Monday, February 28, 2011

கடைசி மூச்சு வரை போராடுவேன் - யெமன் அதிபர்

ஸன்ஆ,மார்ச்.1:மக்கள் கொந்தளிப்பை புறக்கணித்துவிட்டு பதவியில் தொடரும் யெமன் நாட்டு ஏகாதிபத்திய அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் கடைசி மூச்சுவரை போராடுவேன் என அறிவித்துள்ளார்.

ஜனநாயக எதிர்ப்பு போராட்டத்தை எதிரிகள் தங்கள் வசப்படுத்தியுள்ளனர். நாட்டை துண்டாடுவதுதான் அவர்களின் நோக்கம் என ஸாலிஹ் ராணுவ கமாண்டர்களிடம் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் முக்கிய பழங்குடியினத்தவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். ஸாலிஹின் ஆளுங்கட்சிக் கூட்டணியிலிருந்து சில பழங்குடியின தலைவர்கள் நேற்று முன்தினம் ராஜினாமாச் செய்துள்ளனர். ஆனால், அதிகாரத்தை ஒப்படைப்பதை அங்கீகரிக்க முடியாது என ஸாலிஹ் அறிவித்துள்ளார்.

யெமன் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் தொடரும் ஸாலிஹின் ஆட்சியில் மக்கள் வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். அந்நாட்டில் சராசரி தின வருமானம் 2 டாலராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment