ஒரு ஊரில் நல்ல கொழுத்த ஆடுகளைக் கொண்ட மந்தை ஒன்று இருந்தது. அம்மந்தைக்குக் காவலாய் ஒரு வேட்டை நாயும் இருந்தது. கொழுத்த ஆடுகளைக் கண்ட ஓநாய் ஒன்றுக்கு வாயில் எச்சில் ஊறியது. ஆடுகளை ஒவ்வொன்றாய்த் தின்ன தந்திரம் ஒன்றைச் செய்தது. அதன்படி, அது ஆட்டைப் போலவே தோற்றமளிக்கும் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு மந்தைக்குள் ஊடுறுவியது. பின் தினமும் ஒரு ஆடாகத் தின்று வந்தது. மந்தையில் ஆடுகள் குறைந்து வருவதைக் கண்ட மேய்ப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நாள், எல்லா ஆடுகளும் போய் கடைசியாக ஆட்டுச் சட்டை போட்ட ஓநாய் மட்டுமே மிஞ்சியது. இதுவாவது மிஞ்சியதே என்று ஆறுதல் பட்டுக் கொண்ட மேய்ப்பன் அதை மட்டுமாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எண்ணி கையில் எடுத்தானாம். அப்போது பார்த்து சட்டை நழுவிக் கீழே விழுந்து உள்ளே பதுங்கியிருந்த ஓநாய் அம்பலப்பட்டதாம்.
மேலே சொன்ன அம்புலிமாமாக் கதையின் வில்லனான ஓநாயின் இருபத்தோராம் நூற்றாண்டுப் பதிப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இதில் ஒரு சிறப்பான விசயமென்னவென்றால், ஆர்.எஸ்.எஸ் ஓநாய் எந்தக் காலத்திலும் மனிதச் சட்டை எதையும் அணிந்து கொள்ளவில்லை. அப்பட்டமாகத் தனது இந்து பாசிச செயல் திட்டத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டே அப்படியொரு சட்டையை அணிந்து கொண்டிருப்பதாக நம்மிடம் சொல்லியது.
நிரபராதி அப்துல் கலீம்
தாம் தேசபக்தர்கள் என்றும் நல்லவர்களென்றும் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டார்கள். அதை மக்கள் நம்பினார்களோ இல்லையோ, இந்த அரசும் ஆளும் வர்க்கமும் மனதார நம்பியதோடு பரப்பவும் செய்தார்கள். கூடவே அது காட்டிய திசையிலெல்லாம் பாய்ந்து ஒநாயின் குற்றங்களுக்காக அப்பாவி ஆடுகளைப் பிடித்து ஓநாய் என்று அறிவித்ததோடு சிறையிலும் அடைத்திருக்கிறார்கள்.
2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகராஷ்ட்டிர மாநிலம் மாலேகான் நகரின் முசுலீம்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன.
இந்திரேஷ் குமார்
2007ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது.
அதேயாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா பாக்கிஸ்தான்இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் இரயிலில் குண்டுகள் வெடித்தன. அதே ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் ஷெரீப் தர்காவிலும் குண்டுகள் வெடித்தன. மேலே குறிப்பிட்ட குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்; நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
யோகி ஆதித்யநாத்
ஒவ்வொரு முறை குண்டுகள் வெடிக்கும் போதும் பார்ப்பன இந்துமதவெறி தலைக்கேறிய முதலாளித்துவ ஊடகங்கள் எந்த யோசனையுமின்றி இசுலாமிய சமூகத்தை நோக்கி விரலை நீட்டின. அரசு தனது குண்டாந்தடிகளான போலீசு இராணுவத்தைக் கொண்டு இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிவளைத்தது. அதிகாரப்பூர்வமான முறையிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் சட்ட ரீதியிலும் சட்டத்திற்கு விரோதமான முறைகளிலும் நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்தரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டன.
2006ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு முதலில் அவசரகதியில் விசாரணை நடத்தி சிமி அமைப்பைச் சேர்ந்த ஒன்பது முசுலீம் இளைஞர்களைக் கைது செய்தது. மூன்று பேர் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தனர். தமது சொந்தங்களைப் பறிகொடுத்ததோடு மட்டுமின்றி பழியையும் சுமக்கும் அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த முசுலீம்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து மகராஷ்டிர அரசு இதன் விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது.
சுனில் ஜோஷி
2007ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டார்கள்; 50 பேர் படுகாயம் அடைந்தார்கள். அது பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கஸூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த நேரமாகும். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்குள் பார்ப்பன-முதலாளித்துவ ஊடகங்கள் விசாரணையை நடத்தி தீர்ப்பையும் எழுதி விட்டன. ஒட்டு மொத்தமாக பத்திரிகைகள் “இது பாகிஸ்தான் சதி” என்று முன்மொழிய, அமெரிக்காவும் ஆமாம் இது ஹூஜி மற்றும் லஸ்கர் இ தொய்பாவின் சதி என்று வழி மொழிந்தது.
தயாநந்த் பாண்டே
சம்ஜவ்தா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அதில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வெடி பொருள், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித் கள்ளத்தனமாக ஜம்முவில் இருந்து வாங்கிக் கொடுத்ததாக இருக்கும் சாத்தியங்களைச் சுட்டி சில துப்புகள் கிடைத்தன. அதே போல் 2008ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டு வெடிப்பில், குண்டுகளை வெடிக்கச் செய்ய உதவிய மோட்டார் சைக்கிள் ஒன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிவாரத்தைச் சேர்ந்த அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பிரக்யா சிங் தாக்கூர் எனும் பெண் சாமியாருக்குச் சொந்தமானது என்கிற துப்பும் கிடைத்தது.
