Wednesday, March 23, 2011

SDPI முஸ்லிம்களின் கட்சியா? ஒரு விளக்கம்

SDPI என்ற சோஷ;ியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா முஸ்லிம்களுக்கு மட்டுமான கட்சியல்ல. முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் போன்ற பிற்படுத்தப்பட்ட, நீதி மறுக்கப்படும் அனைத்து சமுதாயத்தவர்களுக்குமான தேசிய அளவிலான கட்சி. இந்தியாவில் 16 மாநிலங்களில் இது தன் கிளைகளைப் பரப்பி துடிப்புடன் செயல்பட்டு வருகின்றது.

இராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் SDPI கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் SDPI இப்பொழுதுதான் காலூன்றி வருகின்றது. மாவட்டப் பொறுப்புகளில் நிறைய முஸ்லிமல்லாதார் இருக்கின்றனர். வேட்பாளர்களாக அறிவிக்கக்கூடிய அளவுக்கு யாரும் இன்னும் வளரவில்லை.

ஆனால் கேரளாவில் மாநிலப் பொதுச்செயலாளர், மாநிலத் துணைத் தலைவர் முதற்கொண்டு பல பொறுப்புகளில் முஸ்லிமல்லாதார் இருக்கின்றனர். கேரளாவில் SDPI 98 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றது. இதில் சில தொகுதிகளில் முஸ்லிமல்லாதார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எக்காலத்திலும் முஸ்லிம் வாக்கு வங்கியைப் பிளவுபடுத்துவது SDPIன் நோச்கமல்ல. மாறாக, முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் போன்ற பிற்படுத்தப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட சமுதாயங்களை ஒருங்கிணைத்து, சக்திப்படுத்துவதே SDPIன் நோக்கம்.

இதுநாள் வரை முஸ்லிம்கள் செய்து வந்த எதிர்மறையான அரசியலை (Negative Politics) தவிர்த்து, உடன்பாடான அரசியலை (Positive Politics) SDPI கையில் எடுத்துள்ளது. அத்தோடு SDPIன் அரசியல் வழிமுறை போராட்ட அரசியல் (Agitative Politics) வழிமுறையாகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, சமஉரிமை, இடஒதுக்கீடு என்று அனைத்துத் தேவைகளும் போராடாமல் கிடைக்காது. எனவே SDPI அந்த வழிமுறையைக் கையில் எடுத்துள்ளது.

நன்றி  : Sheik MPM

No comments:

Post a Comment