தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(ள்ளிக்கிழமை) முதல் விசைப்படகுகள் மூலம் 45 நாள்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மீன்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மே மாதம் 29ம் தேதி வரை 45 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க அரசு தடை விதித்து வருகிறது. இந்த ஆண்டும் வருகிற 15ம் தேதி முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் சி.என். மகேஷவரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"தமிழ்நாடு அரசின் கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி தமிழ்நாடு கடல் பகுதியில் மீன்வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் மே மாதம் 29ம் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்து உள்ளது.
அரசு ஆணையின் படி இந்த ஆண்டு வருகிற 15ம் தேதி முதல் மே மாதம் 29ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் கடலுக்குச் செல்ல தமிழக அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட காலத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கடலுக்குச் செல்லக்கூடாது". இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment