு விளைவிக்காது என ஆய்வுக் குழு உறுதியாக நம்பாத போதும் அதில் உள்ள கால்சியம், வைட்டமின் டி, பொட்டாசியம் இதய நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 593 கிராம் பால் பொருட்கள் எடுத்துக் கொண்ட போது மாரடைப்பு பாதிப்பு இல்லாததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

source : http://puthiyathoothu.blogspot.com/

No comments:

Post a Comment