Saturday, April 23, 2011

சிரியாவில் பயங்கரம்:எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு-40 பேர் மரணம்

syrian protest

டமாஸ்கஸ்:ஜும்ஆ தொழுகைக்கு பிறகு சிரியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த மக்கள் எழுச்சி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் கொல்லப்பட்டனர். மத்திய நகரமான ஹம்ஸ் மற்றும் தெற்கு நகரமான அஸ்ரா ஆகிய இடங்களில் கொல்லப்பட்டவர்களைக் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
டமாஸ்கஸில் போராட்டம் நடத்த திரண்ட மக்கள் மீது போலீஸ் கண்ணீர் குண்டை பிரயோகித்தது.வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் போராட்டம் நடத்த எதிர்ப்பாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் எல்லா நகரங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குர்த் மக்கள் அதிகமாக வாழும் ஹஸக்கில் ஜும்ஆ தொழுகை முடிந்து ஒன்று திரண்ட எதிர்ப்பாளர்கள் மீது அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அதேவேளையில், சிரியாவின் அனைத்து மாகாணங்களின் ஒருங்கிணைந்த கமிட்டி நடைமுறைக்கு வந்தது. அமைதியான ஜனநாயக மாற்றத்தை தாங்கள் கோருவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
யெமன் தலைநகரான ஸன்ஆவில் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். வளைகுடா நாடுகள் தயாராக்கிய திட்டத்தின் அடிப்படையில் பதவி விலக வேண்டுமென அரபு தலைவர்கள் ஸாலிஹிடம் நேற்று முன்தினம் வலியுறுத்தினர்.
அரசியல் சட்டத்தை பின் தொடர்வதற்கான எவ்வித முன் உதாரணங்களுக்கும் தயார் என தெரிவித்த ஸாலிஹ் வளைகுடா நாடுகளின் முயற்சிகளை வரவேற்றார்.

No comments:

Post a Comment