நேற்று புதுமனைத்தெரு, காந்திநகர், கீழத்தெரு, கரையூர்தெரு, கடற்கரைத்தெருக்களில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்தனர். பணம் பட்டுவாடா செய்பவர்களை எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் 'கை'யும் களவுமாக பிடித்தனர். இரவில் பணம் பட்டுவாடா செய்வதற்காக மின்சாரம் நிறுத்தப்படுவதாக கூறி மமக, அதிமுக, கம்யூ, மற்றும் தேமுதிகவினர் பேருந்து நிலையத்தில் கூடி பஸ்மறியல் செய்ய முயன்றனர். நடவடிக்கை எடுப்பதாக கூறி காவல்துறையினர் கலைந்து செல்ல பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் பணம் பட்டுவாடா செய்ததாக கீழத்தெருவைச் சேர்ந்த இருவரை போலிஸில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். கட்டுகட்டாக பணம் வைத்திருந்ததாக கூறப்படும் புதுமனைத்தெருவைச் சேர்ந்த இருவரை பொதுமக்கள் எச்சரித்து அனுப்பினர். திமுக அனுதாபிகளைக் கொண்ட குடும்பத்திற்கு ரூ 3000 வரை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்.
No comments:
Post a Comment