Saturday, April 23, 2011

2011-ஆம் ஆண்டிற்கு பிறகும் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் தொடர்வதாக அறிக்கை

 

american military
வாஷிங்டன்:2011- ஆம் ஆண்டுடன் ஈராக்கிலிருந்து ராணுவத்தை முற்றிலும் வாபஸ் பெறப் போவதாக அளித்துள்ள வாக்குறுதியை அமெரிக்க நிறைவேற்றவில்லை என அறிக்கையொன்று கூறுகிறது.
ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை தடுப்பது என்ற போலியான காரணத்தை காட்டி ஈராக்கில் 10 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் தொடர்ந்து இருப்பதற்கு அமெரிக்க தயாராகுவதாக அமெரிக்க, ஈராக் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வால்ட்ஸ்ட்ரீர் ஜெர்னல் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
இரு நாடுகளும் இவ்விவகாரத்தில் ஏகமனதான தீர்மானம் எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.அமெரிக்க ராணுவம் ஈராக்கில் தொடர்ந்து செயல்பட வேண்டுமானால், அது தொடர்பான பேச்சு வார்த்தைகளை தீவிரமாக்க அமெரிக்க ராணுவ தளபதி அட்மிரல் மைக் முல்லன் ஈராக் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment