Saturday, May 14, 2011

அமெரிக்கர்கள் நினைத்ததை சாதிப்பார்கள் : ஒபாமா

ஒசாமா பின்லேடன் அமெரிக்க வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் மற்றும் எளிய நாடுகளை ஆக்கிரமிப்பு சுரண்டல் தனக்கு விருப்பமான பொம்மை ஆட்சி என்று எப்படியும் தனது காலனியாதிக்கத்தை தொடர்ந்து நடத்திவரும் ஒரு நாட்டினால் கொல்லப்பட்டார்.ஒசாமா கொள்ளப்பட்டது எப்படி ஒரு மர்மமோ அதை போலத்தான் இரட்டை கோபுர தாக்குதலும் ஒரு மர்மம்.யார் தாக்கியது என்று தெரியாமலே அதற்கான எந்த ஒரு விசாரணையும் சரியான வகையில் நடக்காமலும் இரட்டை கோபுட தாக்குதல் என்பது நிட்சயம் உள்ளிருப்பு வேலை என்று அமெரிக்காவின் பல பிராபலமான கட்டடவியல் வல்லுனர்கள் தகுந்த ஆதரங்களுடன் கூறிய பின்பும் கூட அமெரிக்க அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.காரணம் ஆப்கன் என்ற ஒரு நாட்டை தாக்கவேண்டும் அந்த நாட்டில் அமெரிக்கசார்பு பொம்மை ஆட்சியை நிறுவ வேண்டும் என்பதே அதன் நோக்கம்.அப்பொழுதுதான் எண்ணெய் வளம் மிக்க ஈராக் , ஈரான் மற்றும் சுற்றியுள்ள அரபு நாடுகளை தனது காட்டுப் பாட்டுக்குள் வைக்கமுடியும் என்பதே .இப்பொழுது ஒசாமாவும் கொல்லப்பட்டுவிட்டார் இனி இரட்டை கோபுர தாக்குதல் எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் முடிவுக்கு வந்துவிடும் எப்படியும் இரட்டை கோபுர தாக்குதல் உண்மையான விசாரணை நடக்கவிடாமல் அமெரிக்க பத்திரிக்கைகள் ஒசாமா ஒசாமா என்று மீண்டும் மீண்டும் எழுதி தடுத்துவிடுவார்கள்.உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றுஒருவர் நினைத்தால் கூட இந்த ஏகாதிபத்திய மீடியாக்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று கூறி தனிமைப்படுத்துவார்கள்.எது எப்படியோ இனி இரட்டை கோபுர தாக்குதலின் உண்மை வெளிவரும் என்பது சதேகட்டிற்குரியதே.

ஒசாமா கொல்லப்பட்ட பின்னர் பல நாடுகள் தங்களது வாழ்துக்களை அமெரிக்க அரசிற்கு தெரிவித்தது.அமெரிக்காவின் அதிபர் ஒபாமா "அமெரிக்கர்கள் என்றும் நினத்ததை சாதிப்பார்கள் "என்று ஒசாமாவின் கொலைக்கு விளக்கம் தந்தார்.இந்தியாவும் தனது பங்கிற்கு தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு வெற்றி என்று பறை சாற்றியது.மேலும் 1992 ஆம் மும்பை தொடர் வெடிகுண்டு நடத்தப்பதில் கொல்லப்பட்ட 257 பேர் மரணத்திற்கு காரணமாக இந்தியாவால் கருதப்படும் தாவூத் இப்ராகிம் மற்றும் 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் நாட்டில் நடக்கும் பல்வேறு தாக்குல்களில் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் பங்கு உள்ளது என்னும் உண்மையை கண்டறிந்த ஹேமந்த் கர்கரே உட்பட 164 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இந்தியாவால் குற்றவாளி என கருதப்படும் ஹபீஸ் சயீத் ஆகியோரும் கைது செய்யப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்று கூறினார் நமது உள்துறை அமைசர் இது நியாயமான கோரிக்கை.குற்றவாளிகள் அவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நிட்சயம் தண்டிக்கப் படவேண்டும்.ஆனால அதே நேரத்தில் 1984 ஆம் ஆண்டு இந்தியாவின் போபால் என்ற இடத்தில் Union Carbide India Limited என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரமான விசா வாய்வு கதிர்வினால் கிட்டத்தட்ட 5000 - 18000 பேர்வரை கொள்ளப் பட்ட வழக்கில் இன்றுவரை நீதி கிடைப்பதாக தெரியவில்லை பாதுகாப்பு குறைபாடுகளே இதற்கான காரணம் என்று உண்மை கண்டறியப்பட்ட பின்னரும் கூட அதற்கான முயற்சியில் இந்தியா அரசும் ஈடுபடுவதாக தெரியவில்லை.காரணம் இந்த நிறுவனம் அமெரிக்க நிறுவனம் என்பதே.மேலும் குற்றம் சாட்டப் பட்ட வாரேன ஆண்டசன் நாட்டில் இருக்கும் போதே பாதுகாப்பாக அனுப்பிவைத்தே நமது ஆட்சியாளர்கள் தானே.ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற இந்த கொலைகாரன்

ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும்

அமெரிக்காவில் தான் உள்ளான் என்பது அனைவருக்கும் தெரியும் அப்படி இருந்து கூட இந்தியா அவனை கைது செய்ய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.ஆனால் இது குறித்து எந்தவிதமான கருத்தை கூட கூறாமல் நழுவுகிறார் நமது அமைசர். ஆனால் எங்கு இருக்கிறான் என்றே தெரியாத தாவூதை பிடிக்க இந்தியா அரசு தீவிர முயற்சி எடுக்கிறதாம்.எனேற்றால் நாம் எதிர்ப்பது நம்மை விட எளியவனாக இருக்கும் பட்சத்தில் நமக்கு பிராட்சனை இல்லை.ஆனால் அமெரிக்கா போன்று உலக போலிசாக இருக்கும் போது இப்படித்தான்.உலக நீதிபதி என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவும் தெளிவாக உள்ளது அது என்னவெனில் அமெரிக்கர்கள் தாக்கப் படும் போது அந்த குற்றம் நிருபிக்கப் படாவிட்டாலும் கூட யார் தாக்கியது என்று தெரியவிட்டாலும் கூட நாங்கள் நினைத்த நாடுகளை தாக்குவோம்.அப்பாவிமக்கள் இலட்சக்கணக்கில் கொள்ளுவோம்.ஆனால் அதே நேரத்தில் அப்பாவி மக்கள் மரணத்திற்கு காரணமானவர்கள் அமெரிக்கர்கள் என்னும் பட்சத்தில் அவர்களை காப்பற்றவும் எந்தவிதமான உள்ளடி வேலைகளும் அமெரிக்கா செய்யும் என்பதே. அது ஒபமாவின் பேட்டியிலேயே தெளிவாக குறிப்பிடுகிறார் "அமெரிக்கர்கள் நினைத்ததை சாரிப்பார்கள்".தன்னுடைய ஆக்டோபஸ் கையின் மூலம் பல நாடுகளை அவர்கள் தனது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடும் பாலஸ்தீனியர்களை தனது மீடியாக்கள் மூலம் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தும் அமெரிக்காஆனால் அதே நேரத்தில் பலஸ்தீன நாட்டை அபகரித்து அந்த நாட்டின் அப்பாவி மக்களை தினம் தினம் கொன்று குவித்து கொண்டிருக்கும் இஸ்ரேலை நல்லவர்களை போல தனது மீடியாவினால் பரப்பிவருகிறது.அதுவும் ஜனநாயகம் என்ற ஒரு பெயரால்.எதிர்த்து பேசுபவர்களுக்கு பொருளாதார தடை.பின்னர் வழக்கம் போல ராணுவ நடவடிக்கை.நேற்று சதாம்

உட்பட பலர் இன்று ஒசாமா நாளை கடாபி ???

NSA KHADIR

No comments:

Post a Comment