Sunday, June 19, 2011

கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையைக் கூட்ட

கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையைக் கூட்டுவதற்கான உணவுப் பழக்கம் (குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைப் பிடிக்க வேண்டும்).
* அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* பாஸ்ட் ஃபுட், க்ரீம் வகைகள் கலந்த உணவு மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
* வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட், ஒருவித கொழுப்புச் சத்துள்ள பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான்!
* உலர் பழங்களுடன் ஒரு பெரிய கிண்ணம் நிறைய அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சைப் பழரசம்.
* மூன்று இட்லி, சர்க்கரை கலக்காத வாழைப்பழ மில்க்ஷேக்.
* எண்ணெய் குறைவாக மூன்று தோசை, சர்க்கரை இல்லாத சப்போட்டா மில்க் ஷேக்.
* ரவா அல்லது சேமியா உப்புமா, சர்க்கரை இல்லாத ஃபைன் ஆப்பிள் ஜூஸ்.
* ஒரு கைப்பிடி உலர் பழங்கள் (அ) ஒரு கப் தயிர் (அ) அவித்த சோளம் (அ) கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம்.
* மதிய உணவுக்கு மூன்று கரண்டி சாதம், சாம்பார், தயிர், மிக மிகக் குறைவான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு.
* இனிப்பான பிரெட் (அ) சர்க்கரை இல்லாத மில்க்ஷேக் (அ) பால், முட்டை கலந்த ஃப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சாயங்கால ஸ்நாக்ஸ் ஆக உட்கொள்ளலாம்.
* இரவு உணவுக்கு முன்னர் காய்கறி அல்லது சிக்கன் சூப் குடிக்கலாம். நான்கு சப்பாத்தி, காய்கறி குருமா, தயிர் (அ) குறைவான தேங்காய் இல்லாத குருமாவுடன் நான்கு ஆப்பம்.
அரிசி மற்றும் அசைவ உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது!

Thursday, June 16, 2011

கண்களை பாதுகாக்க


1. ஒரு நாளுக்கு 7 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். உறங்குதல் காரணமாக கண்கள் புத்துணர்வுடன் செயல்படுகிறது.
2. கண்களை எக்காரணம் கொண்டும் கசக்குதல் கூடாது. இமைகளை மூடித் திறத்தல் கண்களுக்கு நல்ல பயிற்சியாகும்.
3. வெளியில் செல்லும்பொழுது எப்பொழுதும் கண்களுக்குப் பாதுகாப்பாக கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். நேரடியாக சூரியனின் கதிர்களை நாம் நோக்கும் போது கண்கள் பாதிப்படையும்.
4. தண்ணீரில் நீந்தும்பொழுது கண்களுக்கு கண்ணாடி அணிந்து நீந்த வேண்டும். கண்களில் நீர் புகுந்தால் அரிப்பு மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
5. ஒரு நாளுக்கு 8 குவளை நீர் பருக வேண்டும். இப்படி பருகினால் கண்களில் ஏற்படும் வீக்கம் குறைந்துவிடும். உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றவும், நீர் வறட்சியினைத் தடுக்கவும் அதிகம் நீர் பருக வேண்டும்.
6. கண்களின் பாதுகாப்புக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமாகும். சத்தான உணவுகளை உண்பதால் கண்களில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க இயலும். தர்பூசணி, தக்காளி, பப்பாளி, கேரட், கீரைகள் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் கண்களில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க இயலும்.
7. கண்களில் முதலில் ஏற்படும் சிறு எரிச்சல், அரிப்பு, சிவப்பு தன்மை, கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை உதறாமல் முறையாக முதலிலேயே கவனிக்க வேண்டும் அப்படி கண்டு கொள்ளாமல் போனால் கண்களை நாம் இழக்க நேரிடும்.
8. தனக்குத் தானே சுய மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. பழைய பரிந்துரையினை வைத்து மருந்துகள் நாமே வாங்கி உபயோகித்தல் கூடாது.
9. தொடர்ந்து கண்களில் எரிச்சல் இருந்தால் உங்கள் கண் மருத்துவரை அணுக வேண்டும்.

Wednesday, June 15, 2011

காலைச் சிற்றுண்டியுடன்


காலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடிப்பதற்கு பதில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மதிய உணவின் போது சாப்பிடும் அளவில் 9 சதவீதம் குறையும் என்கிறது ஆஸ்திரேலிய ஆய்வுத் தகவல். இத்தகைய முறையால் உணவின் அளவு குறைவதுடன் நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவும் குறைவதால் உடலின் எடை குறைய வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.
பழச்சாறு பசியைத் தூண்டும் என்பதால் பசி சீக்கிரம் எடுக்கும் என்பது மட்டும் அல்ல, உணவின் அளவும் அதிகமாகும் இதனால் கலோரிகளின் அளவு அதிகரித்து உடல் எடை குறைய மறுக்கும் என்பதும் விஞ்ஞானிகளின் அறிவுரை.இந்த ஆய்வுக்காக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு அதிக உடல் எடை கொண்ட ஆனால் ஆரோக்கியமான சுமார் 34 ஆண் மற்றும் பெண்களை எடுத்துக் கொண்டது.
இவர்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழுவினருக்கு சிற்றுண்டியின் போது கொழுப்பு நீக்கப்பட்ட பாலும், மற்றொரு பிரிவினருக்கு பழச்சாறும் கொடுத்து 4 மணிநேர இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் குறைந்த அளவே புரதம் மற்றும் லாக்டோஸ் சத்துக்கள் இருப்பதும், அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதும் தடை செய்யப்படுகிறது.
ஆனால் அதன் இதர சத்துக்கள் உடலில் சேர்ந்து மூளைச் செயல்திறனை அதிகரித்து ‘போதும் என்ற மனநிறைவைக் கொடுப்பதால் பசிக்கும் உணர்வு தள்ளிப் போகிறது, குறைவான உணவும் எடுத்துக்கொள்ள ஏதுவாகிறது. அதனால் உடல் எடை எளிதில் குறைய வகை செய்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

Friday, June 10, 2011

S.S.M. குல் முகம்மது நினைவு 10-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்துத்தொடர்போட்டி. துவக்க விழா


அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் 17-ஆம் ஆண்டு நடத்தும்S.S.M. குல் முகம்மது நினைவு 10-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்துத்தொடர்போட்டி.
துவக்க விழா நாள்10-06-2011 வெள்ளி கிழமை இன்று மாலை 5 மணிக்கு
இடம்:கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் (ITI) அருகில்
இன்று துவக்க நாள் ஆட்டமாக விளையாடுகின்ற அணிகள் ஸ்ரீரங்கம் கால்பந்து கழகம் திருச்சி vs டெம்பிள் சிட்டி மதுரை ஆகிய அணிகள் மோதுகின்றன.

சிறப்பு விருந்தினர் மற்றும் ஆட்டத்தை துவக்கி வைப்பவர்
உயர்திரு v.செங்கமலக்கண்ணன் அவர்கள்
காவல் ஆய்வாளர்,
அதிராம்பட்டினம்.

தமிழகத்தின் தலை சிறந்த அணிகள் பங்கு கொள்ளும் இத்தொடர் போட்டியைக்காண வழக்கம் போல் பொதுமக்களும் ,கால்பந்தாட்ட ரசிகப்பெருமக்களும் திரளாக வருகை தந்து போட்டியைக்கண்டு சிறப்பித்துத் தருமாறு அன்புடன் அழைகின்றோம்.

இங்ஙனம்,
அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம்.
அதிராம்பட்டினம்.

Thursday, June 2, 2011

ஜிமெயில் பாஸ்வேர்ட்களை சீன ஹேக்கர்கள் திருடி வருகின்றனர்-கூகுள்


சான்பிரான்ஸிஸ்கோ சீனாவிலிருந்து செயல்படும் ஹேக்கர் கும்பல், ஜிமெயிலைப் பயன்படுத்தி வரும் நூற்றுக்கணக்கானோரின் பாஸ்வேர்ட்களை திருடி விட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.



இதன் மூலம் அந்த ஜிமெயில்களின் பயன்பாடுகளை இந்த ஹேக்கர்கள் கண்காணித்து பல்வேறு குழப்ப வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.