இப்படிக் கிடைத்த ஆதாரங்களைக் கண்டு கொள்ளாமல் தான் போலீசு அவசர கதியில் முசுலீம்கள் மேல் ஆரம்பத்தில் பழியைப் போட்டு பல அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது. இதில் ஒரு படி மேலே போன ஹைதரபாத் போலீசு, அவசர கோலத்தில் தான் கைது செய்த இளைஞர்கள் மேலான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திக் கொள்ள போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அவர்களை வெளியில் விட மனமில்லாமல் வேறு பொய்க் கேசுகளைப் போட்டு உள்ளேயே வைத்துது.
சந்தீர்ப டாங்கே
இந்நிலையில் வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறைக்குச் சென்று இந்த குண்டு வெடிப்புகளில் பார்ப்பன பயங்கரவாதிகளின் தொடர்பு விரிவாக அலசப்படுகிறது. சென்ற வருடம் நவம்பர் 19ஆம் தேதி சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் (பிரச்சாரக்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18ஆம் தேதி தில்லி திஸ் ஹஸாரி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். அந்த வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ் அணிந்திருந்த ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து அம்மணமாய் நிறுத்தியுள்ளது.
அசீமானந்திற்கு இந்த மனமாற்றம் எப்படி நேர்ந்திருக்கும்? சாதாரணமாக ஒரு முழு நேர ஊழியரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குவதற்கு, அல் காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் மனித வெடிகுண்டுகளைத் தயார் செய்யும் வழிமுறைகளைக் காட்டிலும் கச்சிதமான – கறாரான – உத்திரவாதமான வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர். கழுத்தை அறுத்தாலும் உண்மை வெளியாகிவிடாது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே இது போன்ற நாசவேலைகளுக்கு ப்ரச்சாரக்குகளைப் பயன்படுத்துவர்.
அசீமானந்தின் இந்த மனமாற்றம் அத்தனை லேசில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
நீதிமன்றக்காவலின் இடையில் சில நாட்கள் ஹைதரபாத் சன்ச்சல்குடா சிறையில் அசீமானந் அடைக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்ததும் ஆறுதலாய் இருந்ததும் கலீம் எனும் முசுலீம் இளைஞன். தனது கூட்டாளிகள் இல்லாமல் தனித்து விடப்பட்ட 59 வயதான அசீமனந்தாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, நாளிதழ்கள் கொண்டு வந்து கொடுப்பது போன்ற பல்வேறு சேவைகளை அந்த இளைஞன் தான் செய்துள்ளான். ஒரு சந்தர்பத்தில், தானும் தனது கூட்டாளிகளும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றிய ஹைதரபாத் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம் இளைஞர்களில் இந்த இளைஞனும் ஒருவன் எனும் உண்மை அசீமானந்திற்குத் தெரியவருகிறது.
ராம்ஜி
இது அவருக்குள் கடுமையான மனவுளைச்சலையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப் பிராயச்சித்தம் செய்யும் விதமாகவே உண்மைகளை பகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக மாஜிஸ்டிரேட் முன்பாக அசீமானந் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஒரு காரணமாக இருக்கலாம் – ஆனால், இதுமட்டுமே முழுமையான காரணமாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு.
ஏனெனில், ஆர். எஸ். எஸ் ஒருவனுக்கு அளிக்கும் ஆரம்ப கட்டப் பயிற்சியே அவனது மனசாட்சியைக் கொன்று விட்டு மாஃபியா கும்பலின் பாணியில் உத்தரவுக்குக் கீழ்படியும் குணத்தை ஏற்படுத்தும் விதமாகத் தான் திட்டமிடப்பட்டுகிறது. ஆர்.எஸ்.எஸில் புதிதாக சேரும் எவரும் ஷாகா எனப்படும் அவர்களது தினசரி ஒருமணி நேர பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகும். எங்காவது இரகசிய மைதானங்களிலோ அல்லது ஆள் நடமாட்டம் குறைவான கோயில்களிலோ கூடும் அவர்கள், முதலில் உடற்பயிற்சி செய்வார்கள். பின்னர் இந்துத்வ பாசிசக்கதைகளை பேசி பயிற்சி கொடுப்பார்கள்.
ஆர்.எஸ்.எஸ்இன் இந்த ஷாகா பயிற்சியானது பொதுவில் கேள்விக்கிடமற்ற கட்டுபாட்டையும், அடிமைத்தன சிந்தனையையும் உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகிறது. மேலும் ஜனநாயகத்தின் வாசம் கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்க நடைமுறைகள் இந்த அடிமைத்தன உளவியலை மேலும் வலுவாக்குகிறது.
புரோஹித்
ஆர். எஸ்.எஸ்ஸின் பயிற்சி முறைகள் நேரடியாக இத்தாலி பாசிஸ்ட் கட்சியிலிருந்து பெறப்பட்டது. இதற்காகவே பி.எஸ். மூஞ்சே எனும் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் 1930களில் இத்தாலிக்குப் பயணித்து முசோலினியைச் சந்தித்துள்ளார். அங்கு இருந்த பாசிஸ்டு பயிற்சி முகாம்களை நேரடியாக கவனித்து அதன் அடிப்படையிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா வகுப்புகள் வடிவமைக்கப்பட்டது. இந்துத்துவ இயக்கங்களுக்கு பெனிட்டோ முசோலினியின் பாசிஸ்ட் கட்சியோடிருந்த தொடர்புகள் பற்றிய மார்ஸியா கஸோலரி என்பரின் விரிவான ஆய்வுகளும் வேறு பல ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரான கோல்வல்கர் ஹிட்லரை ஆதர்ச நாயகனாகவே வழிபட்டுள்ளார். இது குறித்த அவரது புத்தகம் இன்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் விற்பனை செய்யப்படுகிறது.
