Thursday, May 12, 2011

பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீங்கியவர்களின் விபரங்களை அறிவது எப்படி?


உங்கள் பேஸ்புக் கணக்கில் முதல் நாள் பார்வையிடும் போது 200 நண்பர்கள் இருப்பார்கள்.
எனினும் சிலவேளைகளில் அடுத்த நாள் 196 நண்பர்கள் என இருப்பதை அவதானிக்கலாம்.

சில நண்பர்கள் உங்களை Un friend செய்துவிடுவார்கள். யாரெல்லாம் இவ்வாறு செய்தார்கள் என்பதை அறிந்து கொள்ள பேஸ்புக்கில் வசதியில்லை எனினும்
Twenty Feet எனும் வெப் அப்பிளிகேஷனில் உங்கள் நண்பர்களின் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட நண்பர் ஒருவர் நீங்கினால் அறிவிறுத்தும் படி கூறிவைக்கலாம்.

இதற்காக Twenty Feet எனும் தளத்திற்குச் சென்று பேஸ்புக் கணக்கை இணைத்துவிட வேண்டும்.

அவ்வாறு செய்த பின்னர் Twenty Feet எனும் தளம் ஒவ்வொரு நாளும் உங்கள் பேஸ்புக் கணக்கின் நண்பர் பட்டியலை சரிபார்த்து அதில் யாராவது விடுபட்டு இருந்தால் அவரின் விபரங்களை தெரியப்படுத்தும்.

No comments:

Post a Comment