Tuesday, April 26, 2011

சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த 50 கிலோ மீன்கள் பறிமுதல்!

நெல்லை மாநகர பகுதிகளில் சுகாதாரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், சிலர் சுத்தமின்றி தரையில் போட்டு விற்பதாகவும் மாநகராட்சி கமிஷனர் சுப்பையனுக்குப் புகார்கள் வந்தன. அதன்பேரில் உணவு ஆய்வாளர்கள் சங்கரலிங்கம், கலியணான்டி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காலை சமாதானபுரம், பாளை மார்க்கெட், மகாராஜநகர் உழவர்சந்தை, வ.உ.சி.மைதானம் பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட 50 கிலோமீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புழுக்கள் அடங்கிய கருவாடுகளையும் கைப்பற்றினர். 50 கிலோ மீன்களையும் பொதுமக்கள் முன்னிலையில் கிருமிநாசினி ஊற்றி சுகாதார அதிகாரிகள் அழித்தனர்.

No comments:

Post a Comment