Sunday, February 27, 2011

துனீசியா பிரதமர் ராஜினாமா

துனீஸ்,பிப்.28:நாட்டை விட்டு வெளியேறிய துனீசியாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர் ஜைனுல் ஆபிதீன் பின் அலியால் நியமிக்கப்பட்ட பிரதமர் முஹம்மது கன்னோஷி மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜினாமாச் செய்துள்ளார்.

தனது செயல்பாடுகளை நியாயப்படுத்தி நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விவரித்துவிட்டு தனது ராஜினாமாவை முஹம்மது கன்னோஷி வெளியிட்டார்.

இடைக்கால அரசுக்கெதிராக போராட்டம் நடந்துவரும் துனீசியாவில் எதிர்ப்பாளர்களும், போலீசாரும் மோதியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேருக்கு காயமேற்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் முன்னால் திரண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலைந்து செல்வதற்காக சனிக்கிழமை போலீஸ் கண்ணீர் குண்டை பயன்படுத்தியது. தொடர்ந்து நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

துனீஸில் போலீசாரும் எதிர்ப்பாளர்களும் பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ ஹெலிகாப்டர்கள் நகரத்தில் தாழ்வாக பறந்துக் கொண்டிருக்கின்றன. ’வீட்டிற்கு செல்லுவதுதான் உங்களுக்கு நல்லது! ஜனநாயகம் என்ன என்பது குறித்து நான் உங்களுக்கு செயல்படுத்திக் காட்டுகிறேன்!’ என ஒரு போலீஸ் அதிகாரி மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment