திருச்செந்தூர் தென் பகுதி விவசாயிகள் சங்கம் நெல்லை,தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நான்கு தாலுகாக்களில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருச்செந்தூர் தென்பகுதி விவசாய சங்கத் தலைவர் சத்தியசீலன் தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர் 100 அடி ஆழத்திற்கு சென்றது. அதன் காரணமாக நிலத்தடி நீரில் கடல் நீர் உள்புகுந்து இப்பகுதியில் நூறு சதவீதம் விவசாயம் அழிந்தது.
இதிலிருந்து இப்பகுதி விவசாயத்தை காப்பாற்ற தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி வீணாக கடலுக்கு செல்லும் வெள்ள உபரி நீரை சாத்தான்குளம் பகுதிக்குத் திருப்பித் தரும்படி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஒரு குழு வைத்து ஆய்வு நடத்தியது.
அப்போது தான் சாத்தான்குளம் பகுதியை விட ஸ்ரீவைகுண்டம் அணை 70 பள்ளத்தில் உள்ளது என ஆய்வில் தெரிய வந்தது. இது நடைமுறைக்கு ஒத்து வராத காரியம் என இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டன.
இதனால் மீண்டும் விவசாயிகள் கோரிக்கையின்படி தாமிரபரணி 11 தடுப்பு அணைக்கட்டின் உயரத்தையும் சாத்தான்குளம் பகுதியையும் கணக்கிட்டபோது தாமிரபரணி மூன்றாவது தடுப்பணை கண்ணடியன் அணைக்கட்டு வழியாக கொண்டு வர வழி கிடைத்தது.
இதன்மூலம் அந்த திட்டம் 4 தாலுக்காக்கள் பலன்பெறும் திட்டமாக மாறியது. இத்தனை ஆண்டு கால தாமத்திற்கு பிறகு நடந்து கொண்டிருக்கும் இந்த அற்புதமான திட்டத்தினை 2001 முதல் 2005ம் ஆண்டு வரை நடந்த அரசு தடை செய்தது. இத்திட்டம் 2006 முதல் மீண்டும் தொடரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் நான்கு தாலுகாக்களில் வாழும் 8 லட்சம் மக்கள் பலன் பெற வேண்டிய வீணாக கடலுக்கு போகும் 54 டிஎம்சி உபரி நீரில் 3 டிஎம்சி நீரை மட்டுமே திருப்புவதற்காக மட்டும்தான் கன்னடியன் அணைக்கட்டு முன்பிருந்த அளவிலிருந்து கூடுதலாக ஒரு மீட்டர் உயரத்தில் 515 மீட்டர் நீளத்திற்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உணமை நிலை உணராமல் அணைக்கட்டின் தடுப்புச் சுவரை இடிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . சில அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எனவே இந்த தடுப்பு சுவரை உடைக்க கோரி தொடரப்பட்ட வழக்கிணை திரும்ப பெறகோரியும், வழக்கு போடுவதற்கு சம்மதம் தெரிவித்த அதிகாரிகளை கண்டித்தும், அணைக்கட்டின் நீளத்தினை எக்காரணம் கொண்டு இடிக்க கூடாது என தெரிவித்து சாத்தான்குளம், ராதாபுரம், திசையன்விளை, உடன்குடி, நான்குநேரி பகுதிகளில் அடுத்த மாதம் நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment