Thursday, June 16, 2011

கண்களை பாதுகாக்க


1. ஒரு நாளுக்கு 7 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். உறங்குதல் காரணமாக கண்கள் புத்துணர்வுடன் செயல்படுகிறது.
2. கண்களை எக்காரணம் கொண்டும் கசக்குதல் கூடாது. இமைகளை மூடித் திறத்தல் கண்களுக்கு நல்ல பயிற்சியாகும்.
3. வெளியில் செல்லும்பொழுது எப்பொழுதும் கண்களுக்குப் பாதுகாப்பாக கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். நேரடியாக சூரியனின் கதிர்களை நாம் நோக்கும் போது கண்கள் பாதிப்படையும்.
4. தண்ணீரில் நீந்தும்பொழுது கண்களுக்கு கண்ணாடி அணிந்து நீந்த வேண்டும். கண்களில் நீர் புகுந்தால் அரிப்பு மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
5. ஒரு நாளுக்கு 8 குவளை நீர் பருக வேண்டும். இப்படி பருகினால் கண்களில் ஏற்படும் வீக்கம் குறைந்துவிடும். உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றவும், நீர் வறட்சியினைத் தடுக்கவும் அதிகம் நீர் பருக வேண்டும்.
6. கண்களின் பாதுகாப்புக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமாகும். சத்தான உணவுகளை உண்பதால் கண்களில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க இயலும். தர்பூசணி, தக்காளி, பப்பாளி, கேரட், கீரைகள் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் கண்களில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க இயலும்.
7. கண்களில் முதலில் ஏற்படும் சிறு எரிச்சல், அரிப்பு, சிவப்பு தன்மை, கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை உதறாமல் முறையாக முதலிலேயே கவனிக்க வேண்டும் அப்படி கண்டு கொள்ளாமல் போனால் கண்களை நாம் இழக்க நேரிடும்.
8. தனக்குத் தானே சுய மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. பழைய பரிந்துரையினை வைத்து மருந்துகள் நாமே வாங்கி உபயோகித்தல் கூடாது.
9. தொடர்ந்து கண்களில் எரிச்சல் இருந்தால் உங்கள் கண் மருத்துவரை அணுக வேண்டும்.

No comments:

Post a Comment