தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. 5 மணிவரை வரிசையில் நின்ற வாக்காளர்கள் தொடர்ந்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். பல இடங்களில் மின்னணு எந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது. அந்த இடங்களில் ஓட்டுப்போட அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அனைத்து வாக்குசாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இறுதியில் தமிழகத்தில் 75.21 சதவீதம் பதிவானது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்னும் இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. வாக்கு எண்னும் இடங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக டி.ஜி.பி.கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் 91-ல் 61 சதவீதமும், 96-ல் 67 சதவீதமும், 2001-ல் 59 சதவீதமும், 2006-ல் 70.8 சதவீதமும் பதிவானது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment