Wednesday, July 20, 2011

காய்கறியின் மருத்துவக் குணங்கள்


நாம் சாதரணமாக சாப்பிடும் அனைத்து உணவிலும் பல வித மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
வெள்ளரிபிஞ்சில் எந்த வித வைட்டமின்களும் இல்லையென்றாலும் நாம் இதை உண்ணும் போது ஒரு வித ரசம் உற்பத்தியாகி நமது ஜீரணத்தை அதிகப்படுத்துகின்றது.

நாம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் ஒரு சிறந்த மருந்தாகும். பச்சை வெங்காயம் இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. குறிப்பாக வெங்காயம் முடக்கு வாத நோய் வராமல் தடுக்கும் ஒரு அறிய மருந்தாகும்.

கருவேப்பிலை பச்சையாக சாப்பிடும்போது நாம் அதிகமான இரும்புச்சத்தை பெறமுடியும். இவை ரத்தத்தை சுத்தமாக்கி வயிற்று எரிச்சலை குறைத்து பசியை அதிகமாக்குகின்றது.

இவையனைத்தும் தற்போது நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்றின் கண்டறியப்பட்ட இயற்க்கை மருத்துவகுணங்கள் ஆகும்.

இளையான்குடி பொற்கிழி கவிஞர் மு. சண்முகம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்


இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.

’வஹியாய் வந்த வசந்தம்’ என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்

தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.

இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிதாயத்துல்லாவும் சலாம் கூறினார்.

அவரது தொடர்பு எண் : 99763 72229

Tuesday, July 19, 2011

புறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்


புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.

ஒருவர் புறம் பேசுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டுமெனில், முதலில் அவர், புறம் பேசுதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை? என்பதை அறிந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் அவர் அந்த தீயசெயலிளிருந்து தவிர்ந்து இருப்பார்.

புறம் பேசுதல் என்றால் என்ன?

புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

புறம்பேசுதல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்:-

அல்லாஹ் கூறுகிறான்:-

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

பிறரைக் கேலி செய்யும் விதத்தில் பேசக் கூடாது: -

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். அல்-குர்ஆன் 49:11)

ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-

“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)

புறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும் தீமைகள்:-

1) புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள்,தகராறுகள் ஏற்படுகிறது.

2) ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அது சமுதாயங்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.

3) சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீண மடைகிறது.

4, முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.

புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும்,மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -

கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: -

‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.

மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: -

1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: -

“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.

2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -

“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)

முஃமினான என தருமை சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களினால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள இந்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும்.

புறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: -

ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:-

39:53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. (அல்-குர்ஆன் 39:53-54)

“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:54)

எனவே சகோதர,சகோதரிகளே நாம் மனந்திருந்தியவர்களாக,இனி எக்காரணத்தை கொண்டும்,யாரைப்பற்றியும், புறம் பேச மாட்டேன்! ஒருவரின் கண்ணியத்தைக் குழைக்கும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன்! என்று உறுதி பூண்டவராக, செயல்பட்டு, அந்த உறுதியில் நிலைத்திருப்பாராயின் அதனால் அளப்பறிய நன்மைகள் அவருக்கு கிட்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -

“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.

“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)

மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)

அல்லாஹ் நம் அனைவரையும் புறம் பேசுதல் என்னும் தீய செயலிலிருந்து காப்பாற்றி அதைத் தடுக்க கூடிய மற்றும் நற்செயல்கள் புரிபவர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும்.

Monday, July 18, 2011

உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்


மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழக்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக்கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த காய்கறியில் வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது.

வாழைப்பழத்தில் உள்ளதைப் போன்ற அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.

1. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்து விடுகிறது. பச்சை உருளைக்கிழங்கு வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.

2. இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும்.

3. இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு இரு தேக்கரண்டி வீதம் உணவு சாப்பிடுவதற்கு முன்பு அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும்.

4. உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க நிவாரணம் கிடைக்கும்.

5. உருளைக்கிழங்கு சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும், வலியும் நீங்கும்.

6. அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து சுத்தம் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும்.

இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும். உருளைக்கிழங்கு வைத்தியம் தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக் கொள்வது தான் உருளைக் கிழங்கு வைத்தியம்.

7. சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக் கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

8. இரவு தூங்கப்போகும் முன்னர் பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும். அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

Sunday, July 17, 2011

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி:ஜெயா

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரம்ஜான் மாதம் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் மொத்த அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு வழங்க அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு ரம்ஜான் மாதம் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு அனுமதி பெற்ற பள்ளிவாசல்களில் கஞ்சி தயாரிப்பதற்கு தேவையான அரிசிக்கு உரிய மொத்த அனுமதியை புதுப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடியாக பள்ளி வாசல்களுக்கு வழங்குவார்கள். ரம்ஜான் மாத நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக 3801 டன்கள் அரிசியை தமிழ் நாட்டிலுள்ள அனைத்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளிலும் 29-7-2011 அன்று தயார் நிலையில் வைத்திருக்கவும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபகழகத்திற்கு முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே தமிழகத்தில் அனுமதி பெற்று ஏற்கனவே இந்த வாய்ப்பினை பயன் படுத்தி வரும் பள்ளி வாசல்கள் மொத்த அனுமதியை புதுப்பித்து, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து அரிசியை பெற்றும் பயன் அடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 9 மாத குழந்தை கடத்தல்

சிசிந்தாதிரிப்பேட்டையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்பது மாத குழந்தை மாயமானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ரஃபி, 28, இறைச்சிக் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாய்ராபானு, 25; சுவீட் கடைகளுக்கு பகோடா தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கு, ஷப்னம் பானு, 2, என்ற பெண்குழந்தையும், ஆரிப் பாட்சா என்ற ஒன்பது மாத குழந்தையும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, முகமது ரஃபி வெளியில் சென்றுவிட, சாய்ரா பானுவும் கடைகளுக்கு பகோடா வினியோகிக்கச் சென்றார்.
இரவு 8 மணிக்கு, ஒன்பது மாத குழந்தையான ஆரிப் தூங்கிக் கொண்டிருந்தான். குழந்தை தூங்கியதால், வீட்டில் இருந்த பாட்டி பானு பீவி, அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றார்.சிறிது நேரம் கழித்து வீட்டில் வந்து பார்க்கும் போது, குழந்தையை காணவில்லை; அருகில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார், முகமது ரபி வீட்டில் பணியாற்றிய மலர் என்ற பெண்ணையும், அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, சென்னையில் கடத்தப்பட்ட தமன்னா, மணிராஜ் ஆகியோர் சில தினங்களில் கிடைத்து விட்டனர்.அவர்களை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களே இந்த குழந்தையையும் கடத்தியிருக்கலாம் என்ற அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போன சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ந்தாதிரிப்பேட்டையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்பது மாத குழந்தை மாயமானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ரஃபி, 28, இறைச்சிக் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாய்ராபானு, 25; சுவீட் கடைகளுக்கு பகோடா தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கு, ஷப்னம் பானு, 2, என்ற பெண்குழந்தையும், ஆரிப் பாட்சா என்ற ஒன்பது மாத குழந்தையும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, முகமது ரஃபி வெளியில் சென்றுவிட, சாய்ரா பானுவும் கடைகளுக்கு பகோடா வினியோகிக்கச் சென்றார்.
இரவு 8 மணிக்கு, ஒன்பது மாத குழந்தையான ஆரிப் தூங்கிக் கொண்டிருந்தான். குழந்தை தூங்கியதால், வீட்டில் இருந்த பாட்டி பானு பீவி, அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றார்.சிறிது நேரம் கழித்து வீட்டில் வந்து பார்க்கும் போது, குழந்தையை காணவில்லை; அருகில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார், முகமது ரபி வீட்டில் பணியாற்றிய மலர் என்ற பெண்ணையும், அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, சென்னையில் கடத்தப்பட்ட தமன்னா, மணிராஜ் ஆகியோர் சில தினங்களில் கிடைத்து விட்டனர்.அவர்களை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களே இந்த குழந்தையையும் கடத்தியிருக்கலாம் என்ற அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போன சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, July 9, 2011

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்


நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.

முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

முள்ளங்கியின் நறுமணம்: முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும். சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால் தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

குழந்தைகளின் ஜலதோஷம் போக்கும்: பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.

சிறுநீர் பிரச்சினை தீரும்: உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே அளவாக சாப்பிடுவது நல்லது.