புதிதாக சேரும் சாதாரண உறுப்பினர்களையே இந்தளவுக்குத் தயாரிக்கிறார்கள் எனில் முழு நேர ஊழியர்களான ப்ரச்சாரக்குகளை எந்தளவுக்குத் தீவிரமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருப்பார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். தானும் தனது கூட்டாளிகளும் வைத்த குண்டுகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரற்ற உடல்கள் ஏற்படுத்தாத குற்ற உணர்ச்சியை, அதனால் நாடெங்கும் கோடிக்கணக்கான அப்பாவி முசுலீம்கள் சுற்றிவளைக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட போது ஏற்படாத குற்ற உணர்ச்சியை, பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் இளைஞனின் நற்செயல்கள் ஏற்படுத்தியதென்று அசீமானந்த் குறிப்பிடுகிறார்.
இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அந்த உண்மையை முழுமையாக்கும் முக்கியமான விஷயங்கள் சன்ச்சல்குடா சிறைச்சாலைக்கு வெளியேயும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. தற்போது தன்னோடு சதியில் ஈடுபட்டவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்திய பிரதேச மாநில பிரச்சாரக்கான சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர பிரச்சாரக்கான சந்தீப் டாங்கே, மூத்த ப்ரச்சாரக் ராம்ஜி, மேல் மட்ட உறுப்பினர் சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித், பிரச்சாரக் தேவேந்திர குப்தா, பிஜேபி எம்.பி யோகி ஆதித்யானந், குஜராத் விவேகானந்த சேவா கேந்திரத்தின் பாரத்பாய், மாநில அமைப்பாளர் டாக்டர் அசோக், இன்னொரு முக்கிய பிரமுகர் லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, சாமியார் தயானந் பாண்டே ஆகிய பெயர்களை உதிர்த்திருக்கிறார்.
தேவேந்திர குப்தா
இதில் ஆர்.எஸ்.எஸ் மத்திய கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமார் தான் குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்ட சதிக்குழுவுக்கு வழிகாட்டும் தலைவராக செயல்பட்டுள்ளார். திட்டங்களை நிறைவேற்றிய கீழ் மட்ட பயங்கரவாத அலகுகளுக்குத் தொடர்பாளராக சுனில் ஜோஷி இருந்துள்ளார். குறிப்பாக குஜராத் - பரோடா – பெஸ்ட் பேக்கரி வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை சுனில் ஜோஷி தனது பொறுப்பில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர்கள் மாட்டிக் கொண்டால் இந்திரேஷ் குமாரும் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் அவர்களைக் கொன்று போடும் படி அசீமானந்த் ஜோஷியிடம் சொல்லியிருக்கிறார்.
அதற்கு சில தினங்களுக்குள் டிசம்பர் 2007ஆம் ஆண்டு ஜோஷி தனது சக ஆர்.எஸ்.எஸ் குண்டர்களாலேயே கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இது வரை ஆறு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் பெரியளவில் வெடித்து வருவதும், புலனாய்வுத் துறையினரின் விசாரணை ஒரு சங்கிலி போல் கீழ்மட்டத்தில் தொடங்கி மேல் மட்டம் வரை நீண்டு வருவதையும் யூகித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமை தனது சொந்த உறுப்பினர்களையே கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கக் கூடும்.
அசீமானந்தின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அப்பாவி கலீமின் நன்னடத்தை ஏற்படுத்திய குற்ற உணர்ச்சி ஒரு காரணமென்றால், ஜோஷியின் படுகொலை ஏற்படுத்தியிருக்கக் கூடிய மனக்கிலேசமும் முக்கியமான பங்காற்றியிருக்க வேண்டும். அசீமானந்தின் ஷாப்ரிதம் ஆஷ்ரமிற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் தொடங்கி இன்னாள் தலைவர் மோகன் பாகவத் வரை பல்வேறு உயர் மட்டத் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.
தெட்டத் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் இப்போது கிடைத்துள்ள நிலையிலும் இது வரை இந்த அரசு அதன் மேல் ஒரு சின்னத் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஒருவேளை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமானால், அது பாரதிய ஜனதா ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமென்வெல்த் உள்ளிட்ட ஊழல்களைக் குறித்து எழுப்பும் கூச்சலின் அளவைப் பொருத்து வாயை அடைப்பதற்கு மட்டும் பயன்படும்.
லோகேஷ் சர்மா
ஆனால், இந்த பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகளை காங்கிரசின் கைகளில் கொடுத்து விட்டு மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இக்கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் அப்பாவி ஆடுகளின் வெகுளித்தனத்திற்கு ஒப்பானதாயிருக்கும். அந்த மந்தையின் மேப்பன் வேண்டுமானால் ஓநாய் புகுந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூடனாயிருக்கலாம் – ஆனால், காங்கிரசு அப்பாவியும் அல்ல மூடனும் அல்ல. தேசத்தை ஏகாதிபத்தியங்களுக்குக் காட்டிக் கொடுக்கும் தனது லட்சியத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதன் வளங்களைத் திறந்து விடும் நடைமுறைக்கும் பாரதிய ஜனதாவாவும் வெகுவாக உதவுகிறதுஎன்பதால் பார்ப்பன பயங்கரவாதிகளின் எந்தச் செயலும் மன்னிக்கப்பட்டு விடும்.
