Sunday, May 8, 2011

7 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்! நாளை பிளஸ் 2 ரிசல்ட்...


சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன; 11 ம் தேதி முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பம் அளிக்கப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடந்தது. 5,477 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 23 ஆயிரத்து 545 பேர் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர். மாணவிகள் 3 லட்சத்து 67 ஆயிரத்து 102 பேர். சென்னையில் மட்டும் 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் 1,890 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பள்ளி மாணவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
இந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை (9ம்தேதி) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த தேர்வில் அனைத்து பாடங்களிலும் முதல் இடம் பெற்றவர்களின் விவரம் மற்றும் பாட வாரியாக முதல் இடம் பெற்றவர்களின் விவரம் வெளியிடப்படும்.
மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த முழு விபரம் அந்தந்த பள்ளிகளிலேயே காலை 10 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும். மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்களை வரும் 25ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய அந்தந்த தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் ஜெராக்ஸ் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புபவர்கள் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசுத் தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெறலாம்.
மார்ச் மாதம் தேர்வு எழுதியவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பாடங்களில் விரும்பிய பாடங்களுக்கு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கலாம். மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலம் பாடத் தாள் ஒவ்வொன்றுக்கும் தலா ஸீ550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ஸீ275 விடைத்தாள் நகல் கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதேபோல மறு கூட்டல் செய்ய விரும்புவோர் எந்த ஒரு பாடத்துக்கும் மறு கூட்டல் கேட்டு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதே பாடத்துக்கு மறு கூட்டல் கேட்டு தற்போது விண்ணப்பிக்க வேண்டியதில்லை. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு விரும்பினால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 ரிசல்ட் பாற்க்க!

http://tnresults.nic.in/
http://results.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://dge2.tn.nic.in
http://www.pallikalvi.in/
http://squarebrothers.com/
http://results.sify.com
http://www.madrastimes.com/
http://www.indiacollegefinder.org/
http://www.maalaimalar.com/
http://kalvimalar.dinamalar.com
http://www.webulagam.com
http://www.collegesintamilnadu.com/

No comments:

Post a Comment