நாகர்கோவில் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த முறை எப்படியாவது சட்டசபைக்குள் நுழைந்து விட வேண்டும் என்பதில் பாஜக விடாப்பிடியாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தல்களில் தமிழக சட்டசபை தேர்தல்களில் நுழைய பல்வேறு முயற்சிகளை எடுத்த பாஜக அத்தனை முயற்சிகளும் தோல்வியை தழுவவே இந்தமுறை பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் முதல் இடத்தை பிடித்தது. இந்த வாக்கு சதவிகிதத்தை வைத்து இந்த முறை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. அதற்காக பாஜகவின் மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களை இந்த முறை தேர்தலில் நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது.
நாகர்கோவில் தொகுதியில் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனையும் கன்னியாகுமரி தொகுதியில் நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் மீனா தேவையும் குளச்சல் தொகுதியில் எம்.ஆர்.காந்தியையும் பத்மனாபபுரம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதத்தையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக - காங்கிரஸ் உறவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு சாதகமாக உள்ளதாகக் கருதப்படுகிறது. நாகர்கோவில் தொகுதியில் ஆஸ்டின் அதிமுகவை விட்டு வெளியேறிய பிறகு அந்த கட்சியின் செல்வாக்கு சரிந்தது. நடப்பு திமுக எம்.எல்.ஏ. ராஜன் மக்கள் பிரச்சினைகளில் அதிகமாக தலையிடாததால் அவரது வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆகையால் இந்தமுறை அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளராக ஆஸ்டின் களம் காணுவார் என எதிர்பார்கப்படுகிறது. எப்படியாயினும் இந்த சூழ்நிலை பாஜகவின் வெற்றி வாய்ப்பிற்கு சாதகமாகவே உள்ளது.
இதுபோன்று பத்மனாபபுரம், குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் நாடார்களின் ஓட்டு அப்படியே பாஜகவிற்கு விழ பல்வேறு வியூகங்களை பாஜக மாநில தலைமை வகுத்து வருகிறது. பாஜகவின் வியூகம் வெற்றி பெறுமா என்பதை அறிய மே 13 வரை காத்திருக்க வேண்டும்.

No comments:
Post a Comment