Tuesday, April 19, 2011

மேட்டுப்பாளையத்தில் சூறாவளி: வாழைப் பயிர்கள் நாசம் !

மேட்டுப்பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றின் காரணமாக ஏறத்தாழ 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால் சுமார் ரூ. 40 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் அருகிலுள்ள பல கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு ஏறக்குறைய ரூ. 40 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகின்றனது.

மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் வனப்பகுதிகளின் ஓரத்தில் அமைன்துள்ளதால், வனங்களிலிருந்து அடிக்கடி ஊரினுள் புகுந்துவிடும் காட்டு யானைகள் அங்குள்ள வாழைத் தோப்புக்களில் வாழைப் பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. இதனால் வேதனையடைந்திருந்த விவசாயிகளை இச்சூறாவளிக் காற்றினால் ஏற்பட்டுள்ள சேதம் நிலை குலையச் செய்துள்ளது.

விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்து வருவதால் தமிழக அரசு இயற்கை சீற்றம் மற்றும் யானைகளால் சேதமடைந்த வாழைப் பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment