Tuesday, April 12, 2011

பிரான்ஸ் நாட்டில் பர்தாவுக்குத் தடை


முன்னதாக இது இஸ்லாமுக்கு விரோதமானது என்று விமர்சிக்கப்படுவதை நிராகரித்த அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, பர்தா என்பது மத அடையாளமல்ல என கடந்த ஆண்டு கூறியிருந்தார்.

பர்தா என்பது பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்ற அவர், பிரெஞ்சு குடியரசில் அதை வரவேற்க முடியாது என்றார்.

பர்தாவுக்கு ஆதரவு தெரிவித்த கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி ஜாக்கியுஸ் மியார்ட், பர்தா பிரெஞ்சு கலாச்சாரத்துக்கு அதிர்ச்சியான ஒன்று எனத் தெரிவித்தார்.

முகம் என்பது ஒரு நபருக்கு கண்ணியமான ஒன்று. அது உங்களின் பாஸ்போர்ட் என்றார் அவர்.

பிரான்ஸில் முஸ்லீம் பெண்களில் குறைந்த எண்ணிக்கையிலான பெண்களே பர்தா அணிகின்றனர். தற்போதைய புதிய சட்டத்தின்படி பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிந்து பிடிபட்டால் முதலில் எச்சரிக்கப்படுவர். பின்னர் 200 டாலர் அபராதம் விதிக்கப்படும்.

பெண்களை பர்தா அணியுமாறு ஆண் ஒருவர் வற்புறுத்தினால் அவருக்கு 43,000 டாலர் அபராதம் விதிக்கப்படும்.
 
நன்றி : அதிரை செய்தி.

No comments:

Post a Comment