Tuesday, March 22, 2011

கடையநல்லூர் தொகுதியில் SDPI வேட்பு மனு தாக்கல்


முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்ஃப் வாரிய சொத்துகளை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், SDPIன் மாநிலப் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி SDPI தனித்துப் போட்டியிட முடிவெடுத்தது. மேலும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியைப் பொறுத்தவரைக்கும் வெற்றி-தோல்வியைக் குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான 
முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துகள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனைக் கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சி. அதன் அடிபடையில்
SDPI தமிழ்நாட்டில் குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஆறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். ஆறு தொகுதிகளில் ஒரு தொகுதியான நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் நெல்லை முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி வேட்புமனு தாக்கல் முதல் நாளான நேற்று ஜங்ஷன் பள்ளியில் இருந்து ஊர்வலமாக வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் அதிகாரி சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த போது
அப்பொழுது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது: நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தடுக்கப்பட்டால் கடையநல்லூரில் நீண்ட நாளாக தீர்க்கப்படாமல் இருக்கும் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைப்பேன். கடையநல்லூரை வேலைவாய்ப்பு மிக்க நகரமாக மாற்றுவேன். பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கு முயற்சி எடுப்பேன். மேலும் தொகுதி மக்களின் தோளோடு தோளாக நின்று அவர்களின் எந்தப் பிரச்னை என்றாலும் உடனடியாக தீர்த்து வைப்பேன்எனக் கூறினார்.

No comments:

Post a Comment