Monday, April 11, 2011

டோக்கியோ : சென்ற மாதம் இதே நாளில் ஜப்பானை உலுக்கிய பூகம்பம் மற்றும் சுனாமி ஒரு மாத இடைவெளி விட்டு இன்று மீண்டும் ஜப்பானைத் தாக்கியுள்ளது.

டோக்கியோ : சென்ற மாதம் இதே நாளில் ஜப்பானை உலுக்கிய பூகம்பம் மற்றும் சுனாமி ஒரு மாத இடைவெளி விட்டு இன்று மீண்டும் ஜப்பானைத் தாக்கியுள்ளது.

7.1 ரிக்டர் அளவாகி பதிவாகியிருக்கும் இந்தப் பயங்கர நிலநடுக்கத்தினால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தப் பூகம்பத்த்தை அடுத்து அங்கு சுனாமி தாக்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் சுனாமி தாக்கும் பட்சத்தில் 50 செ.மீட்டர் உயரம் வரை கடலில் அலையின் சீற்றம் இருக்கும் என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 11 ம் தேதி நடந்த அதே நாளில் இன்று 11 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டதால் ஜப்பான் மீண்டும் வளர்ச்சி பின்னடைவுக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த பூகம்பம், சுனாமியில் இருபது  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். உலகம் முழுவதும் இருந்து நிவாரணப்பொருட்கள் இன்னும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் மீண்டும் இன்று நிலநடுக்கம் உருவாகியிருக்கிறது.

டோக்கியோவின் அருகில் உள்ள புகுஷிமாவையொட்டிய பகுதிகளில் இன்றைய நிலடுக்கம் உணரப்பட்டது. ஏற்கனவே கடந்த முறை ஏற்பட்ட சுனாமியினால் இந்தப் பகுதியில் உள்ள அணு உலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்றும் ஏற்பட்ட நடுக்கத்தினால் அணு உலைகள் மூடப்ட்டன. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

சுனாமி தாக்கி ஒரு மாதம் ஆனதையடுத்து இன்று பல இடங்களில் நினைவஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நேரத்தில் மக்களை மீண்டும் பீதியுறுத்தும் வகையில் இந்தப் பூகம்பம் நிகழ்ந்து உள்ளது. 
நன்றி : இந்நேரம்

No comments:

Post a Comment