Friday, July 8, 2011

வலிநிவாரணிகளால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: ஆய்வில் தகவல்


வலிநிவாரணிகள் என்று நாம் பொதுவாக பயன்படுத்தும் மாத்திரைகளால் இருதயத் துடிப்பு சீரற்றதாகி விடுகிறது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில் வந்துள்ள இந்த ஆய்வை டென்மார்க்கைச் சேர்ந்த ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்தியுள்ளனர். முன்னதாக பல ஆய்வுகள் வலிநிவாரணிகளால் மாரடைப்பு மற்றும் வாத நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வலிநிவாரணி மாத்திரைகளான இபுப்ரூபன் மற்றும் ஆஸ்பிரின் வகையறா மாத்திரைகளால் மேற்கூறிய மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் பாதிப்பு நீண்ட நாளைய விளைவாக ஏற்படலாம் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வுக்காக 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளின் நோய்ப் பதிவேட்டை எடுத்துக் கொண்டுள்ளனர். இதில் இந்த வலி நிவாரணிகளால் சீரற்ற இருதய துடிப்பு இடர்பாடு 40% அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் ஈடுபட்டக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஹென்ட்ரிக் டாஃப்ட் சென் தெரிவித்துள்ளார்.

புதிய வலிநிவாரணிகளாகிய காக்ஸ் - 2 இன்ஹிபிட்டர்கள் வகையறாக்களை பயன்படுத்துவதில் இந்த இடர்பாடு 70% ஆக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. காக்ஸ்- 2 இன்ஹிபிடர்கள் என்று அழைக்கப்படும் ஸ்டெராய்ட் கலப்பு இல்லாத அழற்சி தடுப்பு வலிநிவாரணிகள் நேரடியாக காக்ஸ்- 2 என்ற என்சைமில் செயல்படுகிறது.

அதாவது இந்த என்சைம்தான் வலி மற்றும் அழற்சிக்குக் காரணமான என்சைமாகும். ஏற்கனவெ இந்த வகை வலிநாவரணிகளில் ஒன்றான வியாக்ஸ் என்ற ஒன்று 2004ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாம் பொதுவாக எடுத்துக் கொள்ளும் சிறிய அளவிலான வலி நிவாரணிகளினால் முதியோருக்கு இருதயம் தொடர்பான நோய்கள் வாய்ப்பு சற்றே அதிகரித்துள்ளது. குறிப்பாக நீண்ட நாளைய சிறுநீரக நோய் கண்டவர்களுக்கு இந்த வலிநிவாரணிகளால் ஆபத்து ஏற்படும் என்கிறது இந்த ஆய்வு.

ஸ்ட்ராபெரியின் மருத்துவ குணங்கள்


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் ஏற்படாது என கூறுவதுண்டு.
அதாவது ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால் இந்த விடயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம்(சி.எப்.எல்) எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது.

ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது. இதில் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சாப்பிடாத எலிகளைவிட அதிகமாக இருந்தது தெரியவந்தது.

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன.

இதுகுறித்து விஞ்ஞானி பம் மஹர் கூறுகையில்,"இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். தாவரங்களில் இலைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கவும் பிளேவனாய்டு உதவுகிறது" என்றார்.

Sunday, June 19, 2011

கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையைக் கூட்ட

கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையைக் கூட்டுவதற்கான உணவுப் பழக்கம் (குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைப் பிடிக்க வேண்டும்).
* அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* பாஸ்ட் ஃபுட், க்ரீம் வகைகள் கலந்த உணவு மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
* வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட், ஒருவித கொழுப்புச் சத்துள்ள பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான்!
* உலர் பழங்களுடன் ஒரு பெரிய கிண்ணம் நிறைய அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சைப் பழரசம்.
* மூன்று இட்லி, சர்க்கரை கலக்காத வாழைப்பழ மில்க்ஷேக்.
* எண்ணெய் குறைவாக மூன்று தோசை, சர்க்கரை இல்லாத சப்போட்டா மில்க் ஷேக்.
* ரவா அல்லது சேமியா உப்புமா, சர்க்கரை இல்லாத ஃபைன் ஆப்பிள் ஜூஸ்.
* ஒரு கைப்பிடி உலர் பழங்கள் (அ) ஒரு கப் தயிர் (அ) அவித்த சோளம் (அ) கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம்.
* மதிய உணவுக்கு மூன்று கரண்டி சாதம், சாம்பார், தயிர், மிக மிகக் குறைவான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு.
* இனிப்பான பிரெட் (அ) சர்க்கரை இல்லாத மில்க்ஷேக் (அ) பால், முட்டை கலந்த ஃப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சாயங்கால ஸ்நாக்ஸ் ஆக உட்கொள்ளலாம்.
* இரவு உணவுக்கு முன்னர் காய்கறி அல்லது சிக்கன் சூப் குடிக்கலாம். நான்கு சப்பாத்தி, காய்கறி குருமா, தயிர் (அ) குறைவான தேங்காய் இல்லாத குருமாவுடன் நான்கு ஆப்பம்.
அரிசி மற்றும் அசைவ உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது!

Thursday, June 16, 2011

கண்களை பாதுகாக்க


1. ஒரு நாளுக்கு 7 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். உறங்குதல் காரணமாக கண்கள் புத்துணர்வுடன் செயல்படுகிறது.
2. கண்களை எக்காரணம் கொண்டும் கசக்குதல் கூடாது. இமைகளை மூடித் திறத்தல் கண்களுக்கு நல்ல பயிற்சியாகும்.
3. வெளியில் செல்லும்பொழுது எப்பொழுதும் கண்களுக்குப் பாதுகாப்பாக கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். நேரடியாக சூரியனின் கதிர்களை நாம் நோக்கும் போது கண்கள் பாதிப்படையும்.
4. தண்ணீரில் நீந்தும்பொழுது கண்களுக்கு கண்ணாடி அணிந்து நீந்த வேண்டும். கண்களில் நீர் புகுந்தால் அரிப்பு மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
5. ஒரு நாளுக்கு 8 குவளை நீர் பருக வேண்டும். இப்படி பருகினால் கண்களில் ஏற்படும் வீக்கம் குறைந்துவிடும். உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றவும், நீர் வறட்சியினைத் தடுக்கவும் அதிகம் நீர் பருக வேண்டும்.
6. கண்களின் பாதுகாப்புக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமாகும். சத்தான உணவுகளை உண்பதால் கண்களில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க இயலும். தர்பூசணி, தக்காளி, பப்பாளி, கேரட், கீரைகள் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் கண்களில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க இயலும்.
7. கண்களில் முதலில் ஏற்படும் சிறு எரிச்சல், அரிப்பு, சிவப்பு தன்மை, கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை உதறாமல் முறையாக முதலிலேயே கவனிக்க வேண்டும் அப்படி கண்டு கொள்ளாமல் போனால் கண்களை நாம் இழக்க நேரிடும்.
8. தனக்குத் தானே சுய மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. பழைய பரிந்துரையினை வைத்து மருந்துகள் நாமே வாங்கி உபயோகித்தல் கூடாது.
9. தொடர்ந்து கண்களில் எரிச்சல் இருந்தால் உங்கள் கண் மருத்துவரை அணுக வேண்டும்.

Wednesday, June 15, 2011

காலைச் சிற்றுண்டியுடன்


காலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடிப்பதற்கு பதில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மதிய உணவின் போது சாப்பிடும் அளவில் 9 சதவீதம் குறையும் என்கிறது ஆஸ்திரேலிய ஆய்வுத் தகவல். இத்தகைய முறையால் உணவின் அளவு குறைவதுடன் நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவும் குறைவதால் உடலின் எடை குறைய வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.
பழச்சாறு பசியைத் தூண்டும் என்பதால் பசி சீக்கிரம் எடுக்கும் என்பது மட்டும் அல்ல, உணவின் அளவும் அதிகமாகும் இதனால் கலோரிகளின் அளவு அதிகரித்து உடல் எடை குறைய மறுக்கும் என்பதும் விஞ்ஞானிகளின் அறிவுரை.இந்த ஆய்வுக்காக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு அதிக உடல் எடை கொண்ட ஆனால் ஆரோக்கியமான சுமார் 34 ஆண் மற்றும் பெண்களை எடுத்துக் கொண்டது.
இவர்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழுவினருக்கு சிற்றுண்டியின் போது கொழுப்பு நீக்கப்பட்ட பாலும், மற்றொரு பிரிவினருக்கு பழச்சாறும் கொடுத்து 4 மணிநேர இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் குறைந்த அளவே புரதம் மற்றும் லாக்டோஸ் சத்துக்கள் இருப்பதும், அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதும் தடை செய்யப்படுகிறது.
ஆனால் அதன் இதர சத்துக்கள் உடலில் சேர்ந்து மூளைச் செயல்திறனை அதிகரித்து ‘போதும் என்ற மனநிறைவைக் கொடுப்பதால் பசிக்கும் உணர்வு தள்ளிப் போகிறது, குறைவான உணவும் எடுத்துக்கொள்ள ஏதுவாகிறது. அதனால் உடல் எடை எளிதில் குறைய வகை செய்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

Friday, June 10, 2011

S.S.M. குல் முகம்மது நினைவு 10-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்துத்தொடர்போட்டி. துவக்க விழா


அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் 17-ஆம் ஆண்டு நடத்தும்S.S.M. குல் முகம்மது நினைவு 10-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்துத்தொடர்போட்டி.
துவக்க விழா நாள்10-06-2011 வெள்ளி கிழமை இன்று மாலை 5 மணிக்கு
இடம்:கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் (ITI) அருகில்
இன்று துவக்க நாள் ஆட்டமாக விளையாடுகின்ற அணிகள் ஸ்ரீரங்கம் கால்பந்து கழகம் திருச்சி vs டெம்பிள் சிட்டி மதுரை ஆகிய அணிகள் மோதுகின்றன.

சிறப்பு விருந்தினர் மற்றும் ஆட்டத்தை துவக்கி வைப்பவர்
உயர்திரு v.செங்கமலக்கண்ணன் அவர்கள்
காவல் ஆய்வாளர்,
அதிராம்பட்டினம்.

தமிழகத்தின் தலை சிறந்த அணிகள் பங்கு கொள்ளும் இத்தொடர் போட்டியைக்காண வழக்கம் போல் பொதுமக்களும் ,கால்பந்தாட்ட ரசிகப்பெருமக்களும் திரளாக வருகை தந்து போட்டியைக்கண்டு சிறப்பித்துத் தருமாறு அன்புடன் அழைகின்றோம்.

இங்ஙனம்,
அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம்.
அதிராம்பட்டினம்.

Thursday, June 2, 2011

ஜிமெயில் பாஸ்வேர்ட்களை சீன ஹேக்கர்கள் திருடி வருகின்றனர்-கூகுள்


சான்பிரான்ஸிஸ்கோ சீனாவிலிருந்து செயல்படும் ஹேக்கர் கும்பல், ஜிமெயிலைப் பயன்படுத்தி வரும் நூற்றுக்கணக்கானோரின் பாஸ்வேர்ட்களை திருடி விட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.



இதன் மூலம் அந்த ஜிமெயில்களின் பயன்பாடுகளை இந்த ஹேக்கர்கள் கண்காணித்து பல்வேறு குழப்ப வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.



இதுகுறித்து கூகுள் கூறியுள்ளதாவது:



அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் பலர், சீனாவில் ஜனநாயகம் கோரி குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்கள், அமைப்பினர், ஆசிய நாடுகள் பலவற்றின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் பாஸ்வேர்ட்கள் திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம். ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் பலரின் பாஸ்வேர்ட்களும் கூட இதுபோல திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம் என்று அது கூறியுள்ளது.



கூகுளின் இணையதள செயல்பாடுகளில் சீன ஹேக்கர்கள் ஊடுறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஹேக்கர்கள் அட்டகாசத்துடன், சீன அரசின் அடக்குமுறைகளும் அதிகரித்ததால்,சீனாவில் உள்ள தனது அலுவலகத்தை மூடுவதாக அறிவித்தது கூகுள் என்பது நினைவிருக்கலாம்.



அதன் பின்னர் சீனாவில் உள்ள தனது செயல்பாடுகளை ஹாங்காங்குக்கு மாற்றி விட்டது கூகுள்.



இந்த நிலையில், ஜிமெயில் பாஸ்வேர்ட்களை திருடும் கும்பல்களின் அட்டகாசம் சீனாவில் அதிகரித்துள்ளதாக கூகுள் கூறியிருப்பதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.