Saturday, May 14, 2011

இறைநம்பிக்கைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்

உங்களில் முன் வாழ்ந்த மக்களில் மூவர் தூர பயணத்தில் இருக்கும் போது இரவாகி விட்டது ஒரு குகையில் இரவைக் கழிக்க நாடி அதில் நுழைந்தார்கள். அப்பொழுது ஒரு பாறாங்கல் உருண்டோடி வந்து அக்குகையின் வாசலை அடைத்து விட்டது. அல்லாஹ்விடம் பிரார்ப்பிப்பதைத் தவிர வேறுவழி இல்லை என்கிற முடிவுக்கு அவர்கள் வந்தனர்


அவர்களில் ஒருவர் இறiவா ! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர் அவ்விருவருக்கும் முன்பதாக நானோ, எனது மனைவி பிள்ளகளோ, எனது அடிமைகளோ உண்ண மாட்டோம். ஒரு நாள் நான் விறகைத் தேடி வெகுதூரம் சென்;று விட்டேன் நான் திரும்பி வருவதற்குள் அவர்கள் இருவரும் உறங்கி விட்டனர் அவர்களுக்காக பாலைக் கறந்தேன் அவர்களை எழுப்புவதை, அல்லது அவர்களுக்கு முன்பதாக நாங்கள் அருந்துவதை விரும்பாமல் எனது பெற்றோர் விழிக்கும் வரை (வைகறை வரை) காத்திருந்தேன் அவர்கள் விழித்ததும் அவர்களுக்கு புகட்டினேன் அதன் பிறகே நாங்கள் அருந்தினோம். இறiவா ! இதனை நான் உனது திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் இந்த பாறாங்கல்லை எங்களை விட்டும் அகற்றுவாயாக! எனக்கூறியதும் பாறாங்கல் ஓரளவு நகர்ந்தது,


இரண்டாமவர் கூறினார் இறைவா ! எனது உறவுக்காறப் பெண்ணொருத்தி அவள் எனக்கு மிகப்பிரியமானவளாக இருந்தால் ஆண்கள் பெண்களை நேசிப்பதில் மிக அதிகமாக அவளை நான் நேசித்தேன் பின்னர் நான் அவளை எனது இச்சைக்காக நாடினேன் எனினும் அவள்(எனது ஆசைக்கு இணங்க) மறுத்து விட்டாள். பின்னர் பஞ்சமான ஓர் ஆண்டு வந்தது அப்பொழுது அவள் என்னிடம் வந்து பொருளாதார உதவிக் கோரினாள் அப்பொழுது அவள் எனக்கு விதித்த தடையை நீக்கி விட வேண்டும் எனக் கூறி அவளுக்கு 120 பொற்காசுகளைக் கொடுத்தேன் அவளும் சம்மதித்து பெற்றுக்கொண்டால் அவளை நெருங்கும் பொழுது அல்லாஹ்வை பயந்து கொள் ! முத்திரையை அதற்குரிய உரிமையின்றி உடைத்து விடாதே! எனக்கூறினாள் அல்லாஹ்வுக்கு பயந்துகொள் என்று சொன்ன மாத்திரத்திலேயே நான் விலகி விட்டேன் அத்துடன் அவளிடம் கொடுத்த பொற்காசுகளையும் அவளிடமே விட்டும் விட்டேன் இதை நான் உன் திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் இந்த பாறாங்கல்லை விலகச் செய்திடுவாயாக ! எனக் கூறியதும் மீண்டும் ஓரளவு விலகியது.



மூன்றாமவர் கூறினார் இறiவா ! நான் பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கினேன் அதில் ஒருவர் மட்டும் அவருடைய கூலியை வாங்காமல் சென்று விட்டார் எனினும் அவரது கூலியை எனது பண்ணையில் தனியாக முதலீடு செய்து அதனுடைய வரவு செலவை பாதுகாத்து வந்தேன் அதிலிருந்து பல செல்வங்கள் பெருகி வந்தன. சில காலத்துக்குப் பிறகு அந்த வேலையால் என்னிடம் வந்து ஓ இறை அடியாரே ! எனது கூலியை நிறைவேற்றுவீராக ! என்று கூறினார் அதற்கு நான் நீர் பார்க்கும் இந்த ஒட்டகைகள், மாடுகள், ஆடுகள் அடிமைகள் அனைத்தும் உனது சொத்துக்கள் தான் என்றேன். அதற்கவர் ஓ இறை அடியாரே என்னை நீர் கேலி செய்கிறீரா? என்றார் அதற்கு நான் உம்மை கேலி செய்ய வில்லை உண்மையைத்தான் சொல்கிறேன் என்றேன். பிறகு நான் கூறியபடியே அவரது எல்லாப்பொருள்களையும் எடுத்து சென்றார் அதில் அவர் எந்தப் பொருளையும் விட்டு செல்ல வில்லை.



இறiவா! இதை நான் உன் திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் எங்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையை எங்களை விட்டு அகற்றுவாயாக! என்றதும் பாறை முழுமையாக நகர்ந்தது அவர்கள் அனைவரும் அக்குகையிலிருந்து அல்லாஹ்வை தியானம் செய்தவர்களாக வெளியேறினர்.

அல்லாhஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூற கேட்டதாக உமர் ( ரலி ) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: புகாரி, முஸ்லிம்

No comments:

Post a Comment