இதுகுறித்து கூகுள் கூறியுள்ளதாவது:



அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் பலர், சீனாவில் ஜனநாயகம் கோரி குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்கள், அமைப்பினர், ஆசிய நாடுகள் பலவற்றின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் பாஸ்வேர்ட்கள் திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம். ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் பலரின் பாஸ்வேர்ட்களும் கூட இதுபோல திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம் என்று அது கூறியுள்ளது.



கூகுளின் இணையதள செயல்பாடுகளில் சீன ஹேக்கர்கள் ஊடுறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஹேக்கர்கள் அட்டகாசத்துடன், சீன அரசின் அடக்குமுறைகளும் அதிகரித்ததால்,சீனாவில் உள்ள தனது அலுவலகத்தை மூடுவதாக அறிவித்தது கூகுள் என்பது நினைவிருக்கலாம்.



அதன் பின்னர் சீனாவில் உள்ள தனது செயல்பாடுகளை ஹாங்காங்குக்கு மாற்றி விட்டது கூகுள்.



இந்த நிலையில், ஜிமெயில் பாஸ்வேர்ட்களை திருடும் கும்பல்களின் அட்டகாசம் சீனாவில் அதிகரித்துள்ளதாக கூகுள் கூறியிருப்பதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

Saturday, May 28, 2011

நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!!


புதிதாக ஆட்சியில் அமர்ந்த உடன் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை செய்தார்.


அது என்ன வென்றால் இனி மக்கள் அஞ்சாமல் நிம்மதியாக வாழலாம் என்று!


அவர் அப்படி சொல்லி ஒரு நாள் கூட, முடியவில்லை சிறுபான்மை சமூக அதிமுக மத்திய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தின் மூலம் கொல்லப்பட்டார்.


அது சம்மந்தமாக இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. விபத்து நடத்திய லாரி கூட இதுவரை கண்டுப்பிடிக்க படவில்லை.


இதுவே அமைச்சர் ஒரு ஹிந்துவாக இருந்தால் ஐ.எஸ்.ஐ சதி என்று சொல்லி , அந்த இயக்கத்தோடு தொடர்பு, இந்த இயக்கத்தோடு தொடர்பு என்று இதுவரை எத்தனையோ? அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யபட்டு இருப்பார்கள்.


நடந்த இந்த சம்பவத்தை சில பத்திரிக்கைகள் பாகிஸ்தான் ஐ எஸ் ஐ என்பார்கள், ராமகோபாலன் அப்கானிஸ்தான் தலிபான்கள் என்பார், இல்லை, இல்லை, கஷ்மீர் லஷ்கரே அமைப்புதான் காரணம் என்பார்கள் காவல்துறை கண்ணியவான்கள்.


அதுவெல்லாம் இல்லை தாவூத் இபுராஹிம் தான் என்பார்கள் நமது வார இதழ்களாகிய ஜூனியர், சீனியர் விகடன்மார்கள். இதில் எதுவுமே இல்லை, இந்த விபத்தை நடத்தியது ஒரு புது அமைப்பு என்று சொல்லவார்கள் தினமணியும், தினமலரும் போன்ற பார்பன ஹிந்துத்துவா நாளிதழ்கள்.


நீங்கள் யார் சொல்லவதும் சரியில்லை நாங்கள் துப்பறிந்து கண்டுபிடித்தோம் என்று உலகத்தில் இல்லாத ஒரு புதிய பெயரை சொல்வார் பாசிச ஊது குழலாகிய நக்கீரன்.


இப்படி கற்பனையிலேயே துப்பு துலக்கும் இந்த துப்பறியும் பத்திரிகை சம்பவான்கள் எல்லாம், ஏன் இன்னும் தங்கள் கற்பனை குதிரையை ஓடவிடாமல் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நமக்கு சந்தேகம் வருகிறது.


ஜெயலலிதாவின் பதவி ஏற்ப்பு விழாவிற்கு வருகை புரிந்த குஜராத் இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியை பார்த்து சிறுபான்மை மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. மோடியின் வருகையால் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்றுஅஞ்சினர்.


இந்நிலையில் தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டது பிடிக்காமல் "ஹிந்துத்துவா" இந்த விபத்தை நடத்தி இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.


இந்த துப்பறியும் பத்திரிக்ககளும் வாய்திறக்க மறுக்கின்றன, விபத்தை நடத்திய லாரியும், லாரி டிரைவரும் இதுவரை பிடிக்கப்படவில்லை. அதுவும் இந்த லாரி கேரளாவை சேர்ந்தது என்ற செய்தி இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கோட்டை என்று கேரளா மாநிலத்தை சொல்லலாம். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யூனிட்கள் ( சிறு சிறு படையணிகள் ) அதிகம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றுதான் கேரளா மாநிலம்.


முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான பழனி பாபா அவர்களை கொன்றவர்களும் கேரளத்து ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பழனி பாபாவை கொல்ல கேரள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து ஆட்களை தெரிவித்தார்கள் தமிழக ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி இயக்கத்தினர்.


கேரள ஆர்.எஸ்.எஸ். கார்கள் கேரளத்தில் இருந்து ஒரு அம்பாசிடர் கார் மூலம் தமிழகம் வந்து பழனி பாபாவை வெட்டி கொலை செய்து விட்டு திரும்பிச் சென்றார்கள். இதே போல் அமைச்சர் மரியம் பிச்சை அவர்கள் விசயத்திலும் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.


வந்துவிட்டு போனதோ கொலையாளி மோடி ! கொல்லப்பட்டதோ சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்! குஜராத்தில் நடப்பதை போலவே நடந்திருக்கிறது! தமிழகத்திற்கு வருகை புரிந்த மோடியின் தூண்டுதலின் பெயரில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


புதிய அரசு சிபி ஐ விசாரணை நடத்துமா? சி.பி.சி.ஐ.டி விசாரணை அந்த அளவுக்கு உண்மைகளை வெளி கொண்டுவர போதுமானதாக இருக்காது என்றே நாடு நிலையாளர்கள் கருதுகிறார்கள்.

Friday, May 27, 2011

அதிராம்பட்டினம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - மாணவிகள் சாதனை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிரை பள்ளிகளின் தேர்வு முடிவுகள். முதல் மூன்று இடம் பெற்ற மாணவ/மாணவிகள் விவரம்.

இமாம் ஷாபி மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்.

முதலிடம் - அல் ஜசீரா - 474


இரண்டாம் இடம் - பாஹிமா பாத்திமா - 473


மூன்றாம் இடம் - வசீமா - 472


காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்.

முதலிடம் - சகீரா - 482

இரண்டாம் இடம் - நபீஸா - 481


மூன்றாம் இடம் - மலர்விழி - 468

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்.

முதலிடம் - ரியாசுதீன் - 459

இரண்டாம் இடம் - வின்சன்ட் பளித் பிரீடோ - 444


மூன்றாம் இடம் - ஷேக் அலாவுதீன் - 442

Source : Adiraiwap

Tuesday, May 24, 2011

தக்காளி சாறு அருந்தினால் கொழுப்பு குறையும்: ஆய்வில் தகவல்



சமைக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளிச் சாறில் காணப்படும் இரசாயனம் இரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும், உயர் குருதி அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் சிறந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பிரச்சினை உள்ளவர்களுக்கு பொதுவாக statins மருந்து வகைகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. இந்த மருந்துகளில் காணப்படும் இரத்தக் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு இரசாயனத்தை போலவே சமைக்கப்பட்ட தக்காளியும், தக்காளிச் சாறும் பயன்தரக் கூடியவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டுமே இதயத்தில் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியவை. இத்தகைய நோயாளிகள் தினசரி இரண்டு அவுன்ஸ் தக்காளிச் சட்னி அல்லது ஒரு பைன்ட் தக்காளிச் சாறை உட்கொள்வதன் மூலம் பெரும் பயனை அடைய முடியும்.
நன்கு பழுத்த தக்காளியில் சிவப்பு நிற பளபளப்பு ஏற்படக் காரணமாக இருப்பது அதில் பொதிந்துள்ள lycopene என்ற இரசாயனமாகும். இந்த சக்தி மிக்க இரசாயனம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது.
அத்தோடு மாரடைப்பு, பக்கவாதம் என்பனவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Lycopene என்ற இந்த இரசாயனம் பற்றி நடத்தப்பட்டுள்ள 14 சர்வதேச ஆய்வுகளை கடந்த 55 வருடங்களாக நன்கு ஆராய்ந்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
உடம்பிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரோலுக்கு இது இயற்கையான பாதுகாப்பை வழங்கக் கூடியது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். பிரிட்டனில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொலஸ்ட்ரோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு statins மருந்து வகைகளே வழங்கப்படுகின்றன.

பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்

பாலாடைக்கட்டி மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவதற்கு யாருக்குதான் விருப்பம் இருக்காது. இந்த பால் பொருட்களை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது.
இத்தகைய சுவை விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை ஆராய்ச்சியாளர்கள் தந்துள்ளனர். வெண்ணெய், பாலாடை கட்டி சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்காது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நுண் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆயிரக்கணக்கான நபர்களை ஆய்வு செய்த போது அரை கிலோவுக்கு மேல் பாலாடை கட்டி சாப்பிட்டவர்களுக்கும் மாரடைப்பு அபாயம் ஏதும் ஏற்படாததை கண்டறிந்தனர்.
ரோடே தீவின் ப்ரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டெல்லா அஸ்லி பெக்யான் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் வெண்ணெய் பொருட்களால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்காது என தெரியவந்துள்ளது.
பால் மற்றும் பாலாடைக்கட்டி கூட்டுப் பொருட்களை கொண்டது. ஆய்வின் போது பால் பொருட்களுக்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. குறிப்பாக பால் பொருட்களில் உள்ள கொழுப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பாலில் உள்ள கொழுப்பு தீங்கு விளைவிக்காது என ஆய்வுக் குழு உறுதியாக நம்பாத போதும் அதில் உள்ள கால்சியம், வைட்டமின் டி, பொட்டாசியம் இதய நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 593 கிராம் பால் பொருட்கள் எடுத்துக் கொண்ட போது மாரடைப்பு பாதிப்பு இல்லாததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

source : http://puthiyathoothu.blogspot.com/

Monday, May 23, 2011

3500 ஆண்டுகளுக்கு முன்பே இதயநோய் தோன்றியது: ஆய்வில் தகவல்


3500 ஆண்டுகளுக்கு முந்தய எகிப்து இளவரசி அக்மோஸ் மெர்யட் அமோன்க்கு இதய நோய் ஏற்பட்ட விவரத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எகிப்தில் அரசக் குடும்பத்தினர் இறந்து போகும் போது அவர்களது உடல்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்தப்பட்டு புதைக்கப்படும். இவற்றுக்கு மம்மிக்கள் என்று பெயர். இந்த மம்மிக்களை மருத்துவர்கள் ஆய்வு செய்த போது 3500 ஆண்டுகள் முந்தய எகிப்து இளவரசி இதயநோயால் அவதிப்பட்டது தெரியவந்தது.

சிடி ஸ்கேன் எனப்படும் மனித குறுக்கு வெட்டுத் தோற்றத்தை ஆய்வு செய்த போது மம்மியாக புதைக்கப்பட்டிருந்த இளவரசிக்கு இதய நோய் இருப்பது தெரியவந்தது. இதய ஸ்கேனில் இளவரசிக்கு இதயம், மூளை, வயிறு மற்றும் கால்பகுதிகளுக்கு செல்லும் ரத்தக்குழாய் பகுதிகளில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எகிப்து இளவரசி இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் கூறினர். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைகழக நிபுணர்களுடன் அமெரிக்க இதய மருத்துவ நிபுணர்கள் 52 மம்மி உடல்களை ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின் போது எகிப்து இளவரசிக்கு உள்ள நோய் விவரங்கள் தெரியவந்தன.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் தேசிய பழங்கால அருங்காட்சியகம் உள்ளது. அங்கு மம்மிக்கள் மீது முழு ஸ்கேன் செய்து நிபுணர்கள் பழங்காலத்திலேயே இதய நோய்த் தாக்கம் இருப்பதை உணர்த்தி உள்ளனர். ஆய்வு செய்த மம்மிக்களில் பாதி பேருக்கு இதய ரத்தக் குழாய்கள் தடித்து இருப்பது தெரியவந்தது.

இளவரசி அக்மோஸ் கிறிஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகள் முன்பாக வாழ்ந்தவர். இந்த இளவரசி தனது 40 வயதில் மரணம் அடைந்துள்ளார். மிக சொகுசான வாழ்க்கை நடத்திய அந்த இளவரசி மிக சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தார்.

அந்த இளவரசி பழம், காய்கறிகள், மீன் வகைகளை அதிக அளவில் சாப்பிட்டு இருப்பார் என கலிபோர்னியா பல்கலைகழக ஆய்வாளர் மருத்துவர் கிரிகோரி தாமஸ் கூறினார்.

கைத்தொலைபேசியில் பேசினால் மறதி நோய் மறைந்து போகும்: ஆய்வில் தகவல்


கைத்தொலைபேசியில் பேசினால் மறதி குணமாகும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. "அல்ஷ்கெய் மெர்ஷ்" என்ற மறதி நோயினால் உலகில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய் உருவாகிறது. இந்த நோயை ஜேர்மனியை சேர்ந்த ஆலியோஸ் என்ற விஞ்ஞானி கடந்த 1906ம் ஆண்டு கண்டுபிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து கைத்தொலைபேசியில் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை கைத்தொலைபேசிகள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.

இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் நினைவாற்றல் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் கைத்தொலைபேசியில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

Saturday, May 21, 2011

தமிழக முஸ்லீம் அரசியல் தளத்தில் தமீம் அன்சாரி!!


தமீம் அன்சாரி நாகை மாவட்டம், நாச்சி குளம் என்ற ஊரைச்சேர்ந்தவர். முஸ்லீம் சமூகத்தில் இருந்து மிக இளம் வயதிலே அரசியல் தளத்துக்கு வந்தவர்.

சிறந்த செயல்வீரர், இவரின் தோல்வி உண்மையிலேயே தமிழக முஸ்லிம்களை பொருத்தவரை இழப்பென்றே சொல்லலாம்.

தமிழக முஸ்லீம் தலைவர்களில் தமீம் அன்சாரி ஒரு துடிப்பான இளைஞ்ஞர். இவர் ஜெயித்து சட்ட சபைக்கு சென்றிருந்தால், முஸ்லீம் மக்களின் குரலாக ஒலித்திருப்பார்.

எமக்கு தேவை ஆயிரம் நரிகளின் ஊளைகளல்ல. ஒரு சிங்கத்தின் கர்ஜனையே. அந்த வாய்ப்பு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தமீம் அன்சாரிக்கு இல்லாமல் போனது கவலைக்குரிய விசயமாகும்.

சிங்கத்தின் வாலாய் இருப்பதைவிட கட்டெறும்பின் தலையாயிருப்பதே மேல்" என்று மமக முடிவெடுத்து தனிச்சின்னத்தில் நின்று 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது பாராட்டத்தக்க விசயமாகும்.

நன்றி : சிந்திக்கவும்

Thursday, May 19, 2011

நீதி கேட்கும் பிஞ்சு குரல்கள்!!

உள்ளம் பதைக்குதடா!



உயிர் துடிக்குதடா.



கள்ளமில்லா பிள்ளை உடல் ..



துளைத்த உன் சூலத்தின் ..



முனை மழுங்கிவிட்டாலும் ..



என் மனத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை !!



உன் முகம் காணும் ..



நேரமெல்லாம் என் இகம் ..



மறந்து போகிறேனே மோடி!!



உன்னை பெற்றவளும் பெண்தானோ ?



இல்லை பிசாசை பெற ..



பெண்ணாய் பிறந்த பேயோ?!!

25 காசுக்கு டாட்டா பை பை!!

டெல்லி , 25 காசு நாணயம் வரும் ஜூலை மாதத்திலிருந்து செல்லாது. ஜூன் மாத இறுதிக்குள் இப்போதுள்ள 25 பைசா நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

25 காசு நாணயம் ஜூன் 30க்குப் பிறகு செல்லாது. எனவே, மக்கள் தங்களிடமுள்ள 25 காசு நாணயங்களையும், அதற்கும் கீழுள்ள மதிப்புள்ள நாணயங்களையும் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.

அல்லது அந்த நாணயங்களை அரசுடைமை வங்கிகளின் சிறு நாணய பரிவர்த்தனையில் ஈடுபடும் கிளைகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஜூன் 29 ம் தேதி வங்கி அலுவலக நேரம் முடியும்வரை இவற்றை மாற்றிக் கொள்ள முடியும். இதை ரிசர்வ் வங்கி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.