திரிபோலி:எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் ப்ரீகா,அதபியா ஆகிய நகரங்களை கைப்பற்ற அரசு ஆதரவு படையினர் நடத்தும் குண்டுவீச்சினால் சாதாரண மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது. நூற்றுக்கணக்கான மக்கள் இந்நகரங்களிலிருந்து புலன் பெயர்ந்து செல்வதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கத்தாஃபி ராணுவத்திற்கு எதிராக பலத்த தாக்குதலுக்கு தயாராகும் எதிர்ப்பாளர்களின் படை துப்பாக்கிச்சூடும்,ராக்கெட் தாக்குதலும் நடத்திவருகின்றனர். கத்தாஃபியின் ராணுவ பலத்தை அழிப்பதற்காக நேட்டோ படையின் போர் விமானங்களும் லிபியாவின் வான் பகுதியில் நோட்டமிட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதபியாவில் கத்தாஃபி ராணுவத்தின் தாக்குதலில் எட்டுபேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயமடைந்தனர். குண்டு சத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு புலன் பெயர்ந்து செல்ல தலைப்பட்டனர். ராணுவம் நகரத்தின் மிக அருகில் வந்துவிட்டதன் அறிகுறிதான் குண்டுச்சத்தம் என நகரவாசிகள் கூறுகின்றனர்.
மிஸ்ரத்தாவில் கத்தாஃபி ராணுவத்தின் சிலரை கைது செய்துள்ளதாக எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ராணுவத்தின் ஒரு டாங்கும் எதிர்ப்பாளர்கள் எரித்து சாம்பலாக்கினர்.
இதற்கிடையே, கத்தாஃபிக்கு அடைக்கலம் அளிக்க தயாரான ஏதேனும் ஆப்பிரிக்க நாட்டை கண்டறிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தூதரக மட்டத்தில் விசாரிக்க துவங்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.
கத்தாஃபியை அயல்நாட்டுக்கு மாற்றி நெருக்கடியை சமாளிக்க தூதரக மட்டங்களில் தீவிரமாக நடந்துவருகிறது. கத்தாஃபியை பதவியை விட்டு விலகச்செய்ய மீண்டும் புதிய ஐ.நா தீர்மானம் நிறைவேற்றத்தேவையில்லை என பிரான்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கத்தாஃபி மற்றும் அவரது குடும்பத்தினரின் முடக்கப்பட்ட சொத்துக்களை லிபியாவில் கொடுமைக்கு ஆளான மக்களிடம் ஒப்படைக்கக்கோரும் பரிந்துரையை ஜெர்மனி ஞாயிற்றுக்கிழமை கூட்டணி நாடுகளிடம் முன்வைத்துள்ளது.
நன்றி : தூது ஆன்லைன்.
No comments:
Post a Comment