Sunday, February 27, 2011

துனிசியா, எகிப்து, லிபியாவைத் தொடர்ந்து ஓமனிலும் கிளர்ச்சி ஆரம்பம்!

துனிசியா மற்றும் எகிப்தில் ஆட்சியாளர்களுக்கெதிராக  எழுந்த போராட்டங்களை அடுத்து இரு நாட்டு அதிபர்களும் பதவி விலகினர். அதைத் தொடர்ந்து ஏமன்,பஹ்ரைன் மற்றும் லிபியாவில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமனிலும் வேலை வாய்ப்பு உத்தரவாதம், கல்வி மற்றும் பொருளாதார உதவி, தனியார் மற்றும் அரசுத் துறைகளில் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களின் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.

ஓமன் நாட்டின் சோஹார் எனும் நகரில் திரண்ட ஆர்ப்பாட்டக் காரர்கள் நேற்று இரவு முதல் போராட்டங்களில் ஈடுபட்டனர். வேலையற்று இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு அருகே இருந்த லூ லூ  ஹைபர்மார்கெட்டைத் தாக்கினர். இதில் லூ லூ ஹைபர் மார்கெட்டின்  கண்ணாடிகள் சேதமடைந்தன.

இன்று காலையும் ஆர்ப்பாட்டக் காரர்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தான் ஓமன் நாட்டின் மன்னர்  சுல்தான் கபூஸ் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் அந்நாட்டு குடிமக்களுக்கு குறைந்த பட்சம் 200 ஓமானி  ரியால்கள் வழங்கப் பட வேண்டும் என ஆணைப் பிறப்பித்து இருந்தது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment