நியூசிலாந்தை சேர்ந்த 28 வயது மதிக்கத் தக்க வாலிபர் மைக்கேல் டேனியல் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் கடுமையான மன உளச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இவர் தனக்குத் தேவையான உணவைத் தானே சமைத்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளவராக இருந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் சமையலுக்கான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கும் போது, தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை பற்றிய சிந்தனையே இல்லாதவராக காய்கறிகளோடு காய்கறியாக தனது விரலையும் சேர்த்து துண்டாக்கியதோடு அதனைக் காய்கறிகளோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டு விட்டார்.
இச்சம்பவம் பின்னர் அவரது குடும்பதினருக்குத் தெரியவந்து, அவரை எரிக்மோனாஸ் டீரியோவில் உள்ள பிரபல மனநல மருத்துவரான கிரைக்பிரின்ஸ் என்ற மன நல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் பின்னர் அவரது குடும்பதினருக்குத் தெரியவந்து, அவரை எரிக்மோனாஸ் டீரியோவில் உள்ள பிரபல மனநல மருத்துவரான கிரைக்பிரின்ஸ் என்ற மன நல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.
சிகிச்சையின் போது அந்த வாலிபர் இன்னும் அவரது 2 விரல்களை வெட்டி சமைக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. போதிய சிகிட்சை அளிக்கப்பட்டதால் அவரது மற்றைய விரல்கள் தப்பியது.
இந்த விபரங்களையெல்லாம் மனநல நிபுணர் கிரைக்பிரின்ஸ் தனது ஆய்வுக் கட்டுரையில் வெளியிட்ட போது தான் உலகிற்கே இந்தச் செய்தி தெரியவந்தது.
இந்த விபரங்களையெல்லாம் மனநல நிபுணர் கிரைக்பிரின்ஸ் தனது ஆய்வுக் கட்டுரையில் வெளியிட்ட போது தான் உலகிற்கே இந்தச் செய்தி தெரியவந்தது.
மேலும், கிரைக்பிரின்ஸ் தனது கட்டுரையில் கூடுதல் தகவலாக "இவர் தான் உலகிலேயே முதல் முதலாக தனது உடல் உறுப்பை சாப்பிட்ட மாமிச மனிதன்" என்று குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment