Saturday, April 9, 2011

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு:27-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது

M_Id_208910_ayodhya
ராய்பரேலி:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வழக்கில் இம்மாதம் 27-ஆம் தேதி விசாரணை நடத்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வழக்கில் வாதம் கேட்பது நேற்றைய தினம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.ஆனால், அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பை மேற்கொண்டதால் வழக்கை விசாரணைக்கு எடுப்பதை முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் விஷ்ணுபிரசாத் அகர்வால் வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சி.பி.ஐ சாட்சியான ஹாஜி முஹம்மதை நேற்று குறுக்கு விசாரணை நடத்தவேண்டியிருந்தது. இவ்வழக்கில் எல்.கே.அத்வானி உள்பட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அத்வானிக்கெதிராக அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த அஞ்சுகுப்தா ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார்.

No comments:

Post a Comment