இத்தனை நாட்களாக தேசத்தில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை ஒட்டி பஜ்ரங் தள், ஏ.பி.வி.பி, சனாதன் சன்ஸ்தான், அபினவ் பாரத், வனவாசி கல்யாண் ஆஷ்ரம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற பரிவார அமைப்புகளின் பெயர்கள் அம்பலப்பட்ட போதும், குருடர்கள் சேர்ந்து யானையைத் தடவிப் பார்த்து புரிந்து கொண்டதைப் போல இந்த பெயர்களைத் தனித் தனியே உச்சரித்து வந்தன முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால், ஆக்டோபஸின் கரங்கள் தனித்தனியே இயங்கினாலும் அதன் மூளை ஒன்றாக இருப்பதை போல, இந்த அமைப்புகளின் மூளையாகவும், மைய்யமாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.
சாதாரணமாக குண்டுவெடிப்புகள் என்றால் உடனே அப்பாவி இசுலாமிய மக்கள் கைது செய்யப்படுவதும், பாக் சதி என்று ஊடகங்கள் கதை பின்னுவதுமான நாட்டில் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகள் இத்தனை ஆதரங்களோடு வெளிப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை தடை செய்ய வேண்டுமென்றோ, அவர்களது செயல்பாடுகள் முடக்கப்படவேண்டுமென்றோ யாரும் பேசுவதைக்கூட நாம் கேட்க முடிவதில்லை. காரணம் இந்து மதவெறி பயங்கரவாதம் என்பது இந்த நாட்டின் அமைப்பு முறையின் ஆசிர்வாதத்தோடு செயல்படுகிறது என்பதால் அதை எவரும் கண்டு கொள்வதில்லை.
ஆர்.எஸ்.எஸ் இந்த தேசத்து மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாதத்தை வெறும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே எதிர் கொண்டு வெல்ல முடியாது. ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களின் கணக்குகள் தெருவில் வைத்துத் தீர்க்கப்பட வேண்டும். இடையில் காக்கி டவுசரோடும் கையில் குண்டாந் தடியோடும் தெருவில் நடமாடும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மக்கள் தெருவிலேயே பாடம் புகட்டும் நாளில் தான் இந்த நச்சுப் பாம்புகளின் கொட்டம் அடங்கும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
Monday, October 3, 2011
Sunday, September 18, 2011
2002 கலவரத்தின் வலியை நான் உணர்ந்துள்ளேன்: மோடி
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் வலியை தாம் உணர்ந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ந்ரேந்திர மோடி கூறியுள்ளார்.
அமைதி, சமூக நல்லிணக்கம் கோரி 3 நாட்களுக்கு உண்ணாவிரம் இருக்கப்போவதாக அறிவித்திருந்த மோடி, குஜராத் பல்கலை வளாகத்தில் இன்று காலை தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
உண்ணாவிரத மேடை முன் அமர்ந்து இருந்த தமது ஆதரவாளர்களிடையே பேசிய மோடி கூறியதாவது:
உலகம் இன்று குஜராத்தின் வளர்ச்சியை பற்றி பேசுகிறது.அது தொழில் துறையாகட்டும், வேளாண்மை ஆகட்டும், கிராமப்புற, கல்வி அல்லது சுகாதாரத்துறை எதுவானாலும் குஜாரத்தை பற்றிதான் பேச்சு.
மேலும் குஜராத் மாநிலத்தின் நிர்வாக திறமை குறித்தும் உலகம் பேசுகிறது.குஜராத் மாதிரியான வளர்ச்சியைப் போன்றே அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் போன்றவற்றை பேணுவதிலும் குஜராத்தை சுட்டிக்காட்டி பேசப்போகும் நாளும் ஒரு நாள் வரத்தான் போகிறது என்று கூறினார் மோடி.
அதே சமயம் தமக்கு களங்கமாக இருக்கும் 2002 ஆம் ஆண்டு மதக்கலவரத்திற்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்காத மோடி, மனிதாபிமான அளவுகோலிலிருந்து குஜராத் ஒருபோதும் சறுக்கியதில்லை என்றார்.
"அந்த நேரத்தில் (2002) இந்த கலவரங்கள் ஒரு நாகரீகமடைந்த சமூகத்தில் நடக்கக்கூடாதவை என்று கூறியிருந்தேன்.அந்த நேரத்தில் கலவரத்தின் வலியையும், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் நான் உணர்ந்திருந்தேன். இப்போதும் கூட அந்த வலியை நான் உணர்கிறேன்.
1980 களிலிருந்து 90 ஆம் ஆண்டு வரை ஊரடங்கு, மதக் கலவரம் என தினசரி நிகழும் ஒரு நீண்ட பாதையை குஜராத் மாநிலம் கடந்துவந்தது.தற்போது அமைதியின் மதிப்பை குஜராத் மாநிலம் உணர்ந்துள்ளது" என்று மோடி மேலும் பேசினார்.
Thursday, September 15, 2011
மாணவர்களுக்கான தேசிய அமைப்பு
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (மாணவர்களுக்கான தேசிய அமைப்பு) சார்பாக மக்கள் உரிமைகளுக்காக போராடுவோம் எனும் பெயரில் தேசிய அளவிலான விழுப்புணர்வு பிரச்சாரம் 2011 செப் 12 முதல் 19 வரை நடத்த தேசிய குழு தீர்மானித்தது. இதனடிப்படையில் தமிழகத்திலும் கருத்தரங்கள், பேரணிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாயில்முனைக் கூட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.
தமிழகத்தில் பிரச்சாரத்தின் துவக்கமாக 12\09\2011 மாலை 7 மணியளவில் கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள திவ்யோதயா ஹாலில் மக்கள் உரிமைகளுக்காக போரடுவோம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதற்கு மாநில தலைவர் எஸ். முஹம்மது ஷாஃபி, தலைமை ஏற்று, போலி என்கவுன்டர்கள், அஸ்ஸாம், மனிப்பூர் மற்றும் கஷ்மீரில் ராணுவத்தின் அத்துமீறல்கள், கருப்புச் சட்டங்களின் மூலம் நடைப்பெறும் அரச பயங்கரவாதம் ஆகியவற்றால் சிறுபான்மை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் இவற்றிற்கு எதிராக நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் மாணவ சமூகம் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
NCHRO வின் மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா.மோகன், மாணவர்களின் சக்தி குறித்தும் உலகில் நடந்த அநீதி அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் ஏற்படுத்திய புரட்சி குறித்தும் பேசினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் மு. முஹம்மது இஸ்மாயில் பத்திரிக்கைத்துறை ஆதிக்கசக்திகளின் கைகளில் சிக்கியிருப்பதையும், மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில் கார்ப்பரேட் மீடியாக்களின் பங்கு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்.
கேம்பஸ் ஃப்ரண்டின் மாநிலப் பொதுச் செயலாளர் அதிரை Z. முஹம்மது தம்பி தனது முடிவுரையில் நாளைய இந்தியாவை வழிநடத்த போகும் தலைவர்களான மாணவ சமூகம் மக்களின் உரிமைகளை அறிந்து கொள்ளவில்லையெனில் நம் தேசம் அடிமைகளின் தேசமாக மாறிவிடும். எனவே நம் உரிமைகளை அறிந்து அவற்றை மீட்கவும் பாதுகாக்கவும் சபதமேற்று போராட வேண்டும் என கேட்டுகொண்டார். மாநில குழு உறுப்பினர் S. ஜமீஷா தீர்மனங்களை வாசித்தார்.முன்னதாக கேம்பஸ் ஃப்ரண்டின் கோவை மாவட்ட தலைவர் எஸ். ஹனீஃப் கான் வரவேற்புரையாற்றினார், நிறைவாக கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்டச் செயலாளர் M. முஹம்மது நிசாருதீன் கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சி கேம்பஸ் ஃப்ரண்டின் கோவை சட்டக் கல்லூரி யூனிட் செயலாளர் சுலைஹா பர்வீன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-தம்பி
Friday, July 29, 2011
ஒரே நேரத்தில் மூன்று உலவிகளை பயன்படுத்துவதற்கு
இணையதளங்களை வலம் வருவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படுவது உலவிகள் மட்டுமே ஆகும். இதற்கு மாற்றாக எதுவும் இல்லை.
எனினும் இணைய பயன்பாட்டு அப்ளிகேஷன்கள் ஒரு சில உண்டு. இவையும் உலவிகளில் வடிவிலேயே தான் இருக்கும்.
இவை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இல்லாவிட்டாலும் ஒருசில வசதிகள் இதுபோன்ற அப்ளிகேஷன்களில் உண்டு.
அந்த வகையில் Multibrowser என்னும் மென்பொருள் வாயிலாக ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் பணியாற்ற முடியும். அவை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0, 8.0, 9.0, நெருப்புநரி உலவி மற்றும் கூகுள் குரோம் உலவி போன்றவை ஆகும்.
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
இதில் இருக்கும் அட்ரஸ்பாரில் இணையதள முகவரியினை உள்ளிடவும். பின் என்டர் கீயினை அழுத்தவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தினை காணமுடியும்.
பின் நீங்கள் உலவிகளை தேர்வு செய்து அதற்கிடையேயுள்ள மாற்றத்தினை காண முடியும். மேலும் மூன்று உலவிகளிலும் நீங்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்தினை ஒரே இடத்தில் காண முடியும்.
Wednesday, July 27, 2011
அதிரையில் கூரை வீட்டில் தீ கி 5 லட்சம் சேதம்
அதிராம்பட்டினம்,: அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்தவர் காதர் முகைதீன் (42). சென்னையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவுஜியா, அதே தெருவில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு நேற்று சென்றார். இந்நிலையில் நேற்று மதியம் இவர்களது வீடு தீடிரென வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் 15 பவுன் நகைகள், ரூ. 55 ஆயிரம் பணம், வாசிங் மிஷின், கிரைண்டர், இரண்டு கம்ப்யூட்டர்கள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தீ யணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
source : http://dinakaran.com/District_detail_2011.asp?Nid=1255
source : http://dinakaran.com/District_detail_2011.asp?Nid=1255
காரைக்கால் மாவட்டம் சார்பாக ஜகாத் கொடுக்க வலியுறுத்தி வெளியிடப்பட்ட நோட்டீஸ்
கடமையைச் செய்வோம்
இஸ்லாத்தின் அடிப்படை ஐந்து கடமைகளில் ஜகாத்தும் ஒன்று, அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் சுமார் 32 இடங்களில் இதனை வலியுறுத்துகின்றான்.
அவற்றில் ஒரு சில வசனங்கள்
இன்னும் தொழுகையை முழுமையாக கடைபிடித்தும், ஜகாத்தை கொடுத்தும் வாருங்கள் (அல் குர்ஆன் 2:110)
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்). அவ்வாறு கொடுப்பவர்தான் (தன் நற்கூலியை) இரட்டிப்பாக்கி கொள்கிறார்கள். (அல் குர் ஆன் 30:39)
ஜகாத்தை கொடுத்துவருபவர்கள் வெற்றி அடைந்துவிட்டார்கள் (அல் குர் ஆன் 23:4)
ஜகாத் கடமையாவதற்கான நிபந்தனைகள்:
1. ஜகாத் கொடுக்கும் பொருளில் முழு சொத்துரிமை இருக்க வேண்டும்.
2. அத்தியாவசிய அனைத்து செலவீனங்கள் போக மேல் மிச்சமாக இருக்க வேண்டும்.
3. மேல் மிச்சமாக இருப்பது ஷரீஅத் விதித்துள்ள குறிப்பிட்ட அளவை அடைந்திருக்க வேண்டும்.
4. அது ஒரு வருடம் நம்மிடம் இருந்திருக்க வேண்டும்.
5. கடன் இருக்கக்கூடாது.
6. ஜகாத் கொடுக்கும் பொருள் விருத்தி அடையும் பொருளாக இருக்க வேண்டும்.
ஷரீஅத் விதிக்கும் ( நிஸாப்) குறிப்பிட்ட அளவு:
1. தங்கம் - 85 கிராம் இருந்தால் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.
2. வெள்ளி - 595 கிராம் இருந்தால் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.
3. பணம் - தங்கம் அல்லது வெள்ளியின் அளவை அடைந்தால் 2.5% ஜகாத் தரவேண்டும்.
விவசாய பொருட்கள். மீன்கள் 653 கிலோ இருந்தால் (தானாக உற்பத்தியானால் 10 சதவிகிதமும், நாம் உற்பத்தி செய்தால் 5 சதவிகிதமும்) ஜகாத் கடமையாகும். வாடகை கட்டிடங்கள், வாகனங்கல், தொழிற்சாலைகள் பணத்தின் அளவை அடைந்தால் (செலவினம் போக) 2.5% ஜகாத் கடமையாகும்.
ஜகாத் மேலே குறிப்பிட்டுள்ளபடி இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் அது இன்னும் முறையாக மற்றும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏழைகளில் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்நிலையை மாற்றி சமூகத்தை வலிமையடையச் செய்ய முறையான வழிகளில் தெளிவான திட்டமிடுதலுடன் பல்வேறு கஷ்டங்களுக்கிடையில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகளும் பொருளாதார பற்றாக்குறையினால் திணறிக்கொண்டிருக்கின்ற நிலை தொடர்கிறது.
இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் முஸ்லிம்கள் 31 சதவீதமாகவும், நகர்புறங்களிலும் 38.4 சதவீதமாகவும் உள்ளனர் என்ற கசப்பான உண்மை தான் நம் சமூகத்தின் இன்றைய நிலை, எனவே இறைவனுடைய கட்டளைகளை ஏற்று ஜகாத்தை கணக்கிட்டு வழங்குவதன் மூலம் முஸ்லிம் சமூகம் வலிமை பெறும்.
உலக அளவில் தங்கத்தை கொண்டே பொருளாதார நிலை கணக்கிடப்படுகிறது. எனினும் வெள்ளி கணக்கிட்டால் பெரும்பாலானோர் ஜகாத் தரும் நிலை உருவாகும். இதன் மூலம் சமூக அளவில் பெரிய மாற்றம் ஏற்படும்.
ஜகாத் வாங்குவதற்கு தகுதியானவர்கள்:
ஜகாத் என்னும் தருமங்களெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும் அவற்றிற்காக (வசூல் செய்வது, கணக்கிடுவது, போன்ற துறைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்கள் உடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவே, அவர்களுக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனாளிகளுக்கும் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்) வழிப்போக்கர்களுக்கும் உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவும்) அறிபவன் மிக்க ஞானமுடையவன். (அல்குர் ஆன் 9:60)
ஜகாத் கொடுக்காதவர்களின் நிலை:
இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும், தங்கத்தையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களோ (நபியே) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக ( நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி அதை கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இன்னும் இது தான் நீங்கள் உங்களுக்காக சேமித்து வைத்தது. ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததை சுவைத்து பாருங்கள்.(என்று கூறப்படும்) (அல்குர் ஆன் 9:34-35)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தை அளித்து அதற்கான ஜகாத்தை அவர் செலுத்தவில்லையானால், அவரது செல்வம் கொடிய நஞ்சுடைய பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கறுப்பு புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது அவரை (கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும், பிறகு அந்த பாம்பு அவரது தாடையை பிடித்துக்கொண்டு நான் தான் உனது செல்வம். எனது கருவூலம் என்று சொல்லும் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (3:180) இறைவசனத்தை ஓதினார்கள். ( நூல் புகாரி: 1430)
இஸ்லாத்தின் கடமையான ஜகாத்தை நிறைவேற்றி
இரட்டிப்பு கூலையையும் இறையன்பையும் பெறுவோம்

Thursday, July 21, 2011
சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளின் காது செவிடாகும்: ஆய்வில் தகவல்
மற்றவர்கள் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு காது செவிடாகும் ஆபத்து உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
புகைப்பிடிப்பதால் புற்று நோய், ரத்தம் சம்பந்தமான நோய், இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர்.
ஆனால் பிறர் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு காது செவிடாகும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகம் அறிவியல் துறை மாணவர்களின் உதவியுடன் சிகரெட் புகையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த புதிய ஆய்வை மேற்கொண்டது.
12 முதல் 19 வயது வரையிலானவர்கள் ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அதிர்ச்சியான விடயங்கள் தெரிய வந்தன.
ஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு: சிகரெட் பிடிப்பவர்களை விட அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்தது.
குறிப்பாக காது செவிடாகும் நிலை ஏற்படுகின்றன. சுவாசிக்கப்படும் சிகரெட் புகை, மூக்கு மற்றும் வாய் வழியாக சென்று காதின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒலியை கிரகிக்கும் மெல்லிய உறுப்பை சேதப்படுத்துகிறது.
இதனால் ஒலியை வாங்கும் திறன் அந்த உறுப்பு இழப்பதால் செவிட்டு தன்மை உண்டாகிறது. மேலும் அடுத்தவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் சக்தி குறைவதுடன் படிப்பில் நாட்டம் இல்லாமை, அடங்காத்தன்மை போன்ற குறைபாடுகள் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.
புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெரியவர்கள் மற்றும் பெற்றோர், குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Wednesday, July 20, 2011
காய்கறியின் மருத்துவக் குணங்கள்
நாம் சாதரணமாக சாப்பிடும் அனைத்து உணவிலும் பல வித மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
வெள்ளரிபிஞ்சில் எந்த வித வைட்டமின்களும் இல்லையென்றாலும் நாம் இதை உண்ணும் போது ஒரு வித ரசம் உற்பத்தியாகி நமது ஜீரணத்தை அதிகப்படுத்துகின்றது.
நாம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் ஒரு சிறந்த மருந்தாகும். பச்சை வெங்காயம் இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. குறிப்பாக வெங்காயம் முடக்கு வாத நோய் வராமல் தடுக்கும் ஒரு அறிய மருந்தாகும்.
கருவேப்பிலை பச்சையாக சாப்பிடும்போது நாம் அதிகமான இரும்புச்சத்தை பெறமுடியும். இவை ரத்தத்தை சுத்தமாக்கி வயிற்று எரிச்சலை குறைத்து பசியை அதிகமாக்குகின்றது.
இவையனைத்தும் தற்போது நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்றின் கண்டறியப்பட்ட இயற்க்கை மருத்துவகுணங்கள் ஆகும்.
இளையான்குடி பொற்கிழி கவிஞர் மு. சண்முகம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்
இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.
’வஹியாய் வந்த வசந்தம்’ என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்
தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.
இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிதாயத்துல்லாவும் சலாம் கூறினார்.
அவரது தொடர்பு எண் : 99763 72229
Tuesday, July 19, 2011
புறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்
புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.
ஒருவர் புறம் பேசுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டுமெனில், முதலில் அவர், புறம் பேசுதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை? என்பதை அறிந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் அவர் அந்த தீயசெயலிளிருந்து தவிர்ந்து இருப்பார்.
புறம் பேசுதல் என்றால் என்ன?
புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம்பேசுதல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்:-
அல்லாஹ் கூறுகிறான்:-
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
பிறரைக் கேலி செய்யும் விதத்தில் பேசக் கூடாது: -
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். அல்-குர்ஆன் 49:11)
ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-
“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)
புறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும் தீமைகள்:-
1) புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள்,தகராறுகள் ஏற்படுகிறது.
2) ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அது சமுதாயங்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.
3) சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீண மடைகிறது.
4, முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.
புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும்,மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -
கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: -
‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.
மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: -
1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: -
“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.
2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -
“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)
முஃமினான என தருமை சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களினால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள இந்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும்.
புறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: -
ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:-
39:53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. (அல்-குர்ஆன் 39:53-54)
“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:54)
எனவே சகோதர,சகோதரிகளே நாம் மனந்திருந்தியவர்களாக,இனி எக்காரணத்தை கொண்டும்,யாரைப்பற்றியும், புறம் பேச மாட்டேன்! ஒருவரின் கண்ணியத்தைக் குழைக்கும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன்! என்று உறுதி பூண்டவராக, செயல்பட்டு, அந்த உறுதியில் நிலைத்திருப்பாராயின் அதனால் அளப்பறிய நன்மைகள் அவருக்கு கிட்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -
“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.
“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)
அல்லாஹ் நம் அனைவரையும் புறம் பேசுதல் என்னும் தீய செயலிலிருந்து காப்பாற்றி அதைத் தடுக்க கூடிய மற்றும் நற்செயல்கள் புரிபவர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும்.
Monday, July 18, 2011
உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்
மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழக்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக்கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த காய்கறியில் வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது.
வாழைப்பழத்தில் உள்ளதைப் போன்ற அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.
1. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்து விடுகிறது. பச்சை உருளைக்கிழங்கு வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.
2. இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும்.
3. இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு இரு தேக்கரண்டி வீதம் உணவு சாப்பிடுவதற்கு முன்பு அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும்.
4. உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க நிவாரணம் கிடைக்கும்.
5. உருளைக்கிழங்கு சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும், வலியும் நீங்கும்.
6. அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து சுத்தம் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும்.
இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும். உருளைக்கிழங்கு வைத்தியம் தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக் கொள்வது தான் உருளைக் கிழங்கு வைத்தியம்.
7. சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக் கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.
கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.
8. இரவு தூங்கப்போகும் முன்னர் பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும். அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.
