Wednesday, April 13, 2011

கடலூரில் வாக்காளர் பட்டியலில் 1000 பேர் மிஸ்சிங்:ஓட்டுச் சாவடிக்கு பூட்டு!

கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவனாம்பட்டிணம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 1000 ‌மீனவர்களின் பெயர்கள் புதிதாக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் கடலூர் தாசில்தாரை சிறைபிடித்ததுடன், நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்களிகக அனுமதி மறுக்கப்பட்ட வாக்காளைகளில் ஒரு கும்பல், வாக்குச்சாவடிக்கு பூட்டு போட்டு, மற்ற அனுமதியுள்ள வாக்காளர்களையும் ஓட்டு போடவிடாமல் ரகளையில் ஈடுபட்டனர்.இதனை விசாரிக்க வந்த வட்டாச்சி அலுவலர் அசோகனை தாக்கினர்.
இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது.

No comments:

Post a Comment