Sunday, July 17, 2011
ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி:ஜெயா
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரம்ஜான் மாதம் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் மொத்த அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு வழங்க அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு ரம்ஜான் மாதம் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு அனுமதி பெற்ற பள்ளிவாசல்களில் கஞ்சி தயாரிப்பதற்கு தேவையான அரிசிக்கு உரிய மொத்த அனுமதியை புதுப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடியாக பள்ளி வாசல்களுக்கு வழங்குவார்கள். ரம்ஜான் மாத நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக 3801 டன்கள் அரிசியை தமிழ் நாட்டிலுள்ள அனைத்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளிலும் 29-7-2011 அன்று தயார் நிலையில் வைத்திருக்கவும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபகழகத்திற்கு முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தமிழகத்தில் அனுமதி பெற்று ஏற்கனவே இந்த வாய்ப்பினை பயன் படுத்தி வரும் பள்ளி வாசல்கள் மொத்த அனுமதியை புதுப்பித்து, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து அரிசியை பெற்றும் பயன் அடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 9 மாத குழந்தை கடத்தல்
சிசிந்தாதிரிப்பேட்டையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்பது மாத குழந்தை மாயமானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ரஃபி, 28, இறைச்சிக் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாய்ராபானு, 25; சுவீட் கடைகளுக்கு பகோடா தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கு, ஷப்னம் பானு, 2, என்ற பெண்குழந்தையும், ஆரிப் பாட்சா என்ற ஒன்பது மாத குழந்தையும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, முகமது ரஃபி வெளியில் சென்றுவிட, சாய்ரா பானுவும் கடைகளுக்கு பகோடா வினியோகிக்கச் சென்றார்.
இரவு 8 மணிக்கு, ஒன்பது மாத குழந்தையான ஆரிப் தூங்கிக் கொண்டிருந்தான். குழந்தை தூங்கியதால், வீட்டில் இருந்த பாட்டி பானு பீவி, அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றார்.சிறிது நேரம் கழித்து வீட்டில் வந்து பார்க்கும் போது, குழந்தையை காணவில்லை; அருகில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார், முகமது ரபி வீட்டில் பணியாற்றிய மலர் என்ற பெண்ணையும், அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, சென்னையில் கடத்தப்பட்ட தமன்னா, மணிராஜ் ஆகியோர் சில தினங்களில் கிடைத்து விட்டனர்.அவர்களை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களே இந்த குழந்தையையும் கடத்தியிருக்கலாம் என்ற அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போன சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ந்தாதிரிப்பேட்டையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்பது மாத குழந்தை மாயமானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, சென்னையில் கடத்தப்பட்ட தமன்னா, மணிராஜ் ஆகியோர் சில தினங்களில் கிடைத்து விட்டனர்.அவர்களை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களே இந்த குழந்தையையும் கடத்தியிருக்கலாம் என்ற அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போன சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, July 9, 2011
முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்
நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.
முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.
முள்ளங்கியின் நறுமணம்: முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும். சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால் தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.
குழந்தைகளின் ஜலதோஷம் போக்கும்: பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.
சிறுநீர் பிரச்சினை தீரும்: உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.
முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே அளவாக சாப்பிடுவது நல்லது.
Friday, July 8, 2011
வலிநிவாரணிகளால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: ஆய்வில் தகவல்
வலிநிவாரணிகள் என்று நாம் பொதுவாக பயன்படுத்தும் மாத்திரைகளால் இருதயத் துடிப்பு சீரற்றதாகி விடுகிறது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில் வந்துள்ள இந்த ஆய்வை டென்மார்க்கைச் சேர்ந்த ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்தியுள்ளனர். முன்னதாக பல ஆய்வுகள் வலிநிவாரணிகளால் மாரடைப்பு மற்றும் வாத நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வலிநிவாரணி மாத்திரைகளான இபுப்ரூபன் மற்றும் ஆஸ்பிரின் வகையறா மாத்திரைகளால் மேற்கூறிய மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் பாதிப்பு நீண்ட நாளைய விளைவாக ஏற்படலாம் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுக்காக 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளின் நோய்ப் பதிவேட்டை எடுத்துக் கொண்டுள்ளனர். இதில் இந்த வலி நிவாரணிகளால் சீரற்ற இருதய துடிப்பு இடர்பாடு 40% அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் ஈடுபட்டக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஹென்ட்ரிக் டாஃப்ட் சென் தெரிவித்துள்ளார்.
புதிய வலிநிவாரணிகளாகிய காக்ஸ் - 2 இன்ஹிபிட்டர்கள் வகையறாக்களை பயன்படுத்துவதில் இந்த இடர்பாடு 70% ஆக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. காக்ஸ்- 2 இன்ஹிபிடர்கள் என்று அழைக்கப்படும் ஸ்டெராய்ட் கலப்பு இல்லாத அழற்சி தடுப்பு வலிநிவாரணிகள் நேரடியாக காக்ஸ்- 2 என்ற என்சைமில் செயல்படுகிறது.
அதாவது இந்த என்சைம்தான் வலி மற்றும் அழற்சிக்குக் காரணமான என்சைமாகும். ஏற்கனவெ இந்த வகை வலிநாவரணிகளில் ஒன்றான வியாக்ஸ் என்ற ஒன்று 2004ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாம் பொதுவாக எடுத்துக் கொள்ளும் சிறிய அளவிலான வலி நிவாரணிகளினால் முதியோருக்கு இருதயம் தொடர்பான நோய்கள் வாய்ப்பு சற்றே அதிகரித்துள்ளது. குறிப்பாக நீண்ட நாளைய சிறுநீரக நோய் கண்டவர்களுக்கு இந்த வலிநிவாரணிகளால் ஆபத்து ஏற்படும் என்கிறது இந்த ஆய்வு.
Subscribe to:
Posts (Atom)